
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கடந்த எட்டு வருடமாக நடக்காத விஷயங்கள் ஒரே இரவில் நடக்கிறது என்றால், கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது. மேலும், கடந்த 2004-ம் வருடம் சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தார். அப்போது சந்தை வேகமாக ஏறியது. ஏறியது போலவே வேகமாகவும் இறங்கியது. அதேபோல 2008-ம் ஆண்டும் அவர் நிதி அமைச்சராக இருந்தபோதும் வேகமாக ஏறி இறங்கியது.
இப்போதும் அவர் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கிறார். சந்தையும் வேகமாக ஏறி இருக்கிறது. அதனால் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.

அதற்காக மொத்தமாக பயப்பட தேவை இல்லை. சில நல்ல விஷயங்களும் இருக்கிறது. அந்நிய முதலீடுகளை அதிகரித்திருப்பதால் ரூபாயின் மதிப்பு நன்றாக உயரும். கடந்த வெள்ளிக்கிழமையே உயர்ந்தது. இந்த அறிவிப்புகள் காரணமாக திங்கட்கிழமையும் இந்திய ரூபாய் நன்றாக உயரலாம்.
மேலும், இந்த அறிவிப்புகள் நமது போர்ட்ஃபோலியோவிலும் சில நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தப் போகிறது. அதாவது, அர்விந்த் மற்றும் ஆதித்யா நுவா போன்ற பங்குகள் இந்த வாரம் நன்றாக உயர வாய்ப்பு இருக்கிறது.
போர்ட்ஃபோலியோ எப்படி?
இந்த வாரம் கும்மின்ஸ் இந்தியா பங்கில் மொத்த முதலீட்டையும் செய்ய சொல்லி இருந்தேன். அந்த விலைக்கு வந்தது. முதலீட்டாளர்கள் அதை செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இனி அந்த பங்கில் முதலீடு செய்ய வேண்டாம். அதேபோல கர்நாடகா வங்கியும் சராசரி விலையை அடைந்தது. அதையும் முதலீட்டாளர்கள் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சந்தை எப்படி? என்ன செய்யலாம்?

பல விஷயங்கள் நடந்திருப்பதால் இந்த வாரம் சந்தை உயர்வதற்கே வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே சந்தை கொஞ்சம் சூடாக இருக்கிறது. இந்த வாரம் இன்னும் சூடாகும் பட்சத்தில் நாம் சந்தைக்குள் நுழைய வேண்டாம். அதற்காக சந்தையைக் கவனிக்காமலும் விட்டுவிட வேண்டாம். சந்தையின் ஏற்றத்தில் நமது பங்குகள் போர்ட்ஃபோலியோவை விட்டு வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதனால் கவனித்து லாபத்தை அறுவடை செய்யவும். ஏதாவது ஒரு பங்கு வெளியேறும் பட்சத்திலோ அல்லது சந்தை ஒரு நிலைத்தன்மை அடையும் போதோ முதலீட்டை செய்வோம்.
தொகுப்பு: வா.கார்த்திகேயன்.