Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ம் விதிமுறைகளைத் தளர்த்தி பேயர் கிராப்சயின்ஸ் பங்கில் நாம் செய்யவேண்டிய மொத்த முதலீட்டையும் இப்போதே செய்ய சொல்லி இருந்தேன். நான் பரிந்துரை செய்ய சொன்ன விலைக்கு அந்த பங்குகள் வந்தது. முதலீட்டாளர்கள் அந்த பங்கினை வாங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு நாம் செய்யவேண்டிய அனைத்து முதலீடுகளையும் செய்துவிட்டதால் இனி புதிதாக எந்த பங்கினையும் நம் போர்ட்ஃபோலியோவில் சேர்க்க முடியாது.

ஏற்கெனவே சொன்னது போல பேயர் கிராப்சயின்ஸ் பங்கு தரமான பங்கு. தற்போதைய நிலையில் அந்த பங்கு டெக்னிக்கலாகவும் சரி, ஃபண்டமென்டலாகவும் சரி மிகவும் பலமாக இருக்கிறது. அதனால், நாம் பொதுவாக 15 சதவிகிதம் இலக்கு விலை என்று வைத்திருப்பதை இந்தமுறை விட்டுவிட்டு கொஞ்சம் அதிகமாகவே இலக்கு விலையை வைக்கலாம்.

15 சதவிகிதம் என்றால் 1,047 ரூபாய் வருகிறது. ஆனால், 1,125 ரூபாய் வரைக்கும் நம் இலக்கு விலையை அதிகரித்துக்கொள்ளலாம். என் கணிப்புபடி அந்த பங்கு இன்னும் இரண்டு வருடத்தில் 2,000 ரூபாயைத் தொட வாய்ப்பு இருக்கிறது. கொஞ்சம் கன்ஸர்வேட்டிவ்-வாகவே இந்த விலையைச் சொல்லி இருக்கிறேன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!


சந்தை..?

##~##
சந்தை மெள்ள மெள்ள உயர்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 5366 புள்ளியில் முடிவடைந்தது. 5400 புள்ளிகளைக் கடக்கும்போது இன்னும் ஒரு 200 முதல் 250 புள்ளிகள் வரை உயரலாம். அதாவது, 5650 புள்ளிகள் வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. சென்செக்ஸ்-ல் சொல்ல வேண்டும் என்றால் 17770 என்ற புள்ளியைத் தாண்ட வேண்டும்.

சந்தை மேல் நோக்கி செல்லும்போது, நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் சில பங்குகள் லாபத்துடன் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அப்போது நாம் புதிய பங்குகளில் முதலீடு செய்வதைப் பற்றி முடிவு செய்வோம். சந்தை ஓரளவுக்கு மேலே சென்றாலும், குறிப்பிட்ட சில பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதுபோன்ற பங்குகளாகப் பார்த்து, வரும் வாரத்தில் முதலீடு செய்வோம். ஆனால், தொடர்ந்து உயர்ந்து வரும் பங்குகள் குறுகிய மற்றும் நடுத்தர காலத்துக்கு மட்டுமே லாபம் தரக்கூடும் என்பதால்தான் நாம் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கிறோமே தவிர, நீண்ட காலத்துக்கு அல்ல என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சந்தையைத் தொடர்ந்து கவனிக்கவும். வெள்ளிக்கிழமை நிலவரப்படி நமது போர்ட்ஃபோலியோ நிகர லாபம் 4,321 ரூபாய்.

-தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு