பிரீமியம் ஸ்டோரி
ஃபண்ட் கிளினிக்!

எனக்கு 38 வயது. ஓய்வுக்காலத்துக்காகச் சேமிக்க நினைக்கிறேன். எனது மாதச் செலவு 40,000 ரூபாய். 7,000 ரூபாய் எஸ்.ஐ.பி.யிலும், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 குரோத் ஃபண்டில் 2,000 ரூபாயும், நியூ பென்ஷன் ஸ்கீமில் என்.பி.எஸ்.ஸும் கட்டி வருகிறேன். இது எனது ஓய்வுக்காலத்துக்குப் போதுமா? எனது ஓய்வுக்காலத்துக்காக கூடுதலாக ஒரு எஸ்.ஐ.பி.யையும் தொடங்க நினைக்கிறேன். ஏதாவது ஒரு நல்ல ஃபண்டை சிபாரிசு செய்யுங்கள்.

- ரங்கராஜன், மின்னஞ்சல் மூலமாக.

##~##
''டியர் ரங்கராஜன்,

உங்கள் மாதாந்திரச் செலவு ரூ.40,000-த்தில் வீட்டு வாடகை, குழந்தைகள் பள்ளிச் செலவு போன்றவையும் அடங்கி இருக்கும் என நினைக்கிறேன். உங்களின் ஓய்வுக்காலத்தில் அதுபோன்ற செலவுகள் இருக்காது. ஆகவே, உங்களின் தற்போதைய செலவு மாதத்திற்கு ரூ.20,000 என்று எடுத்துக்கொண்டால், பணவீக்கம் 7% என்னும்பட்சத்தில், நீங்கள் ரிட்டையர்ட் ஆகும்போது உங்கள் கையில் இருக்க வேண்டிய கார்ப்பஸ் ரூ.1.55 கோடியாகும். இந்த கார்ப்பஸை அடைவதற்கு நீங்கள் மாதம் ரூ.14,000 அடுத்த 22 ஆண்டுகளுக்குச் சேமிக்க / முதலீடு செய்ய வேண்டியிருக்கும். ஆகவே, நீங்கள் ஏற்கெனவே முதலீடு செய்துகொண்டிருக்கும் ரூ.9,000-ற்கு மேல் இன்னுமொரு எஸ்.ஐ.பி-யை துவக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் ரிட்டையர்ட் ஆகும் வரை (அடுத்த 22 ஆண்டுகளுக்கு) இந்த முதலீடுகள் அனைத்தையும் தொடர்ந்து வாருங்கள். உங்கள் இலக்கை அடைந்துவிடலாம். ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ டைனமிக் பிளானில் மாதம் ரூ.5,000-ற்கு எஸ்.ஐ.பி-யை துவக்கிக் கொள்ளுங்கள்.''

எஸ்.ஐ.பி. முதலீடு, தினமும் முதலீடு செய்வது (Daily Investment Plan) - இதில் எது பெஸ்ட்? டெய்லி இன்வெஸ்ட்மென்ட் பிளானை எந்த நிறுவனம் நடத்துகிறது? இதில் முதலீடு செய்ய வேண்டிய குறைந்தபட்ச தொகை என்ன? தவிர, யூ.டி.ஐ. வெல்த் பில்டர் ஃபண்டில் மாதம் ரூ.2,000, ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஃபண்டில் மாதம் ரூ.1,000, எஸ்.பி.ஐ. கோல்டு ஃபண்டில் ரூ.3,000 எஸ்.ஐ.பி. மூலம் கட்டி வருகிறேன். இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளில் 15 லட்ச ரூபாய் சேமிக்க முடியுமா?

- பாலமுருகன், உடுமலைப்பேட்டை.

''அன்புள்ள பாலமுருகன்,

நீங்கள் மாதாந்திர முதலீடு அல்லது தினசரி முதலீடு ஆகிய இரண்டில் எது பெஸ்ட் என்று கேட்டுள்ளீர்கள். முதலீடு உட்பட எந்த ஒரு செயலுக்கும் எளிமை அவசியம். அந்த வகையிலும், முதலீட்டை  பராமரிப்பதிலும், ரிட்டர்ன்ஸிலும், மாதாந்திர முதலீடே பெஸ்ட். தினசரி எஸ்.ஐ.பி. வசதியை பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தருவதில்லை. அவ்வாறு தந்தாலும் இ.சி.எஸ். மூலம் பணம் எடுப்பதில் சில சமயங்களில் குளறுபடிகள் ஏற்படுகின்றன. ஆகவே, தினசரி எஸ்.ஐ.பி. வசதி கிடைத்தாலும், செல்ல வேண்டாம்! தினசரி முதலீட்டிற்கு அடுத்த பெட்டர் ஆப்ஷன் தினசரி எஸ்.டி.பி. ஆகும். இந்த வசதியும் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களாலும் தரப்படுவதில்லை. ஹெச்.டி.எஃப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தினசரி எஸ்.டி.பி. வசதியை கொடுக்கின்றன. ஹெச்.டி.எஃப்.சி-யில் குறைந்தபட்ச தினசரி எஸ்.டி.பி. முதலீடு ரூ.500 ஆகும். ஐ.சி.ஐ.சி.ஐ-யில் ரூ.250 ஆகும். வாராந்திர எஸ்.டி.பி-யை பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வழங்குகின்றன.

தற்போது மூன்று திட்டங்களில் மாதம் ரூ.6,000 முதலீடு செய்து வருகிறீர்கள். மாதம் ரூ.8,000 முதலீடு செய்யும்பட்சத்தில், உங்களுக்குத் தேவையான ரூ.15 லட்சம் இன்னும் 10 வருடங்களில் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் தங்க முதலீடு தற்போது அதிகமாக உள்ளது. எஸ்.பி.ஐ. கோல்டு ஃபண்டில் ரூ.3,000 முதலீடு செய்து வருகிறீர்கள். மேலும், நீங்கள் முதலீடு செய்துவரும் யூ.டி.ஐ. வெல்த் பில்டர்-2 ஃபண்ட் தனது போர்ட்ஃபோலியோவில் 30 சதவிகிதத்தை தங்கத்தில் முதலீடு செய்கிறது. ஆக, நீங்கள் செய்யும் ரூ.6,000 மாத முதலீட்டில், ரூ.3,600 தங்கத்திற்கு முதலீடாகச் செல்கிறது. இது கிட்டத்தட்ட 60% ஆகும். இதே வளர்ச்சியை அடுத்த 10 வருடங்களுக்குத் தங்கம் கொடுக்குமா என்பது கேள்விக்குரியது. ஆகவே, அட்டவணையில் கண்டவாறு உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்:

ஃபண்ட் கிளினிக்!

தங்கத்தின் விலையில் ஏதேனும் பெரிய சரிவு ஏற்பட்டால், அதில் எஸ்.ஐ.பி-யில் செல்லும் பணத்தை நிறுத்திவிட்டு, பி.பி.எஃப். மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் சரிபாதியாக முதலீடு செய்யுங்கள்.''

டி.எஸ்.பி. பிளாக் ராக் ஈக்விட்டி ஃபண்ட், ரிலையன்ஸ் விஷன் ஃபண்ட் ஆகிய இரண்டிலும் 2009-ல் தலா 26,000 ரூபாய் முதலீடு செய்திருந்தேன். இப்போது டி.எஸ்.பி. 44,963 ரூபாயாகவும், ரிலையன்ஸ் 39,536-ஆகவும் உயர்ந்திருக்கிறது. இந்த பணத்தை இதே ஃபண்டுகளிலும் இன்னும் 4-5 ஆண்டுகள் வைத்திருக்கலாமா? மேலும், ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 மற்றும் புரூடென்ஸ் இரண்டிலும் தலா 5,000 எஸ்.ஐ.பி.யில் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?

- சுந்தர், மும்பை.

''அன்புள்ள சுந்தர்,

டி.எஸ்.பி-பி.ஆர். ஈக்விட்டி ஃபண்ட் ஒரு மல்ட்டி கேப் திட்டமாகும். இதன் நீண்டகால செயல்பாடு நன்றாக உள்ளது. கடந்த ஓராண்டில் நிஃப்டி 50 குறியீட்டுடன் ஒப்பிடும்போது சற்று குறைந்த வருமானத்தைக் கொடுத்துள்ளது. இருந்தபோதிலும் நீண்ட கால அடிப்படையில் இதே ஃபண்டில் நீங்கள் தொடரலாம். ரிலையன்ஸ் விஷன் ஃபண்டிற்குப் பதிலாக அதே ஃபண்ட் ஹவுஸில் நன்றாகச் செயல்பட்டுவரும் ரிலையன்ஸ் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டிற்கு மாறிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்யும்போது உங்களுக்கு பணம் தேவையில்லையென்றால், குரோத் ஆப்ஷனில் செல்லுங்கள். ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 மற்றும் புரூடென்ஸ் முதலீட்டை நீங்கள் தொடர்ந்து வரலாம்.''

(மீண்டும் திறக்கும்)

ஃபண்ட் கிளினிக்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு