மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ரிசர்ச்!

ஃபண்ட் ரிசர்ச்!
ஃபண்ட் ரிசர்ச்!

சில ஃபண்டுகள் தலைமை அதிகாரி இருக்கும்போது நன்றாகச் செயல்படும். இன்னும் சில ஃபண்டுகள் தலைமை அதிகாரி இல்லாதபோதும் நன்றாகச் செயல்படும். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு யூ.டி.ஐ. நிறுவனம்.

ஃபண்ட் ரிசர்ச்!

தற்கு இரண்டு காரணங்கள் உண்டு - ஒன்று யூ.டி.ஐ, அனூப் பாஸ்கர், ஸ்வாதி குல்கர்னி போன்ற நல்ல ஃபண்ட் மேனேஜர்களை கொண்டுள்ளது. மற்றொன்று டி.ரோவ் பிரைஸ் என்ற அமெரிக்க ஃபண்ட் நிர்வகிக்கும் நிறுவனம் 26% பங்குகளை யூ.டி.ஐ-யில் கொண்டுள்ளது ஆகும்.

1992-ல் யூ.டி.ஐ மாஸ்டர் கெயின்-92 என்று ஆரம்பிக்கப் பட்டதுதான் இந்த யூ.டி.ஐ ஈக்விட்டி ஃபண்ட் ஆக மாறியிருக்கிறது. என்.எஃப்.ஓ. வந்தபோது மூன்றாவது அதிகமான தொகையை திரட்டிய (ரூ.4,472 கோடி) பெருமை இதற்கு உண்டு. ஆரம்பித்தபோது குளோஸ் எண்டட் திட்டமாக இருந்தது, 1997-ல் ஓப்பன் எண்டட் திட்டமாக மாற்றப்பட்டு, 2005-ல் பெயர் மாற்றப் பட்டது.

ஃபண்ட் ரிசர்ச்!

இந்த ஃபண்டின் தற்போதைய மேனேஜர் அனூப் பாஸ்கர் ஆவார். இவரே பங்கு சார்ந்த முதலீடுகளின் தலைமை முதலீட்டு அலுவலரும் ஆவார். இந்த ஃபண்ட் தொடங்கி இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இதன் செயல்பாடு, அனூப் பாஸ்கர் இதன் ஃபண்ட் மேனேஜராக ஆனதிலிருந்து (கடந்த ஐந்து வருடங்களாக) நன்றாக இருந்து வருகிறது. இதே ஃபண்ட் மேனேஜர் நிர்வகிக்கும் யூ.டி.ஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டைப் பற்றி ஏற்கெனவே பார்த்துள்ளோம்.

கடந்த 1/2/3/5 ஆண்டு செயல்பாட்டினைப் பார்க்கும் போது ஹெச்.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்டைவிட சற்று நன்றாகச் செயல்பட்டுள்ளது. உறுதியான தளத்துடன், புதிய ரத்த ஓட்டத்தைத் தேடுபவர் களுக்கு இது ஒரு நல்ல ஃபண்ட் எனலாம்.

எஃப்.எம்.சி.ஜி., ஹெல்த்கேர், கன்ஸ்ட்ரக்ஷன், ஆட்டோ மொபைல் போன்ற துறைகளில் ஓவர் வெயிட்டாகவும், ஃபைனான்ஷியல், எனர்ஜி, டெக்னாலஜி போன்ற துறை களில் அண்டர் வெயிட்டாகவும் இந்த ஃபண்ட் உள்ளது. போர்ட்ஃபோலியோவில் எந்த ஒரு பங்கும் 6%-க்கு மேல் செல்வதில்லை. அதேபோல், ஒரு துறையில் 25%-க்கு மேல் முதலீடு செய்வதில்லை என்ற கொள்கையை கொண்டுள்ளது. இதன் டாப் 10 ஹோல்டிங்ஸ் போர்ட்ஃபோலியோவில் 40%  இடத்தைப் பிடித்துள்ளது. பி.எஸ்.இ - 100 குறியீட்டை தனது பெஞ்ச்மார்க்காக கொண்டுள்ளது.

ஃபண்ட் ரிசர்ச்!

தற்போது ரூ.1,942 கோடியை நிர்வகித்து வருகிறது. ஐ.டி.சி, டி.சி.எஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், சன் பார்மா, ஹெச்.டி.எஃப்.சி. பேங்க் போன்றவை இதன் டாப் 5 ஹோல்டிங்ஸ் ஆக உள்ளன.

அனூப் பாஸ்கர் ஓரிரண்டு ஆண்டுகள் முன்புவரை கேஷ் லெவலை அதிகமாக ஏற்றி இறக்கியது உண்டு. ஆனால், தற்போது நிறுவன கொள்கை கேஷ் லெவல் 10%-ற்கு மேல் செல்ல அனுமதிப்பதில்லை. நீண்டகால நோக்கில் இது நன்மை பயக்கும்.

கடந்த காலத்தில் (2008-ற்கு முன்) இந்த ஃபண்டின் செயல்பாடு ஏற்ற இறக்கமாக இருந்த போதிலும், 2008-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிஃப்டி 50-ஐவிட அதிக வருமானம் தந்துள்ளது. மேலும், ஹெச்.டி.எஃப்.சி., டி.எஸ்.பி-பிஆர்., ஃபிராங்க்ளின் போன்ற நல்ல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களைப் போன்று, யூ.டி.ஐ-யிலும் கடந்த ஐந்து வருடங்களாக ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீம் நிலையாக இருந்து வருகிறது. நல்ல ஃபண்ட் மேனேஜ்மென்ட் டீமின் நிரந்தரத்தன்மை முதலீட்டாளர்களுக்கு அவசியமான ஒன்றாகும்.

ஃபண்ட் ரிசர்ச்!

ஓய்வுக்காலம், குழந்தைகள் நலன் போன்றவற்றுக்காக முதலீடு செய்ய நினைப்பவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப் பவர்கள் போன்ற அனைவரும் இத்திட்டத்தில் எஸ்.ஐ.பி. மூலம் தாராளமாக முதலீடு செய்யலாம். பங்குச் சந்தை சரிவுகளை ஒட்டி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம். டி.ரோவ் பிரைஸ் நிறுவனம், யூ.டி.ஐ. நிறுவனத்தின் இன்னும் அதிகமான பங்குகளை வாங்கும் பட்சத்தில், முதலீட்டாளர்கள் அந்நிறுவனத்தின் நல்ல நிர்வாகத் திறமை மற்றும் ஃபண்ட் மேனேஜ்மென்ட் தேர்ச்சியினால் இன்னும் பலன் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. சமீப காலமாக நன்றாகச் செயல்பட்டு வரும் இந்த ஃபண்டிற்கு நமது  மதிப்பெண்கள் 80/100.

ஃபண்ட் ரிசர்ச்!

(ரிசர்ச் நிறைவு பெற்றது)