Published:Updated:

அரபிந்தோ பார்மா, டாடா ஸ்டீல்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள்

அரபிந்தோ பார்மா, டாடா ஸ்டீல்... ரிசல்ட் எப்படி..?

கம்பெனிகளின் காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

பங்கு நிறுவனங்கள் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. முடிவுகள் வெளியான நிறுவனங்கள் குறித்து சிலவற்றை இங்கே பார்ப்போம்.

டாடா ஸ்டீல் (Tata Steel)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 122.71% உயர்ந்து, ரூ.20,798 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 468.17% உயர்ந்து, ரூ.6,780 கோடியாக உள்ளது.

ஸ்டீல் துறை பங்குகள் நல்ல ஏற்றத்தைத் தந்து வருகின்றன. ஸ்டீல் உற்பத்தியில் முன்னணி நிறுவனமான டாடா ஸ்டீல், கடந்த ஓராண்டுக் காலத்தில் ஐந்து மடங்குக்கு மேல் லாபத்தைத் தந்துள்ளது. காலாண்டு முடிவுகள் சிறப்பாக இருப்பதால், பங்கு தொடர்ந்து ஏற்றம் காணும் என்று பல முன்னணித் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அரபிந்தோ பார்மா, டாடா ஸ்டீல்...
ரிசல்ட் எப்படி..?

லூபின் (Lupin)

முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 21% உயர்ந்து, ரூ.4,270 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 407.45% உயர்ந்து, ரூ.542.4 கோடியாக உள்ளது. பார்மா துறை பங்குகள் கடந்த ஓராண்டில் நல்ல ஏற்றம் கண்டன. ஆனால், சென்ற காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, பல பார்மா துறை பங்குகள் இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. டாக்டர் ரெட்டீஸ், சிப்லா நிறுவன பங்குகளைத் தொடர்ந்து லூபின் நிறுவனமும் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 10% மேல் குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் (Power Grid Corporation)

அரசு துறை சார்ந்த மின்சார உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 8% உயர்ந்து, ரூ.10,216.48 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 192.82% உயர்ந்து, ரூ.5,998.28 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கு ஒன்றின் இ.பி.எஸ் ரூ.3.92 என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து ரூ.8.6-ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்திடம் கணிசமான அளவுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையிருப்பில் உள்ளன. கொரோனா நோய்த் தொற்று குறைந்துவரும் காரணத்தால் வருங்காலத்தில் லாப விகிதம் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணப்புரம் ஃபைனான்ஸ் (Manapuram Finance)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 3.36% உயர்ந்து, ரூ.1,563 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 26% உயர்ந்து, ரூ.417 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கு ஒன்றின் இ.பி.எஸ் ரூ.4.35 என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து ரூ.5.16-ஆக உயர்ந்துள்ளது. காலாண்டு முடிவு வெளிவந்த பிறகு, இந்த நிறுவனப் பங்கின் விலை 16% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

மதர்சன் சுமி (Motherson Sumi)

ஆட்டோமொபைல் உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் இரண்டு மடங்கு உயர்ந்து, ரூ.16,157 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படை யில் 135.74% உயர்ந்து, ரூ.289.63 கோடியாக உள்ளது.

ஆட்டோமொபைல் துறை நிறுவனங்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக உற்பத்தி பாதிப்பு, தயாரிப்பு பொருள்களின் விலை அதிகரிப்பு, தேவையான சிப்புகள் குறைவாக இருப்பது போன்ற பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இவை அனைத்தையும் மீறி நிறுவனம் நல்ல லாபத்தைத் தந்துள்ளதால், பல சந்தை வல்லுநர்கள் நீண்ட கால நோக்கில் இந்த நிறுவனப் பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அரபிந்தோ பார்மா, டாடா ஸ்டீல்...
ரிசல்ட் எப்படி..?

ஹீரோ மோட்டார்கார்ப் (Hero Motorcorp)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 84.65% உயர்ந்து, ரூ.5,487 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 496% உயர்ந்து, ரூ.365.44 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்குகள் விலை கடந்த மூன்று மாதங்களாக கணிசமாகக் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. இந்த விலை வீழ்ச்சியைப் பயன்படுத்தி நீண்ட கால நோக்கில் முன்னணி நிறுவனமான இதன் பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம் என்று பல சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரபிந்தோ பார்மா (Aurobindho Pharma)

முன்னணி பார்மா துறை நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 15.38% குறைந்து, ரூ.2,893.75 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 69.91% குறைந்து, ரூ.215.07 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு இந்த நிறுவன பங்குகள் விலை 20% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது.

வாடெக் வபாக் (VaTech Wabag)

சென்னையைத் தலைமையிட மாகக் கொண்ட தண்ணீர் சுத்திகரிப்பு செய்யும் நிறுவனமான இதன் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 52.71% உயர்ந்து, ரூ.658 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 172.94% உயர்ந்து, ரூ.15.23 கோடியாக உள்ளது.

இந்த நிறுவனத்திடம் தற்போது அதன் ஆண்டு வருமானத்தை விட நான்கு மடங்கு அதிகமான ஒப்பந்தங்கள் கையிருப்பில் உள்ளன. அதனால் வருங்காலத் தில் நிறுவனத்தின் லாப விகிதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ஓ.என்.ஜி.சி (ONGC)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 71.6% உயர்ந்து, ரூ.1,09,301 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் ஏழு மடங்கு உயர்ந்து ரூ. 6,846 கோடியாக உள்ளது.

பெட்ரோநெட் எல்.என்.ஜி (Petronet LNG)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 2% உயர்ந்து, ரூ. 635.6 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் 13.5% உயர்ந்து, ரூ.8,598 கோடியாக உள்ளது.

கோத்ரேஜ் அக்ரோவெட் (Godrej Agrovet)

விவசாயம், பனை எண்ணெய் தயாரிப்பில் கோத்ரேஜ் குழுமத்தைச் சேர்ந்த முன்னணி நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற ஜூன் காலாண்டில் 28.22% உயர்ந்து, ரூ.1,992.78 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்தர அடிப்படையில் 19.74% உயர்ந்து, ரூ.105.98 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கு ஒன்றின் இ.பி.எஸ் ரூ.4.6 என்ற சென்ற ஆண்டின் அளவிலிருந்து ரூ.5.52-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் எபிட்டா சென்ற காலாண்டில் 3.31% உயர்ந்து, ரூ.179.97 கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism