Published:Updated:

கம்பெனி ரிசர்ச்! - பஜாஜ் ஃபின்சர்வ்!

கம்பெனி ரிசர்ச்! - பஜாஜ் ஃபின்சர்வ்!

கம்பெனி ரிசர்ச்! - பஜாஜ் ஃபின்சர்வ்!

கம்பெனி ரிசர்ச்! - பஜாஜ் ஃபின்சர்வ்!

Published:Updated:
கம்பெனி ரிசர்ச்! - பஜாஜ் ஃபின்சர்வ்!

பாரம்பரியம் மிக்க குழுமங்களில் ஒன்றான பஜாஜ் குழும நிறுவனமான பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனத்தைப் பற்றிதான் இந்த வாரம் நாம் ஆய்வு செய்யப் போகிறோம்.

துறை எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
நிதிச் சேவை துறை ஒவ்வொரு ஆண்டும் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. எதிர்காலத்திலும் இதே அளவு வளர்ச்சி இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு முதலீடு என்றால் வங்கி, தபால் நிலையத்தைத் தவிர மக்களுக்கு வேறு முதலீட்டு வாய்ப்புகள் இல்லை. ஆனால், இன்று பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட எண்ணற்ற முதலீட்டு வாய்ப்புகள் சந்தையில் உள்ளது.  

முதலாவதாக, மக்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இந்நிறுவனத்துக்கு மிகவும் உதவியிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு கடன் வாங்கி செலவு செய்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால், இப்போது வீட்டுக் கடன், கார் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, இரு சக்கர வாகனக் கடன், பிஸினஸ் கடன் என்று கடன் வாங்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.  

இரண்டாவதாக, இன்ஷூரன்ஸ் துறையின் வளர்ச்சி. பத்து வருடங்களுக்கு முன்பு எல்.ஐ.சி. மட்டும்தான் இன்ஷூரன்ஸ் தொழிலில் இருந்தது. ஆனால், இப்போது இருபதுக்கும் மேற்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தாலும் இன்ஷூரன்ஸ் துறையின் ஊடுருவல் மிகவும் குறைவுதான் (சுமார் 10 சதவிகிதத்துக்குள்தான்!).

கம்பெனி எப்படி?

பஜாஜ் குழுமம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தாலும், இந்த நிறுவனம் 2007-ம் ஆண்டுதான் தனியாக உருவாக்கப்பட்டது. அதாவது, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து இந்த நிதிச் சேவை வழங்கும் நிறுவனங்களை தனியாகப் பிரித்து பஜாஜ் ஃபின்சர்வ் என்று ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இது ஒரு ஹோல்டிங் நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் கீழ் பஜாஜ் அலியான்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ், பஜாஜ் அலியான்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் வெல்த் மேனேஜ்மென்ட், பஜாஜ் ஃபைனான்ஷியல் செக்யூரிட்டீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்படுகிறது. மேலும், இந்த நிறுவனத்தின் கீழ் 138 காற்றாலைகளும் செயல்பட்டு வருகிறது.

தற்போது செயல்பட்டுவரும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனம் இதுதான். இதன் போட்டி நிறுவனங்களான சுந்தரம் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், இந்தியாபுல்ஸ் ஃபைனான்ஷியல், ரிலையன்ஸ் கேப்பிட்டல் ஆகிய நிறுவனங்களைவிட அதிக சந்தை மதிப்புகொண்டது பஜாஜ் ஃபின்சர்வ். இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் லைஃப் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் சந்தையில் இரண்டாவது பெரிய நிறுவனமாகும்.

கம்பெனி ரிசர்ச்! - பஜாஜ் ஃபின்சர்வ்!

இந்த நிறுவனத்தின் நெட்வொர்க்கும் பலமாக இருக்கிறது. இந்தியா முழுக்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் இருக்கிறது.

1.5 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள், ஏதாவது ஒரு வகையில் இதன் வாடிக்கையாளராக இருக்கிறார்கள். மேலும், 2011-ம் ஆண்டு பஜாஜ் ஃபைனான்ஷியல் சொல்யூஷன்ஸ் மற்றும் பஜாஜ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபைனான்ஸ் ஆகிய இரண்டு புதிய நிறுவனங்களையும் ஆரம்பித்திருக்கிறது.

நிதி நிலைமை எப்படி?

கம்பெனி ரிசர்ச்! - பஜாஜ் ஃபின்சர்வ்!

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களை தவிர, மற்ற எல்லா  நிறுவனங்களும் லாபத்தில்தான் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஐந்து வருடங்களில் இருபது மடங்கு அதிகரித்திருக்கிறது. எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை இந்த நிறுவனத்தின் மூலம் எதிர்பார்க்கலாம். இதற்கு முக்கியமான காரணம், இந்த நிறுவனம் கடன் தந்திருக்கும் போர்ட்ஃபோலியோ. கிட்டத்தட்ட பத்து துறைகளுக்கு கடன் கொடுத்திருக்கிறது. அதனால், இதனுடைய வாராக் கடன் மிக, மிக குறைவு. நிகர வாராக் கடன் 0.16% மட்டுமே.

இன்ஷூரன்ஸ் துறையில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்தாலும் லாபத்தில் செயல்படும் நிறுவனங்கள் மிகச் சில மட்டுமே. அதில் பஜாஜ் குழுமத்தைச் சேர்த்த லைஃப் மற்றும் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் இரண்டுமே லாபத்தில்தான் இருக்கிறது. காற்றாலைகளின் வருமானமும் ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படும் பிஸினஸ்கள் நன்றாக இருக்கும்போது, ஒட்டுமொத்தமாக பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனமும் நன்றாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். மேலும், இந்த நிறுவனத்துக்குக் கடனே கிடையாது. ரிசர்வ் தொகையாக 1,370 கோடி ரூபாய் வைத்திருக்கிறது.

இந்த நிறுவனத்தின் புரமோட்டர்கள் வசம் 58 சதவிகித பங்குகள் இருக்கிறது. இதில் எந்த பங்கும் அடமானத்தில் இல்லை.  புரமோட்டர்களின் பங்குகள் அடமானத்தில் இல்லை.

வாய்ப்பு என்ன?

இந்தியாவில் நிதி சார்ந்த அறிவு இப்போதுதான் அதிகரித்து வந்திருக்கிறது. அப்படி அதிகரிக்கும்போது நிதிச் சேவைகளுக்கு அதிக தேவை இருக்கிறது. மேலும், மொபைல், இணையம் உள்ளிட்ட டெக்னாலஜிகள், எதிர்காலத்தில் நிதிச் சேவை துறையை பல பரிமாணத்தில் எடுத்துச் செல்லும் வாய்ப்பு இருக்கிறது. இதைவிட முக்கியம், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கு அனுமதி கொடுக்கும்பட்சத்தில் இந்த நிறுவனத்துக்கு கண்டிப்பாக உரிமம் கிடைக்கும் என்பதே பொதுவான கருத்து. இதை எல்லாம் பார்க்கும்போது வரும் காலத்தில் இந்த நிறுவனத்தின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.

ரிஸ்க் என்ன?

இந்த நிறுவனத்திலும் சில ரிஸ்குகள் இருக்கவே செய்கிறது. இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மற்ற பெரிய நிறுவனங்கள் அல்ல; மக்களேதான். நிறுவனங்களாக இருக்கும்பட்சத்தில் சில நிறுவனங்களே பெரிய வருமானத்தைக் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இங்கு அப்படி இல்லை. ஒவ்வொரு மக்களிடமும் சென்று அவர்களுக்கு கடன்/இன்ஷூரன்ஸ் கொடுத்து வருமானத்தை அதிகரிக்க வேண்டும். தற்போது அதிகரித்துவரும் பணவீக்கம் காரணமாக மக்களின் செலவுகள் அதிகரித்து சேமிப்பு குறைந்து வருகிற சூழ்நிலையில், மக்களை சென்றடைவது கொஞ்சம் கடினமாகதான் இருக்கும். மேலும், வாகனக் கடன் மற்றும் நுகர்வோர் பொருட்கள் கடன் இந்நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் அதிகமாக இருப்பதால் தற்போதைய பொருளாதார மந்தநிலையில் இந்த நிறுவனத்தின் வருமானம் குறைய வாய்ப்புண்டு.

இருந்தாலும், இந்த நிறுவனத்தை முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீடாக தங்களது போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதே எங்கள் டீமின் பரிந்துரை. தற்போதைய விலைகூட வாங்குவதற்கு ஏற்ற விலைதான். 2010-ம் ஆண்டு வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவன பங்குகள் நல்ல ஏற்றத்தைக் கொடுத்தது.

அடுத்த ஏற்றம் 2014-ம் ஆண்டில் வரலாம் என்பதால் இந்த பங்கினை கவனிக்கவும்.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism