Published:Updated:

மைண்ட்ட்ரீ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

மைண்ட்ட்ரீ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்

Published:Updated:
காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
காலாண்டு முடிவுகள்

நிறுவனங்கள் ஜூன் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. சென்ற வாரம் காலாண்டு முடிவுகள் வெளியிட்ட சில முன்னணி நிறுவனங்களைப் பார்ப்போம்.

ஏசிசி (ACC)

முன்னணி சிமென்ட் தயாரிக்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 60% குறைந்து, ரூ.227 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 15% அதிகரித்து, ரூ.4,468 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் சென்ற காலாண்டில் பல சந்தை வல்லுநர் களின் கணிப்பைவிட குறைவான லாபத்தை அடைந்துள்ளது. சிமென்ட் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களின் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை லாப விகிதத்தில் பாதிப்பை ஏற்படுத் தியுள்ளது. என்றாலும் இந்த நிறுவனத்தின் 26% பங்குகளை அதானி குழுமம் வாங்க இருப்பது இந்த நிறுவனத்துக்கு சாதகமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. கச்சா எண்ணெய் தற்போது சற்றுக் குறைந்து உள்ளதால் வரும் காலத்தில் இந்த நிறுவனம் மேலும் சிறப்பாகச் செயல்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மைண்ட்ட்ரீ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி... ரிசல்ட் எப்படி..?

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் (ICICI Prudential Life Insurance)

முன்னணி தனியார் துறை ஆயுள் காப்பீடு வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 2.53% அதிகரித்து, ரூ.312 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்துக்கு காப்பீட்டு பிரீமியம் மூலம் கிடைக்கும் வருமானம் 1.5% அதிகரித்து, ரூ.9,074 கோடியாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று குறைந்து உள்ளதால் சென்ற காலாண்டில் க்ளெய்ம் விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைண்ட்ட்ரீ (Mind Tree)

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 37% அதிகரித்து, ரூ.472 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் வருமானமும் 36% அதிகரித்து, ரூ.3,121 கோடியாக உள்ளது. புதிய ஒப்பந்தங்கள் மிக அதிக அளவில் சென்ற காலாண்டில் பதிவாகியுள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இது வருங்காலத்தில் நிறுவனத் தின் லாப விகிதத்தை அதிகரிக்க பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா எலெக்சி (Tata Elxsi)

தகவல் தொழில்நுட்ப பிரிவில் டிஜிட்டல் சேவைகள் வழங்கும் டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 30% அதிகரித்து, ரூ.726 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 15.4% அதிகரித்து, ரூ.185 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் முதல் முறையாக நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக நிறுவன தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் புதிய அலுவலகக் கிளை திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank)

இந்த வங்கியின் நிகர லாபம் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பையொட்டி ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 19% அதிகரித்து, ரூ.9,196 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 14.51% அதிகரித்து, ரூ.17,009 கோடியாக உள்ளது. சமீபத்தில் மத்திய ரிசர்வ் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய இரண்டு பெரிய நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த இணைப் புக்குப் பிறகு, இந்த வங்கியின் துணை நிறுவனங்களான ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட் டீஸ் மற்றும் வங்கி அல்லாத சேவைகள் வழங்கும் ஹெச்.டி.பி ஃபைனான்ஷியல் சர்வீசஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் புதிய பங்கு மூலதன வெளியீட்டை மேற்கொள்ள இருப்பதாக வங்கித் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் ஒரு பங்குக்கு ரூ.15.5 டிவிடெண்ட் வழங்க இருக்கிறது.

எல் & டி இன்ஃபோடெக் (L&T Infotech)

முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர லாபம் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 28% அதிகரித்து, ரூ.634 கோடியாக உள்ளது. நிகர வருமானம் சென்ற ஆண்டின் அளவான ரூ.3,463 கோடி என்ற அளவில் இருந்து ரூ.4,523 கோடி யாக அதிகரித்துள்ளது.

சக்தி பம்ப்ஸ் (Sakthi Pumps)

மோட்டார் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 63% அதிகரித்து, ரூ.255 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 71% அதிகரித்து, ரூ.7.45 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் இ.பி.எஸ் சென்ற ஆண்டின் அளவான ரூ.2.37 என்ற அளவில் இருந்து ரூ.4.05 ஆக அதிகரித்துள்ளது.

ஃபெடரல் பேங்க் (Federal Bank)

கேரளாவை தலைமை யிடமாகக் கொண்ட முன்னணி தனியார் துறை வங்கி இது. இந்த வங்கியின் நிகர லாபம் ஜூன் காலாண் டில் வருடாந்தர அடிப்படை யில் 64% அதிகரித்து, ரூ.601 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 8.14% அதிகரித்து, ரூ.3,629 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் வாராக் கடன் அளவு கணிசமாகக் குறைந்ததால் வாராக் கடன் களுக்கான வைப்புத் தொகை குறைந்தது; இது லாப விகிதத்தை அதிகரிக்க உதவி யுள்ளது. காலாண்டு முடிவு களுக்குப் பிறகு, இந்த வங்கி யின் பங்கு விலை வரும் காலத்தில் கணிசமாக உயரும் என்று பல முன்னணி தரகு நிறுவனங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

மைண்ட்ட்ரீ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி... ரிசல்ட் எப்படி..?

ஹெச்டிஎஃப்சி லைஃப் (HDFC Life)

முன்னணி தனியார்துறை ஆயுள் காப்பீடு வழங்கும் நிறுவனம் இது. இந்த நிறுவனத் தின் லாபம் ஜூன் காலாண் டில் வருடாந்தர அடிப்படை யில் 21% அதிகரித்து, ரூ.365 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் புதிய காப்பீடுகளின் வருமானம் 26.8% அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு விலை தற்போது அதன் உச்ச விலையைவிட 25% வரை குறைந்து வர்த்தகமாகி வருகிறது. ஆயுள் காப்பீடுகளின் சந்தை மதிப்பு வரும் காலத்தில் மேலும் உயரும் என்பதால் எஸ்.ஐ.பி முறையில் வலுவான இந்த பங்கை வாங்கிச் சேர்க்கலாம் என்று பல சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹிந்துஸ்தான் யுனிலீவர் (Hindustan Unilever)

முன்னணி எஃப்.எம்.சி.ஜி துறை சார்ந்த நிறுவனம் இது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் பல சந்தை வல்லுநர்களின் கணிப்பைவிட சிறப்பாக ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 11% அதிகரித்து, ரூ.2,289 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 19.48% அதிகரித்து, ரூ.14,016 கோடியாக உள்ளது. பங்குச் சந்தை கடந்த 6 மாதங்களாக கடுமையான சரிவை சந்தித்த போதும் பெரும்பாலான எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் நல்ல லாபத்தை அளித்துள்ளன. சரியும் சந்தைக் காலங்களில் தற்காப்பு பங்குகள் என்று அறியப்படும் இந்தத் துறையில் உள்ள முன்னணி நிறுவனமான இந்த நிறுவனத்தின் பங்குகளை எப்போதும் ஒருவரின் போர்ட்ஃபோலியோவில் வைத்திருப்பது சந்தை ஏற்ற இறக்கங்களில் கைகொடுக்கும் என்பது இதன் மூலம் மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (Bharath Electronics)

முன்னணி பொது துறை சார்ந்த நவரத்தினா நிறுவனமான இதன் நிகர லாபம் ஜூன் காலாண்டில் வருடாந்தர அடிப்படை யில் 40 மடங்கு உயர்ந்து, ரூ.432 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் இரண்டு மடங்கு உயர்ந்து, ரூ.3,064 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்துக்கு தற்போது ரூ.55,333 கோடி ரூபாய் அளவுக்கு ஒப்பந்தங்கள் கையிருப்பில் உள்ளது. சிறப்பான காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவனத்தின் பங்கு விலை 7% வரை அதிகரித்து, அதன் 52 வார உச்ச விலையில் தற்போது வர்த்தகமாகி வருகிறது.

தொகுப்பு: பிரமேஷ்