
##~## |
வெ
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ள்ளியன்று நடந்த ஏற்றத்தின் சீற்றம் தொடர்ந்தால் 5410 வரையிலும் மிகச் சுலபமாகச் சென்றுவிடலாம் என்றும், ஷார்ட் சைடு வியாபாரத்தைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு மறுபடியும் வந்துள்ளோம் என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.
வார இறுதியில் கிட்டத்தட்ட 235 பாயின்ட்கள் ஏற்றத்தில் முடிவடைந்தது நிஃப்டி. டெக்னிக்கலாக ஸ்ட்ராங்காகவும், ஃபண்டமென்டல் செய்திகள் ஒன்றன்பின் ஒன்றாகவும் வந்து சந்தையை நல்ல வேகத்தில் மேலே எடுத்துச் சென்றுவிட்டது. 5630 என்பது மிகச் சுலபமான டார்கெட்டாகவும், 5950 வரையிலும் போகும் பலம் பெற்றதாகவும் சந்தை மாறியுள்ளது.
திங்களன்றும் ஓப்பனிங் கேப் வரும். ஷார்ட் சைடு என்பதை மறக்க வேண்டிய நேரமிது. லாங் சைடில் ஸ்ட்ரிக்ட்டான தொடரும் ஸ்டாப் லாஸைப் போட்டு, லாபத்தை வளரவிட்டு பின்னர் புக் செய்யுங்கள்.
வியாழனன்று டிரெண்ட் மாறலாம். எச்சரிக்கை. செய்திகள் நெகட்டிவ்வாக வரும்பட்சத்தில் அதற்கு முன்னரே சிறிய கரெக்ஷன் வரலாம்.


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism