மியூச்சுவல் ஃபண்ட்
Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

என்.பி.சி.சி. உள்ளிட்ட சில பங்குகள் நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து லாபத்துடன் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருந்தேன். அதேபோல என்.பி.சி.சி. பங்கு கடந்த திங்கட்கிழமை லாபத்துடன் வெளியே சென்றது. இப்போதைக்கு 18 பங்குகள் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கிறது. இன்னும் இரண்டு இடங்கள் காலியாக இருக்கிறது. அந்த இரண்டு இடங்களையும் நாம் நிரப்பிவிடுவோம்.

போர்ட்ஃபோலியோ எப்படி இருக்கிறது?

கடந்த வாரத்தில் சந்தை உயர்ந்த வேகத்தில் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளும் உயர்ந்தது. சில பங்குகள் (என்.எம்.டி.சி., எம்.ஓ.ஐ.எல்., மஹிந்திரா ஹாலிடே, ராலிஸ் இந்தியா, டிஷ் டிவி) இலக்கு விலையை நெருங்கி வர்த்தகமானது, ஆனால், அதை அடைய முடியவில்லை. வரும் வாரத் தில் இந்த பங்குகளில் குறைந்தபட்சம் இரண்டு பங்குகளாவது நம்முடைய இலக்கு விலையை அடைய வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!


சந்தை எப்படி?

##~##
ஃபண்டமென்டலாகவும் சரி, டெக்னிக்கலாகவும் சரி சந்தையில் ஒரு சிறிய ஏற்றம் வர வாய்ப்பு இருக்கிறது. மன்மோகன் சிங் இரண்டாம் முறையாக நிதி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டது முதலீட்டாளர்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போதைய நிலையில் இருந்து நிஃப்டி 150 புள்ளிகள் உயர வாய்ப்பு இருக்கிறது.

இந்த ஏற்றத்தை பயன்படுத்திக் கொள்ளும் விதமாகத்தான் இந்த முறை இரண்டு பங்குகளில் முதலீடு செய்யப் போகிறோம். இப்போதைக்கு லார்ஜ்கேப் பங்குகளைவிட மிட்கேப் பங்குகள்தான் அதிகமாக உயர தொடங்கி இருக்கிறது. நமது போர்ட்ஃபோலியோவிலும் மிட்கேப் பங்குகள் அதிகமாக இருப்பதால் நல்ல ஏற்றம் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!


என்ன செய்ய வேண்டும்?

ஏற்றம் இருக்க வாய்ப்பு இருப்பதால், நாம் முதலீடு செய்திருக்கும் பங்குகளின் இலக்கு விலையை கவனமாக நினைவில் வைத்துக்கொண்டு லாபத்தை புக் செய்யுங்கள். இரண்டாவது டாடா காபி மற்றும் கும்மின்ஸ் இந்தியா ஆகிய இரண்டு பங்குகளையும் பரிந்துரை விலையில் வாங்க வேண்டும். நமது விதிமுறைப்படி ஒரு பங்கில் 2,500 ரூபாய்தான் முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால், டாடா காபி பங்கு 930 ரூபாய்க்கு மேல் இருப்பதால் 2,500 ரூபாய்க்கு இரண்டு பங்குதான் வாங்க முடியும். அதனால் 2,500 ரூபாய் என்ற விதிமுறையை இந்த முறை மட்டும் தளர்த்தி கொண்டு 3 பங்குகளை வாங்குங்கள். இந்த வாரம் நமது போர்ட்ஃபோலியோ நிறைய மாறுதல்களை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

-தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!