மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

திடீர் ஏற்றம் தொடரும்!

திடீர் ஏற்றம் தொடரும்!

திடீர் ஏற்றம் தொடரும்!

கடந்த வாரம் வியாழக்கிழமை வரை சந்தையின் போக்கு எப்படிச் செல்லும் என்று தெரியாமல் பலரையும் கவலைகொள்ள வைத்தது. ஆனால், வெள்ளிக்கிழமை அன்று சென்செக்ஸ் 439  புள்ளிகள் உயர்ந்து, எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி தந்து திக்குமுக்காட வைத்தது. ஐரோப்பிய கடன் பிரச்னையைத் தீர்க்க புதிய வழி பிறந்ததாகச் செய்தி வந்தது ஒருபக்கம், நிதி அமைச்சர் பதவியில் இருந்து பிரணாப் விலகி மன்மோகன் அந்த பொறுப்பை ஏற்றது இன்னொரு பக்கம் என சில நம்பிக்கை வெளிச்சம் தெரிந்ததைத் தொடர்ந்து நம் சந்தையும் ஒரே மூச்சில் எகிறியது.

##~##
ந்நிலையில் அடுத்த வாரத்தில் சந்தை எப்படி இருக்கும் என மும்பை யில் இருக்கும் பங்குச் சந்தை ஆலோசகர் விக்னேஷிடம் கேட்டோம்.

''வெள்ளிக்கிழமை சந்தை உயர்ந்ததற்கு முக்கியமான காரணம், ஐரோப்பிய நாடு களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டதுதான். இது தொடர்பாக கடந்த சில மாதங்களாகவே எந்த ஒரு சுமூக முடிவுக்கும் வராமல் இருந்த ஜெர்மனி, சுமார் 13 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு சில படிகள் இறங்கி வந்திருப்பது பாசிட்டிவ்வான அம்சம் என்பதால் சந்தை உயர்ந்தது.

ஆனால், இதையே ஒரு தீர்வாக நினைக்க முடியாது. நெருக்கடியான சூழலில் எடுக்கப்பட்ட ஒரு தற்காலிக முடிவுதான். இதிலிருந்து இன்னும் பல படிகள் முன்னேற வேண்டியிருக்கிறது. செலவு செய்தால்தான் வளர்ச்சி அடைய முடியும். செலவு செய்ய பணம் வேண்டும். இதற்கு கடன் வாங்க வேண்டும். இல்லை எனில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்தது போல பணத்தை அச்சடிக்க வேண்டும். ஆனால், யூரோ நாணயத்தை புதிதாக அச்சடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மேலும், பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிட்டத்தட்ட பாதிக்குமேல் இருக்கிறார்கள். என்ன ஊக்கம் தந்தாலும் செலவு மட்டும் தான் ஆகிறதே தவிர, வரவு எதுவும் இல்லை.

திடீர் ஏற்றம் தொடரும்!

ஆனால், அவர்கள் பாசிட்டிவ் ஆன ஒரு திசையை நோக்கி அடியெடுத்து வைத்ததையே பெரிய விஷயமாகப் பார்க்கிறது உலகம். அதாவது, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா போல யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் யூரோப் அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது. இது எளிதான காரியமும் அல்ல என்றாலும் நடக்க முடியாத காரியமும் அல்ல.

இதன் காரணமாக நிஃப்டி 5500 புள்ளிகளில் இருந்து 5600 புள்ளிகள் வரை செல்லக்கூடும். அதன்பிறகு ஒரு சிறிய சரிவு வரலாம். இதற்கு மேலும் நாம் சந்திக்க வேண்டிய இழப்புகள், கெட்ட செய்திகள் பெரிதாக எதுவும் இல்லை. இனி நல்ல செய்திகள் வருவதற்கே வாய்ப்புகள் அதிகம். அதனால் முதலீட்டாளர்கள் தரமான பங்குகள் விலை இறங்கும்போது அவற்றை வாங்கி சேர்க்கலாம்.  

கடந்த பத்து வருடங்களில் நமது இண்டெக்ஸ் சுமார் ஐந்து மடங்கு வளர்ந்திருக்கிறது. ஆனால், மற்ற வளர்ந்த நாடுகளில் இண்டெக்ஸ் சுமார் 35 சதவிகிதம்தான் உயர்ந் திருக்கிறது. இது கன்ஸாலிடேஷனுக் கான நேரம். அதாவது, மூச்சு வாங்குவதற்கான நேரம். இந்த நிலைமை இன்னும் சில மாதங்களுக்கு தொடரலாம்'' என்றார்.

இதுகுறித்து மேலும் சில விஷயங்களை தெரிந்துகொள்ள டெக்னிக்கல் அனலிஸ்ட் ரெஜி தாமஸிடம் பேசினோம்.

''நிதி அமைச்சர் பொறுப்பை மன்மோகன் தன் கையிலே வைத்தி ருப்பது முதலீட்டாளர்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, கொள்கை முடிவுகளில் மாற்றங்கள், புதிய அறிவிப்புகளை சந்தை எதிர்பார்த் திருப்பதும் ஒரு காரணம். மேலும், மார்கன் ஸ்டேன்லி இந்தியாவை அண்டர்வெயிட் என்னும் நிலையிலிருந்து ஈக்குவல் வெயிட் என்ற நிலைக்கு தகுதி ஏற்றம் செய்திருக்கிறது.

இது இல்லாமல் டெக்னிக்கலா கவும் சந்தை கொஞ்சம் 'புல்லிஷ்’-ஆக இருக்கிறது. 5350 புள்ளிகள் வரை செல்லலாம். இப்போதைய அதிகபட்ச சப்போர்ட் என்றால் 5095 என்ற புள்ளிகளுக்கு கீழே செல்ல வாய்ப்பு இல்லை'' என்றார்.

தண்ணீரில் தத்தளிப்பவர்களுக்கு ஒரு 'சிறிய’ தக்கை கிடைத்திருக்கிறது. பயன்படுத்த நினைப்பவர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம்.

- வா.கார்த்திகேயன்