Published:Updated:

ஏற்றத்துக்கு காத்திருக்கும் பங்குகள்!

கவர் ஸ்டோரி

ஏற்றத்துக்கு காத்திருக்கும் பங்குகள்!
ஏற்றத்துக்கு காத்திருக்கும் பங்குகள்!

டந்த ஐந்து வருடங்களாக சந்தையில் பெரிய ஏற்றங்கள் இல்லாததால் சிறிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று அதிக ஆர்வம் காட்டவில்லை. சந்தை உயர்ந்தபோதெல்லாம் ஏற்கெனவே முதலீடு செய்த பணத்தை எடுக்கவே செய்தார்கள். ஆனால், கடந்த சில நாட்களில் இந்த நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக புரோக்கர் ஆபீஸ் பக்கமே தலைகாட்டாமல் இருந்த சிறிய முதலீட்டாளர்கள் மீண்டும் உற்சாகமாக புரோக்கர்களைத் தேடி வர, காளை ஓட்டத்திற்கு கட்டியம் கூறும் வேலை வெற்றிகரமாக நிறைவேறியிருக்கிறது.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

விலை மலிவாக இருக்கும்போது முதலீடு செய்வதும், விலை உயரும்போது விற்றுவிட்டு லாபம் பார்ப்பதும்தான் நல்ல, தரமான முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை. ஆனால், வழக்கம் போல இந்த முறையும் சிறு முதலீட்டாளர்கள் நல்ல வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள். கடந்த ஜூலை மாதத்தைவிட கிட்டத்தட்ட 14% சந்தை உயர்ந்துவிட்டது. (ஜூலை 26-ம் தேதி நிஃப்டி 5043 புள்ளிகளாக இருந்தது).

##~##
அவ்வளவு ஏன், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புகூட நிஃப்டி 5225 புள்ளிகளில்தான் இருந்தது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் நிஃப்டி சுமார் 10% உயர்ந்திருக்கிறது. நிஃப்டியே 10 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது என்றால், மிட் கேப் சுமார் 13 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து பங்குகளும் கணிசமாக உயர்ந்துவிட்ட நிலையிலும்கூட வாங்குவதற்கு ஏதாவது பங்குகள் இருக்கிறதா, சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது, எதை நோக்கிச் செல்லும் என முதலீட்டாளர்கள் மனதில் பல ஆயிரம் கேள்விகள். அந்த கேள்விகளை நாமும் சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம். நம் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக விளக்கம் தந்தார் அவர்.

''சந்தையில் எப்போதுமே வாய்ப்புகள் இருக்கிறது. இப்போதும் அப்படியே. தற்போதையச் சூழ்நிலையில் சந்தை வேகமாக உயர்ந்திருந்தாலும் இந்த ஏற்றத்தில் இதுவரை பங்குகொள்ளாதப் பங்குகளும் இருக்கவே செய்கிறது. அந்த பங்குகள் என்னென்ன என்பதைப் பிறகு சொல்கிறேன். அதற்கு முன்பு சந்தை இன்று எப்படி இருக்கிறது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு நான் நாணயம் விகடனுக்கு அளித்த பேட்டியில், ரூபாய் மதிப்பு சரிந்துகொண்டே இருக்கிறது. ரிசர்வ் வங்கியிடமும் கையிருப்பு இல்லை. ஏற்றுமதியும் 15 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அந்நிய முதலீடு 67 சதவிகிதம் குறைந்திருக்கிறது. இவ்வளவு பிரச்னைகள் நம்மை சுற்றி இருக்கும்பட்சத்தில் மத்திய அரசாங்கம் கட்டாயமாக சில சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று சொல்லி இருந்தேன். நான் சொல்லி இருந்த பெரும்பாலான சீர்திருத்தங்களையும் மத்திய அரசு இப்போது கொண்டு வந்திருக்கிறது. அதன் காரணமாக சந்தை உயர்ந்திருக்கிறது.

கடந்த வியாழக்கிழமை அன்று மத்திய அமைச்சரவை இன்ஷூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவிகிதத்திலிருந்து     49 சதவிகிதமாக அதிகரிக்க ஒப்புதல் தந்திருக்கிறது. அதேபோல பென்ஷன் துறையிலும் 26 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. கொள்கை அளவில் அனுமதி தந்திருந்தாலும், இன்னும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் வாங்க வேண்டும். என் கணிப்பின்படி, நாடாளுமன்றத்தில் அனுமதி வாங்கிவிட முடியும் என்றே தோன்றுகிறது.

ஏற்றத்துக்கு காத்திருக்கும் பங்குகள்!

ஆனாலும் சிலர் இதற்கு ஒப்புதல் வாங்க முடியாது என்றும், மத்திய அரசு தன்னுடைய முழுக் காலத்தையும் பூர்த்தி செய்யாது என்றும் சொல்கிறார்கள். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. கட்சிகளுக்கு இருக்கும் பலத்தை வைத்துப் பார்த்தாலே இந்த அரசாங்கம் கடைசி வரை கவிழ வாய்ப்பில்லை என்று சொல்லலாம். என்னுடைய கணிப்பின்படி, இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைத்துவிட்டால் இந்த வருட இறுதிக்குள் சந்தை புதிய உச்சத்தைத் தொடும். ஒருவேளை அப்படி நடக்காவிட்டால் அடுத்த வருடம் மார்ச்சுக்குள் புதிய உச்சத்தை சந்தை தொட வாய்ப்பு இருக்கிறது.

ஏற்றத்துக்கு காத்திருக்கும் பங்குகள்!

பொருளாதாரத்தில் ஐ.சி.ஓ.ஆர். (Incremental Capital Output Ratio) என்று சொல்வார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த விகிதம்  3.5 முதல் 4 என்ற அளவில் இருக்கிறது. அதாவது, ஒரு ரூபாய் மதிப்புள்ள பொருளை புதிதாக உற்பத்தி செய்ய 4 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இது ஐ.டி. துறை            1 என்ற அளவிலும், கட்டுமானத் துறையில்     5 என்ற அளவிலும் இருக்கக்கூடும். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்களால் சுமார் 40 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவில் முதலீடுகள் வரும். அப்படி வரும்பட்சத்தில் ஐ.சி.ஓ.ஆர். கணக்குப்படி பார்த்தால் இந்தியாவின் ஜி.டி.பி. 0.7 சதவிகிதம் வரை உயர வாய்ப்பு இருக்கிறது.

இந்தியாவின் ஜி.டி.பி.க்கும் ரூபாய் மதிப்புக்கும் அந்நிய முதலீடு தேவை. முன்பெல்லாம் இந்தியாவில் இருந்து வெளியே செல்லும் முதலீடு மிகவும் குறைவு. ஆனால், இப்போது இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் நிறையவே முதலீடு செய்கின்றன. இங்கிருந்து நிறைய பணம் செல்வதால் நமக்கு அந்நிய முதலீடு நிச்சயம் தேவை.

இந்த சமயத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். அதாவது, உலகப் பொருளாதாரம் ஸ்திரமாக இன்னும் பத்து வருடம் ஆகும் என்று ஐ.எம்.எஃப். தலைவர் சொல்லி இருக்கிறார். இது சீனாவுக்கு நல்ல செய்தி அல்ல. காரணம், சீனா முழுக்க முழுக்க ஏற்றுமதியை நம்பி இருக்கும் நாடு. உலகப் பொருளாதாரம் சரி இல்லை என்றால் அவர்களது ஏற்றுமதி பெரிய அளவில் பாதிப்படையும். மேலும், சம்பள உயர்வு உள்ளிட்ட சில பிரச்னைகள் காரணமாக அவர்களின் வளர்ச்சி (பொருளாதாரத்தின் அளவு அல்ல, வளர்ச்சி விகிதம்தான்) வரும் காலத்தில் குறைய வாய்ப்பு இருக்கிறது. அப்படிப்பட்ட சமயத்தில் அவர்களைவிட    0.1 சதவிகிதம் வளர்ச்சி அதிகமாக இருந்தாலே உலக நாடுகளின் கவனம் நம் மீது திரும்பும்; அப்போது இங்கு முதலீடுகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்பு இருக்கிறது. அந்த சமயத்தில் இந்திய சந்தைகள் இன்னும் வேகமாகச் செல்ல வாய்ப்பு இருக்கிறது'' என பல்வேறு விஷயங்களை விளக்கியவர், இந்த ஏற்றத்தில் இதுவரை பங்குகொள்ளாத, ஆனால் ஏறுவதற்குத் தயாராக இருக்கும் பங்குகளைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

ஏற்றத்துக்கு காத்திருக்கும் பங்குகள்!

''சந்தையில் சில முன்னணி நிறுவனங்களின் பங்குகள் வேகமாக மேலே உயரும். அதே சமயம் மதிப்பு இல்லாத சில பீட்டா பங்குகளும்கூட உயரும். எந்த வகையான சந்தையாக இருந்தாலும் சரி, முதலீட்டுக்கு என்று சில பங்குகள் இருக்கவே செய்கிறது. அப்படிப்பட்ட பங்குகளைத்தான் நான் தேர்வு செய்து தருகிறேன். இந்த பங்குகளின் மதிப்பு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது.           12 முதல் 18 மாதங்கள் வரை இந்த பங்குகளில் முதலீடு செய்து வைத்திருந்தால் நல்ல லாபம் பார்க்கலாம்!'' என்று முடித்தார்.

சந்தையில் அதிகபட்ச பயம் இருக்கும்போது முதலீடு செய்ய வேண்டும்; அதிகபட்ச நம்பிக்கை வரும்போது விற்க வேண்டும் என்பது முதலீட்டு மேதைகள் சொல்லும் உண்மை. இப்போதுகூட அதிகபட்ச நம்பிக்கை என்ற நிலையை சந்தை அடையவில்லை என்றே தோன்றுகிறது. இப்போதாவது முதலீடு செய்யுங்களேன்.

- வா.கார்த்திகேயன்.