Published:Updated:

ஃபண்ட் கிளினிக்!

ஃபண்ட் கிளினிக்!

ஃபண்ட் கிளினிக்!
ஃபண்ட் கிளினிக்!
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒன்பது ஃபண்டுகளில் தலா 1,000 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இந்த ஃபண்டுகள் எல்லாம் சரிதானா அல்லது ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா?

- மணிவண்ணன், மின்னஞ்சல் மூலமாக.

''டியர் மணிவண்ணன்,

நீங்கள் முதலீடு செய்துள்ள ஃபண்டுகள் அனைத்தும் நன்றாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனால், மாதம் ரூ.9,000 முதலீட்டிற்கு

9 ஃபண்டுகள் தேவையில்லை. ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ ஃபோக்கஸ்டு புளூசிப் ஈக்விட்டி ஃபண்டில் ரூ.3,000, ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் ரூ.3,000, பிர்லா சன் லைஃப் 95 ஃபண்டில் ரூ.2,000, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ ரெகுலர் கோல்டு சேவிங்ஸ் ஃபண்டில் ரூ.1,000-மும் முதலீடு செய்கிற மாதிரி உங்கள் போர்ட்ஃபோலியோவை மாற்றிக்கொள்ளுங்கள்.''

அரசு பொதுத்துறை நிறுவனமொன்றில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன். தற்போது என்னால் 4,000 ரூபாய் சேமிக்க முடியும். ஓராண்டுக்கு முன்புதான் எனக்கு திருமணமானது. எனது குழந்தையின் படிப்பிற்கும், எனது ஓய்வுக்காலத்திற்கும் சேமிக்க விரும்புகிறேன். எந்தெந்த ஃபண்டுகளில் நான் முதலீடு செய்யலாம்?

- ராஜகவி, திருச்சி.

''டியர் ராஜகவி,

உங்கள் பல்வேறு செலவுகள் போக உங்களிடம் மீதமிருக்கும் தொகை ரூ.4,000 ஆகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நிச்சயமான லாபம் என்று எதுவும் கிடையாது. ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் ரிஸ்க் உடையது என்றாலும் உங்களைப்போன்ற இளைஞர்களுக்கு நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும்போது லாபகரமானதாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கீழ்க்கண்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளுங்கள். சம்பளம் உயரும்போது உங்கள் முதலீட்டை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்:

கிட்டத்தட்ட முப்பது ஃபண்டுகளில் நான் முதலீடு செய்திருக்கிறேன். இந்த ஃபண்டுகள் எல்லாம் சரியானவைதானா அல்லது ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்று விளக்கமாக எடுத்துச் சொல்லுங்களேன்.

- ஆர்.கோதண்டராமன், மின்னஞ்சல் மூலமாக.

''டியர் கோதண்டராமன்,

நீங்கள் எல்.ஐ.சி. மற்றும் கோட்டக் லைஃப் இன்ஷூரன்ஸில் யூலிப் பாலிசிகளில் சுமார் 2 லட்சம் ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருக்கிறீர்கள். இந்த இரு பாலிசிகளிலும் குறைந்தபட்சம் கட்ட வேண்டிய ஆண்டுகளுக்கு மேல் கட்ட வேண்டாம். வெளியேறும் கட்டணம் இல்லாதபோது இந்த பாலிசிகளை குளோஸ் செய்துவிட்டு, வரும் பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃபிக்ஸட் டெபாசிட்களில் முதலீடு செய்துகொள்ளவும்.

உங்களின் மொத்த முதலீடு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ரூ.9.50 லட்சத்திற்கு மேல் உள்ளது. இதில் 2 லட்சம் ரூபாய் கடன் சார்ந்த திட்டங்களில் உள்ளது. ஃபிராங்க்ளின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்துள்ள தொகையை தரவில்லை. நீங்கள் வைத்திருக்கும் முதலீடுகளில் அதிக முதலீடு உள்ள ஃபண்ட் நிறுவனங்கள் யூ.டி.ஐ., ஃபிராங்க்ளின், ஹெச்.டி.எஃப்.சி. ஆகும். அத்துடன் பிர்லா மியூச்சுவல் ஃபண்டில் வைத்துள்ள திட்டம் நல்ல திட்டம் என்பதாலும், ஐ.சி.ஐ.சி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நன்றாகச் செயல்பட்டு வருவதாலும், அந்த இரண்டு நிறுவனங்களுடன் சேர்த்து ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் உங்கள் முதலீடு அனைத்தையும் கீழ்க்கண்டவாறு மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு மாற்றும்போது ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனத்திலும் ஒரே போர்ட்ஃபோலியோவில் வருமாறு பாருங்கள்.

ஃபண்ட் கிளினிக்!

சுந்தரம் செலக்ட் ஃபோக்கஸ்டு நெடுநாட்களாக நன்றாகச் செயல்படவில்லை. ஆகவே, அந்த ஃபண்டை விட்டு வெளியேறி, அதிலிருந்து வரும் தொகையை பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட் லைன் ஈக்விட்டி திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட் லைன் ஈக்விட்டி திட்டம் நன்றாகச் செயல்பட்டு வருவதால், அந்த திட்டத்தில் உள்ள முதலீட்டைத் தொடருங்கள். அதே ஃபண்ட் நிறுவனத்தில் நீங்கள் வைத்துள்ள ஈக்விட்டி திட்டத்தை, ஃபிரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்டிற்கு ஸ்விட்ச் செய்து கொள்ளுங்கள்.

பிரின்ஸிபிள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் உள்ள முதலீடுகளையும், எஸ்.பி.ஐ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் உள்ள முதலீடுகளையும் (கன்சாலிடேஷன் நோக்கத்திற்காக) விட்டு வெளியேறி, வரும் தொகையை பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட் லைன் ஈக்விட்டி திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

ஃபண்ட் கிளினிக்!

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ பவர் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ டாப் 200 என பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. அந்த ஃபண்டைவிட நீண்ட காலத்தில் நன்றாகச் செயல்பட்டு வரும் திட்டங்கள் அந்த ஃபண்ட் ஹவுஸில் உள்ளன. இன்ஃப்ராஸ்ட்ரக்சர் போன்ற துறை சார்ந்த முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆகவே, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ டாப் 200 முதலீட்டையும், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்டில் உள்ள முதலீட்டையும், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ டைனமிக் பிளானிற்கு மாற்றிக்கொள்ளுங்கள். ஜே.எம். மியூச்சுவல் ஃபண்டில் பேஸிக் மற்றும் கான்ட்ரா ஆகிய இரண்டு திட்டங்களையும் விட்டு வெளியேறி, வரும் தொகையை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ டைனமிக் பிளானில் முதலீடு செய்துகொள்ளுங்கள். கோட்டக் 50, கோட்டக் மிட் கேப் மற்றும் கோட்டக் ஆப்பர்ச்சூனிட்டீஸில் உள்ள முதலீடுகளை விட்டு வெளியேறி, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ டைனமிக் பிளானில் முதலீடு செய்துகொள்ளுங்கள். டாடா மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருக்கும் எஃப்.எம்.பி. முதிர்வடையும்போது, நாம் குறிப்பிட்டுள்ள ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுள் ஒன்றில் வெளிவரும் எஃப்.எம்.பி. திட்டத்தில் முதலீடு செய்யுங்கள்.

ஐ.டி.எஃப்.சி. என்டர்பிரைஸ் ஈக்விட்டி ஃபண்ட் தற்போது ஐ.டி.எஃப்.சி. ஈக்விட்டி ஃபண்ட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபண்டை விட்டு வெளியேறி, வரும் தொகையை ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ டைனமிக் பிளானில் மாற்றிக்கொள்ளுங்கள். ஹெச்.டி.எஃப்.சி-யில் உள்ள புரூடென்ஸ் மற்றும் பேலன்ஸ்டு ஃபண்டுகளில் உள்ள முதலீட்டைத் தொடர்ந்து வாருங்கள். ரிலையன்ஸில் உள்ள லிக்விட் ஃபண்டை, கன்சாலிடேஷனுக்காக, ஹெச்.டி.எஃப்.சி. சி.எம்.எஃப். - டி.ஏ.பி. திட்டத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள்.

யூ.டி.ஐ. எம்.இ.பி.யூ.எஸ். திட்டம் ஒரு டாக்ஸ் சேவர் திட்டமாகும். உங்களது லாக்-இன் காலம் முடிந்துவிட்டதால், அதில் உள்ள தொகையை யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டிற்கு ஸ்விட்ச் செய்துகொள்ளுங்கள். யூ.டி.ஐ. மாஸ்டர் வேல்யூ ஃபண்டின் செயல்பாடும் நன்றாக இருப்பதால், அதைத் தொடருங்கள். யூ.டி.ஐ. ரிட்டையர்மென்ட் பெனிஃபிட் பென்ஷன் மற்றும் யூ.டி.ஐ. யூலிப் திட்டங்கள் கடன் சார்ந்த திட்டங்களாகும். நீங்கள் இவற்றிலிருந்து தற்போது வெளியேறுவதற்கு முறையே 1% மற்றும் 2% வெளியேற்றுக் கட்டணம் உள்ளது. ரிஸ்க் எடுக்கலாம் என்றால் இவற்றிலிருந்து யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டிற்கு ஸ்விட்ச் செய்துகொள்ளுங்கள். இல்லையேல், இந்த ஃபண்டுகளை விட்டு வெளியேறி தரமான கார்ப்பரேட் ஃபிக்ஸட் டெபாசிட் அல்லது அதே ஃபண்ட் ஹவுஸில் வெளிவரும் எஃப்.எம்.பி. திட்டங் களில் முதலீடு செய்துகொள்ளுங்கள். யூ.டி.ஐ. மாஸ்டர்ஷேரில் குறைவான தொகையே இருப்பதால், அந்த தொகையை யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டிற்கு ஸ்விட்ச் செய்துகொள்ளுங்கள்.

ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸில் உள்ள முதலீட்டைத் தொடருங்கள். ஃபிராங்க்ளின் இந்தியா ஆப்பர்ச்சூனிட்டீஸ் மற்றும் ஃபிராங்க்ளின் இந்தியா ஃபிளக்ஸி கேப் ஆகிய இரு திட்டங்களில் உள்ள முதலீட்டை ஃபிராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸிற்கு ஸ்விட்ச் செய்துகொள்ளுங்கள். இந்த மாற்றங்கள் அனைத்தையும் நீங்கள் முடித்த பிறகு உங்களது முதலீடுகள் ஐந்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் மொத்தம் 7/8 திட்டங்களில் கச்சிதமாக முதலீடு ஆகியிருக்கும்.

குறிப்பு: இங்கு செய்துள்ள பரிந்துரை ஒரு தனிநபரின் தேவைகளுக்காக செய்யப்பட்டுள்ளது. அவரவரின் தேவைகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனிற்கு ஏற்ப பரிந்துரை மாறும் என்பதை கருத்தில் கொள்ளவும்.

(மீண்டும் திறக்கும்)

ஃபண்ட் கிளினிக்!