பழைய தனியார் வங்கிகளில் முக்கியமான வங்கியான கேரளாவைச் சேர்ந்த ஃபெடரல் பேங்கினை பற்றிதான் இந்த வாரம் நாம் ஆய்வுசெய்யப் போகிறோம்.

துறை எப்படி?

. பொதுத்துறை வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், புதிய தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் என பல இருந்தாலும், நிதிச் சேவை இன்னும் அனைத்து இந்தியர்களையும் போய் சென்றடையவில்லை. உலக வங்கியின் அறிக்கைபடி, இந்தியர்களில் 35 சதவிகிதம் மக்களுக்கு மட்டுமே முறையான வங்கிச் சேவை கிடைக்கிறது. ஆனால், வளர்ந்த நாடுகளில் இந்த விகிதம் 41 சதவிகிதமாக இருக்கிறது..
இந்த சூழ்நிலையைப் பார்க்கும்போது, இன்னும் பல புதிய வங்கிகள் வந்தாலும், ஏற்கெனவே இருக்கும் வங்கிகள் புதிய கிளைகளைத் திறந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு வங்கியின் சேவை இன்னும் தேவையாகவே இருக்கிறது.

நிறுவனம் எப்படி?

5,000 ரூபாய் மூலதனத்தில் திருவாங்கூர் ஃபெடரல் பேங்க் என்ற பெயரில் 1931-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த வங்கி. அதன்பிறகு 15 வருடங்களுக்குப் பிறகு, அதாவது 1946-ம் ஆண்டுதான் தன்னுடைய இரண்டாவது கிளையை ஆரம்பித்தது இந்த வங்கி. அதன்பிறகு திருவாங்கூர் என்ற பெயரை எடுத்துவிட்டு ஃபெடரல் வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1994-ம் ஆண்டு இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்டபோது 60 மடங்கு ஓவர் சப்ஸ்கிரைப் ஆனது. சென்ற ஆகஸ்ட் மாதம் இந்த வங்கி தன்னுடைய 1,000-மாவது கிளையை கேரளாவில் இருக்கும் முத்தூரில் தொடங்கியது.

1,000 கிளைகளைக் கொண்டிருந்தாலும் 542 கிளைகள் கேரளாவில் இருக்கிறது. மீதமுள்ள கிளைகள்தான் இந்தியாவின் மற்ற பகுதியில் இருக்கிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த நிறுவனத்தின் கிளைகள் இருக்கிறது. இருந்தாலும், இந்த வங்கி வெளிநாட்டு இந்தியர்களை கவர நினைப்பதால், வெளிநாட்டு இந்தியர்கள் அதிகமாக இருக்கும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகமாக கவனம் செலுத்துகிறது. இந்த வங்கியைப் பொறுத்தவரை, சராசரியாக ஒரு கிளையை துவங்கி 18 மாதங்களில் அந்த கிளை லாபத்தில் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. சமீபத்தில் பெங்களூரு, மும்பை, கொச்சி ஆகிய இடங்களில் 24 மணி நேர கிளையை சோதனை முயற்சியாகத் தொடங்கி இருக்கிறது.

நிதி நிலைமை எப்படி?

புரமோட்டர்கள் இல்லாமல் புரொஃபஷனல்களால் நிர்வகிக்கப்படும் வங்கி. வங்கியின் டெபாசிட் ஆண்டுக்கு 18% வளர்ந்துகொண்டே வருகிறது. இதில் என்.ஆர்.ஐ.களின் பங்கு கணிசமானது. கடந்த சில மாதங்களாக ரூபாயின் சரிவு காரணமாக என்.ஆர்.ஐ. டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதன் காரணமாக டெபாசிட்கள் வந்துகொண்டிருக்கிறது.

மேலும், ஒரு வங்கியின் காசா (நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கில் இருக்கும் டெபாசிட்) அதிகரிக்கும்போது நிகர வட்டி வரம்பு அதிகரிக்கும். காரணம், இந்த தொகைக்கு வட்டியே கொடுக்கத் தேவை இல்லை அல்லது குறைந்த வட்டி கொடுத்தால் போதும். இந்த வங்கியின் டெபாசிட்களில் காசா 28% இருக்கிறது. மற்ற வங்கிகளோடு ஒப்பிடும்போது இது நன்றாகவே இருக்கிறது. மேலும், இந்த விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே இதே நிலையிலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு இப்படியேயும் தொடர வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக நிகர வட்டி வரம்பு 3.4 சதவிகிதமாக இருக்கிறது.

டெபாசிட் வளர்ச்சி இருப்பதைப் போல கடன் கொடுக்கும் விகிதமும் (இப்போதைக்கு 18%) நன்றாகவே இருக்கிறது. வரும் ஆண்டுகளிலும் இதே நிலை தொடரவே வாய்ப்பு அதிகம். மேலும், ரீடெய்ல், எஸ்.எம்.இ. மற்றும் கார்ப்பரேட்கள் என அனைத்து துறைகளிலும் இந்த வங்கி கடன் தந்திருக்கிறது. அதனால், இதன் நிகர வாராக்கடன் 0.6 சதவிகிதமாக இருக்கிறது. வரும் ஆண்டுகளில் 0.4%-மாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் காலத்தில் வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, கடன் வளர்ச்சி விகிதம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்; லாபமும் அதிகரிக்கலாம்.

கடந்த ஐந்து வருடங்களில் இந்த வங்கியின் வருமானம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. அதேபோல தொடர்ந்து டிவிடெண்டும் கொடுத்து வருகிறது. புத்தக மதிப்புக்கு அருகில் வர்த்தகமாகும் வங்கியும்கூட!

வாய்ப்புகள்?

இந்த வங்கி இப்போது மிகவும் முனைப்பாக பல கிளைகளை துவங்கி வருகிறது. கடந்த வருடத்தில் ஒரே நாளில் 100 கிளைகளை துவங்கியது. விரிவாக்கப் பணிகளில் கவனம் செலுத்தி புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இன்னும் ஓரிரண்டு வருடங்களில் 1,150 வங்கி கிளைகளை துவங்க இருப்பதாகத் தெரிகிறது.

ரிஸ்க் என்ன?

பொருளாதாரம் எந்த திசையில் திரும்பும் என்பதில்தான் வங்கித் துறையின் வளர்ச்சி இருக்கும் என்பது இந்தத் துறைக்கான பொதுவான ரிஸ்க். இரண்டாவது, இந்த வங்கிக்கு என்.ஆர்.ஐ. டெபாசிட்கள் அதிகமாக இருக்கிறது. ஒருவேளை என்.ஆர்.ஐ. டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் குறைந்தால் புதிய டெபாசிட்கள் வராமல் போகலாம். தவிர, இந்த வங்கியில் அந்நிய முதலீட்டாளர்கள் 43%-மும் இந்திய நிறுவன முதலீட்டாளர்கள் 20%-மும் வைத்திருக்கிறார்கள். நிறுவனங்களின் கையில் அதிக பங்கு இருக்கும்போது ஏதாவது ஒரு நிறுவன முதலீட்டாளர் பங்குகளை விற்றால், விலை அதிகம் சரியக்கூடும்.

இருந்தாலும், வங்கித் துறையின் வளர்ச்சி, இந்த வங்கியின் கடந்த கால செயல்பாடு மற்றும் நிதி நிலைமையும் வைத்துப் பார்த்தால், இந்த பங்கை இப்போதுள்ள விலையிலேயே கொஞ்சம் வாங்கி, உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம் என்பதே எங்கள் டீமின் பரிந்துரை.

- நாணயம் டீம்.