Published:Updated:

டி.சி.எஸ், மைண்ட்ட்ரீ ரிசல்ட் எப்படி? முதலாம் காலாண்டு முடிவுகள்...

காலாண்டு முடிவுகள்...
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்...

Q 1 R E S U L T S

டி.சி.எஸ், மைண்ட்ட்ரீ ரிசல்ட் எப்படி? முதலாம் காலாண்டு முடிவுகள்...

Q 1 R E S U L T S

Published:Updated:
காலாண்டு முடிவுகள்...
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்...

நிறுவனங்கள் ஜூன் காலாண்டு முடிவுகளை கடந்த வாரத்தில் வெளியிட தொடங்கியுள்ளன. இந்தியப் பங்குச் சந்தை தற்போது உச்சபட்ச நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்ற காலாண்டில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையில் நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் சந்தையின் ஏற்றத்தை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வாரம் முடிவுகள் வெளியிட்ட முக்கிய நிறுவனங்கள் சில...

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (Tata Consultancy Services)

இந்தியாவின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் ஜூன் காலாண்டில் 28.5% உயர்ந்து, ரூ.9,008 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் வருடாந்தர அடிப்படையில் ஜூன் காலாண்டில் 18.5% உயர்ந்து, ரூ.45,411 கோடியாக உள்ளது. சென்ற ஜூன் காலாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிதாக 20,049 ஊழியர்களை இந்த நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்துக்குச் சென்ற காலாண்டில் 8.1 பில்லியன் ரூபாய் அளவுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக பி.பி.ஓ துறையில் 350 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் தனியார் துறையில் மிக அதிகபட்சமாக டி.சி.எஸ் நிறுவனம் தன் ஊழியர்களுக்கு மட்டுமன்றி அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சேர்த்து கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் பெரும்பாலான ஊழியர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிகளைச் செலுத்தி ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.7 டிவிடெண்ட் வழங்குகிறது.

அவென்யூ சூப்பர் மார்க்கெட் (Avenue Super Market)

முன்னணி ரீடெயில் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் லாபமானது வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 132% உயர்ந்து ரூ.115 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் வருடாந்தர அடிப்படையில் ஜூன் காலாண்டில் 31.3% உயர்ந்து, ரூ.5,031.75 கோடியாக உள்ளது. சென்ற ஜூன் காலாண்டில்4 புதிய சூப்பர் மார்க்கெட்டுகளை இந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த நிறுவனத்துக்கு தற்போது 238 சூப்பர் மார்க்கெட்டுகள் நமது நாட்டில் பல முக்கிய நகரங்களில் உள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக சூப்பர் மார்க்கெட்டு களில் நேரக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்பட்டு கடைகள் இயங்கியதால் சென்ற காலாண்டில் லாபம் சற்று குறைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித் துள்ளது.

டி.சி.எஸ், மைண்ட்ட்ரீ ரிசல்ட் எப்படி? முதலாம் காலாண்டு முடிவுகள்...

பன்சாலி இன்ஜினீயரிங் பாலிமர் லிமிடெட் (BEPL)

பாலிமர் தயாரிப்பில் முக்கிய தனியார் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 60% குறைந்து, ரூ.77.38 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானமும் வருடாந்தர அடிப்படையில் 59% குறைந்து, ரூ.236.79 கோடியாக உள்ளது.

டெல்டா கார்ப் (Delta Corp)

கேசினோ விளையாட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளை கொண்ட விருந்தோம்பல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு ஜூன் காலாண்டில் ரூபாய் 28.93 கோடியாக உள்ளது. நிகர இழப்பு சென்ற ஆண்டில் ரூ.28.24 கோடி யாக இருந்தது. நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் ஜூன் காலாண்டில் 34.92% உயர்ந்து,ரூ.82.72 கோடியாக உள்ளது. கோவா மாநிலத்தில் உள்ள பனாஜியில் இந்த நிறுவனத்தின் கேசினோ ஊரடங்கு காரணமாக சென்ற காலாண்டில் பெரும் பாலும் மூடப்பட்டிருந்தது. மேலும், விருந்தோம்பல் துறை ஊரடங்கு காரணமாக மிகப் பெரிய பாதிப்புகளைச் சந்தித்து உள்ளதால் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.

மைண்ட்ட்ரீ (Mind Tree)

முன்னணித் தகவல் தொழில் நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற மார்ச் காலாண்டுடன் ஒப்பிட்டால் கடந்த ஜூன் காலாண்டில் 8.6% உயர்ந்து, ரூ.343 கோடியாக உள்ளது. நிறுவனத் தின் நிகர வருமானமும் ஜூன் காலாண்டில் 8.6% உயர்ந்து,ரூ.2,291.7 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்துக்குச் சென்ற காலாண்டில் முன் எப்போதும் இல்லாத அளவாகப் புதிதாக 504 கோடி ரூபாய் அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. நிறுவனத்தின் எபிட்டாவும் சென்ற காலாண் டில் 20.3% உயர்ந்துள்ளது. சென்ற காலாண்டில் புதிதாக 3,442 ஊழியர்களை நிறுவனம் பணி அமர்த்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பல சந்தை வல்லுநர் களின் கணிப்பை விட அதிகமான லாபத்தைக் கொண்டுள்ளது.

டாடா மெட்டாலிக்ஸ் (Tata Metaliks)

பைப் உற்பத்தியில் டாடா குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.606.4 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.94.72 கோடியாக உள்ளது.

ஷியாம் மெட்டாலிக்ஸ் (Shyam Metaliks)

கொல்கத்தாவை தலைமையிட மாகக் கொண்ட மெட்டல் துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் கடந்த ஜூன் காலாண்டில் 116.9% உயர்ந்து, ரூ.2,350 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபமும் கடந்த ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 387.5% உயர்ந்து, ரூ.386.02 கோடியாக உள்ளது.

நிறுவனத்தின் எபிட்டாவும் 231.29% உயர்ந்து, ரூ.636.02 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் இ.பி.எஸ் ரூ.3.42 என்ற கடந்த ஆண்டு அளவிலிருந்து மூன்று மடங்கு உயர்ந்து, ரூ.11.6 ரூபாயாக உள்ளது.

ஹெச்.எஃப்.சி.எல் (HFCL)

டெலிகாம் துறையில் ஆப்டிகல் பைபர் கேபிள்கள் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.1,212.16 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 3% உயர்ந்து, ரூ. 87.83 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் இ.பி.எஸ் 3 சதவிகிதம் உயர்ந்து, 6.08 ரூபாயாக உள்ளது.

தொகுப்பு: எஸ்.பிரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism