Published:Updated:

பான் நம்பர் தேவையில்லை..!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு:

பிரீமியம் ஸ்டோரி
பான் நம்பர் தேவையில்லை..!
பான் நம்பர் தேவையில்லை..!

மியூச்சுவல் ஃபண்டில் 50,000 ரூபாய் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு பான் நம்பர் தேவையில்லை என செபி அமைப்பு சொல்லி இருப்பதைக் கேட்டு மியூச்சுவல் ஃபண்ட் வட்டாரத்தினர் மீண்டும் உற்சாகத்தில் குதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கு முன் மைக்ரோ எஸ்.ஐ.பி. என்கிற முறையில் ஓராண்டில் மொத்தம் 50,000 ரூபாய் வரை பான் கார்டு இல்லாமல் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2011, ஜனவரி மாதம் முதல் 'உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள்’ என்கிற கே.ஒய்.சி. படிவம் கொடுத்தால்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும் என செபி புதிய விதிமுறையைக் கொண்டு வந்தது. இந்த கே.ஒய்.சி. படிவத்துடன் பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு முதலீட்டுக்கான ஆதாரமாக தர வேண்டியிருந்தது. இதனால் பான் கார்டு இல்லாதவர்கள் மைக்ரோ எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குறிப்பாக, மூத்த குடிமக்களும் கிராமங்களில் வசிப்பவர்களும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியவில்லை. இப்போது இந்த பிரச்னைக்குத் தீர்வு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், ஓராண்டில் ஒரு மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி. முறை அல்லது மொத்தமாக 50,000 ரூபாய் வரை செய்யப்படும் முதலீட்டுக்கு பான் கார்டு எண் கொடுக்கத் தேவையில்லை. இதற்கு கொடுக்கப்படும் கே.ஒய்.சி. படிவத்தில் புகைப்பட ஆதாரத்துக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், அரசு மற்றும் முன்னணி நிறுவனங்களின் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கொடுத்தால் போதும் என செபி அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

##~##
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பின் (ஆம்ஃபி) துணை சி.இ.ஓ. ரமேஷிடம் இதுபற்றி பேசினோம். ''செபியின் இந்த நடவடிக்கை நிச்சயம் சிறு கிராமங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அதிகரிக்கும். இதன் மூலம் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை வேகமான வளர்ச்சி பெறும். செபி-யின் புதிய விதிமுறைப்படி, ஒருவர் தனித்தனியாக கே.ஒய்.சி. படிவத்தை பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் வெவ்வேறு மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனிகளிலும் தலா 50,000 ரூபாய் வரை பான் கார்டு இல்லாமல் முதலீட்டை செய்ய முடியும்'' என்றார்.

இந்தியாவில் 44 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் தலா 50,000 ரூபாய் முதலீடு செய்யும்பட்சத்தில் ஓராண்டில் ஒருவர் 22 லட்ச ரூபாயை பான் கார்டு இல்லாமல் முதலீடு செய்யும் நிலை உருவாகி இருக்கிறது, செபி-யின் புதிய விதிமுறைப்படி.

வரவேற்கத்தக்க மாற்றம்தானே?

- சி.சரவணன்

எஸ்.பி.ஐ. ஸ்மார்ட் பெர்ஃபார்மர்: நிச்சய லாபம்!

எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் உத்தரவாத யூலிப் பாலிசியான 'ஸ்மார்ட் பெர்ஃபார்மர் டெய்லி புராடக்ட் ஃபண்டின் (சீரிஸ்-3) அதிகபட்ச உத்தரவாத என்.ஏ.வி. தற்போது 10.40 ரூபாயாக இருக்கிறது. தற்போதைய என்.ஏ.வி. ஏற்கெனவே அடைந்துள்ள உத்தரவாத (ரூ.11.26) என்.ஏ.வி.யைவிட குறைவாக கிடைப்பதால் ஒரு யூனிட்டிற்கு ரூ.0.86 உடனடி லாபம் கிடைக்கும்.

இந்த பாலிசி எடுத்தால் முதிர்வின்போது கூடுதலாக 5% உத்தரவாதத் தொகையும் கிடைக்கும். இந்த பாலிசியில் திரட்டப்படும் நிதி, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சந்தை ஏறும்போதும், இறங்கும்போதும் ஃபண்ட் மேனேஜரே யூனிட்களை ஸ்விட்ச் ஓவர் செய்துவிடுவார் என்பது கூடுதல் சிறப்பு. கட்டும் பிரீமியத்திற்கு வருமான வரிச் சட்டம் 80சி-யின்படி வரிச் சலுகையும் உண்டு.

ஐ.ஆர்.டி.ஏ.வின் பரிந்துரையின் அடிப்படையில் என்.ஏ.வி. உத்தரவாதம் அளிக்கும் திட்டங்கள் முடிவுபெற வேண்டும் என்பதால், மிக விரைவில் இந்த திட்டம் முடிவடையவுள்ளது. இதுவரை இந்த திட்டங்களில் முதலீடு செய்ய தவறியவர்கள் இந்த சந்தர்ப்பத்தை முன்னிட்டு எஸ்.பி.ஐ. லைஃப் ஸ்மார்ட் பெர்ஃபார்மர் திட்டத்தில் முதலீடு செய்து உத்தரவாத லாபத்தைப் பெற இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு