பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கிளினிக்!
##~##
நான் 2010 செப்டம்பர் தொடங்கி மாதம் 2,000 ரூபாய் வீதம் ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி பிளான், டி.எஸ்.பி. பி.ஆர். டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட், சுந்தரம் செலக்ட் மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகள் அப்போது ரேங்க்-1 ஃபண்டுகளாக இருந்தன. ஆனால், சுந்தரம் செலக்ட் மிட்கேப் எதிர்பார்த்த வருமானத்தைத் தரவில்லை என்பதால் அதில் முதலீடு செய்வதை நிறுத்திவிட்டு, எஸ்.பி.ஐ. கோல்டு ஃபண்டில் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா அல்லது ஒவ்வொரு மாதமும் ரேங்க்-1-ல் இருக்கும் ஃபண்டுகளில் பணத்தைப் போடலாமா?

சுதாகர், மதுரை.

''அன்புள்ள சுதாகர்,

உங்கள் கேள்விக்கு நாம் ஏற்கெனவே நேரடியாக பதில் சொல்லாவிட்டாலும், வேறு விதமாக பதில் சொல்லியே இருக்கிறோம். ஒரு ஃபண்ட் குறைந்த வருமானம் தருவதாக நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்பது தெரியவில்லை. எஸ்.ஐ.பி. முதலீட்டு முறையில் முதலீடு செய்யும்போது பெருவாரியான ரிஸ்க் குறைந்துவிடும். நீங்கள் துவங்கியதிலிருந்து (ஜூலை 01, 2010 - ஆகஸ்ட் 01, 2012) உள்ள எஸ்.ஐ.பி. ரிட்டர்ன்ஸை (ஆகஸ்ட் 03, 2012 நிலைமையில்) கீழே கொடுத்துள்ளேன்.

ஃபண்ட் கிளினிக்!

நீங்கள் முதலீடு செய்துள்ள மூன்று திட்டங்களையும் மிகவும் பாப்புலரான நிஃப்டி இ.டி.எஃப். உடன் ஒப்பிட்டுள்ளேன். அந்த மூன்று திட்டங்களும் நிஃப்டி குறியீட்டைவிட நன்றாகவே செயல்பட்டுள்ளன. ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி திட்டம் மூன்று திட்டங்களிலுமே மிக நன்றாகச் செயல்பட்டுள்ளது.

ஃபண்ட் கிளினிக்!

இனி உங்கள் கேள்விக்கு வருவோம். ஒவ்வொருத் திட்டமும் ஒவ்வொரு காலங்களில் மிக வேகமாகச் செயல்படும். சில மெதுவாகச் செயல்படும். முதலீட்டாளராகிய நாம் பார்க்க வேண்டியது மிக அதிகமான காலகட்டங்களில் நாம் முதலீடு செய்யும் திட்டம் சந்தை குறியீடுகளான நிஃப்டி 50 அல்லது சென்செக்ஸைவிட நன்றாகச் செயல்பட்டுள்ளதா என்பதைத்தான். இதைத்தான் ஆங்கிலத்தில் 'கன்ஸிஸ்டன்ட் பெர்ஃபார்மன்ஸ்’ என்கிறோம். இந்த கன்ஸிஸ்டன்ஸி உள்ள ஃபண்டுகளை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

நீங்கள் இப்போது முதலீடு செய்யும் திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வரலாம். அவை இரண்டும் (ஐ.டி.எஃ.சி. பிரீமியர் ஈக்விட்டி மற்றும் டி.எஸ்.பி-பி.ஆர். டாப் 100 ஈக்விட்டி) நன்றாக கன்ஸிஸ்டன்ஸியுடன் செயல்பட்டு வரும் திட்டங்கள். கோல்டு திட்டங்களை எந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் முதலீடு செய்யலாம். அந்த முதலீட்டைப் பொறுத்தவரை எல்லா நிறுவனங்களின் செயல்பாடும் ஒன்றுபோல்தான் இருக்கும். முதலீட்டை அதிகப்படுத்தும்போது ஹெச்.டி.எஃப்.சி., யூ.டி.ஐ, ஃபிராங்க்ளின், ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நடத்தும் நல்ல திட்டங்கள் ஒன்றில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

நான் பெங்களூருவில் இருக்கும் எம்.என்.சி. நிறுவனத்தில் கன்சல்டன்ட்-ஆக இருக்கிறேன். என் சம்பளம் 75 ஆயிரம் ரூபாய். கனரா ராபிகோ ஈக்விட்டி டாக்ஸ் சேவர் ஃபண்ட், ஃபிடிலிட்டி டாக்ஸ் சேவிங் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் டாக்ஸ் பிளான், ரிலையன்ஸ் டாக்ஸ் சேவர், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ஐ.டி.எஃப்.சி. பிரீமியர் ஈக்விட்டி, எஸ்.பி.ஐ. மேக்னம் கான்ட்ரா ஃபண்டுகளில் பல்வேறு சமயங்களில் முதலீடு செய்திருக்கிறேன். என் கேள்வி என்னவென்றால், எனது இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்கு ஏற்ற மாதிரி ஏதாவது ஒரு ஃபண்டை சொல்லுங்கள். தவிர, மாதத்திற்கு ஒருமுறை 6,000 ரூபாய் என்னால் முதலீடு செய்ய முடியும். அதற்கேற்ற ஃபண்டை சொல்லுங்கள். மேலும், நான் முதலீடு செய்யும் ஃபண்டுகள் சரியாக இருக்கிறதா என்றும் சொல்லுங்கள்.  

நந்தகுமார், பெங்களூரு.

ஃபண்ட் கிளினிக்!

''டியர் நந்தகுமார்,

நீங்கள் வரிச் சேமிப்பிற்காக பல திட்டங்களில் முதலீடு செய்துள்ளீர்கள். இத்திட்டங்கள் அனைத்திற்கும் மூன்று வருடம் லாக்-இன் இருக்கிறது. லாக்-இன் காலம் முடியும்போது அந்தந்த நிறுவனங்கள் நடத்தும் நல்ல ஓப்பன் எண்டட் டைவர்சிஃபைட் ஈக்விட்டி திட்டங்களுக்கு மாறிக்கொள்ளுங்கள். ஒன்றிரண்டு நிறுவனங்களில் நல்ல திட்டங்கள் ஸ்விட்ச் செய்ய கிடைக்காதபோது, அவற்றில் இருந்து வெளியேறி வேறு நல்ல திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

எஸ்.பி.ஐ. மேக்னம் கான்ட்ரா திட்டத்தில் இருந்து வெளியேறிவரும் தொகையை ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளுங்கள். நீங்கள் இன்ஷூரன்ஸ் பிரீமியம் செலுத்துவதற்கு தேவைப்படும் பணத்தைக் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு அல்ட்ரா ஷார்ட் டேர்ம் திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம்: ஹெச்.டி.எஃப்.சி. கேஷ் மேனேஜ்மென்ட் பிளான் - டிரஸரி அட்வான்டேஜ் பிளான் அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ பிளக்ஸி இன்கம் பிளான்.

நீங்கள், மேலும் ரூ.6,000-த்தை எஸ்.ஐ.பி. மூலமாக முதலீடு செய்ய விரும்புகிறீர்கள். அதை யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. பேலன்ஸ்டு ஃபண்ட் என இரண்டு திட்டங்களில் தலா ரூ.3,000 முதலீடு செய்யுங்கள்.

எனக்கு வயது 25. மாதச் சம்பளம் 20,000 ரூபாய். எனது ஓய்வுக் காலத்தில் மாதம் 50,000 ரூபாய் வருவதற்கு நான் எந்தெந்த பண்டுகளில் முதலீடு செய்யலாம்?

மின்னஞ்சல் மூலமாக,

''அன்புள்ள இளம் வாசகரே,

உங்களைப்போல் இளம் வயதிலேயே ஒவ்வொருவரும் ஓய்வுக்காலத்திற்கென திட்டமிட்டுச் சேமிக்க தொடங்கினால், குழந்தைகளை தொந்தரவு செய்யாமல் நிம்மதியாக வாழ்க்கையை கழிக்கலாம். நீங்கள் ஓய்வு பெறும்போது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி ஆண்டிற்கு 6% ஆக இருக்கும் என்று எடுத்துக்கொண்டால், உங்களுக்கு உங்களின் 60-வது வயதில் ரூ.1 கோடி கார்ப்பஸ் ஃபண்ட் தேவைப்படும். அத்தொகையை அடைய மாதத்திற்கு ரூ.2,000 சேமித்தால் போதுமானது. அத்தொகையை நீங்கள் ஹெச்.டி.எஃப்.சி. புரூடென்ஸ் ஃபண்டில் எஸ்.ஐ.பி. மூலம் முதலீடு செய்துவாருங்கள். அத்துடன் மாதம் ரூ.2,000-த்தை பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டிலும் முதலீடு செய்துவாருங்கள். வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்!

எனக்கு 37 வயதாகிறது. நான் ஏற்கெனவே ரியல் எஸ்டேட்டிலும் தங்கத்திலும் தேவையான அளவுக்கு முதலீடு செய்துவிட்டேன். மாதத்திற்கு பத்தாயிரம் ரூபாயை டி.எஸ்.பி. பிளாக்ராக் டாப் 100 ஈக்விட்டி ஃபண்ட், ஃபிடிலிட்டி ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் ஃபோக்கஸ்டு புளூசிப் ஃபண்ட் ஆகியவற்றில் இந்த ஆண்டு ஜனவரி முதல் முதலீடு செய்து வருகிறேன். நான் சரியான ஃபண்டுகளில்தான் முதலீடு செய்கிறேனா அல்லது என் போர்ட்ஃபோலியோவை மாற்றம் ஏதும் செய்ய வேண்டுமா?

இமயவரம்பன், மின்னஞ்சல் மூலமாக.

''டியர் இமயவரம்பன்,

ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் தாகம் தீர்ந்து, மியூச்சுவல் ஃபண்ட் நோக்கி வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி! தற்போதைய நிலையில் நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டுகள் அனைத்தும் நன்றாகவே செயல்பட்டு வருகின்றன. நாம் ஏற்கெனவே கூறியிருந்தது போல, ஃபிடிலிட்டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை எல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. ஆகவே, அந்த ஒரு ஃபண்டின் செயல்பாட்டை அடுத்த 12 மாதங்களுக்கு கண்காணித்து வாருங்கள். செயல்பாட்டில் சுணக்கம் இருந்தால் மாற்றிக்கொள்ளலாம். இல்லையேல் அதே ஃபண்டில் தொடரலாம்.  

(மீண்டும் திறக்கும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு