Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
##~##
டா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
டா காபி மற்றும் பி.ஏ.எஸ்.எஃப். இந்தியா ஆகிய பங்குகளை கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தேன். ஆனால், இந்த இரண்டு பங்குகளும் நம்முடைய இலக்கு விலைக்கு வரவில்லை. இதில் என்ன ஒரு விஷேசம் என்னவென்றால், டாடா காபி பங்கினை ஏற்கெனவே ஒருமுறை நான் பரிந்துரை செய்திருந்தேன். அப்போதும் நான் பரிந்துரைத்த விலைக்கு வரவில்லை. எனவே, அந்த பங்கை இப்போதைக்கு விட்டுவிடுவோம். இனி கொஞ்ச நாளைக்கு, அதாவது தீபாவளி வரைக்கும், நாம் பெரிய அளவுக்கு முதலீடு செய்ய வேண்டாம்.
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தை எப்படி?

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

அரசாங்கத்தின் அறிவிப்புகள் காரணமாக சந்தை வேகமாக ஏறிக்கொண்டிருக்கிறது. அந்த ஏற்றம் இன்னும் தொடரவே வாய்ப்பு அதிகம். தற்போது 5746 புள்ளிகளில் இருக்கும் நிஃப்டி 5900 புள்ளிகளுக்குச் செல்லலாம். 6000 புள்ளிகள் 6133 புள்ளிகள் வரைகூட செல்லலாம்.

ஆனால், சந்தை இவ்வளவு ஏறினாலும் கொஞ்சம் கவனமாக இருப்பதும் நல்லது. டெக்னிக்கல்படி சந்தை பலமாக இருக்கிறது. 5600 புள்ளிகளுக்கு கீழே செல்லாத வரை சந்தையில் சரிவு இருக்காது. ஆனால், 5600 புள்ளிகளுக்குக் கீழே முடியும்போது (குளோஸிங்) சந்தை மிக வேகமாகக் குறையலாம். அது கடந்த வெள்ளிக்கிழமை தவறான 'ட்ரிக்கர்’ மூலம் ஏற்பட்ட நிஃப்டி புள்ளிகள் அளவுக்குகூட கீழே இறங்க வாய்ப்பு இருக்கிறது. அதுவரை சந்தையின் ஏற்றத்தைப் பயன்படுத்தி நாம் லாபத்தைச் சம்பாதித்துக்கொள்ளலாம். இறக்கம் வரும்போது முதலீடு செய்யலாம்.

வட இந்தியர்கள் தீபாவளி சமயத்தில் புதுக் கணக்கு துவங்குவார்கள். அந்த சமயத்தில் அதிக விற்பனை நடக்கும். அதனால், தீபாவளி சமயத்தில் புதிய முதலீடுகளை யோசிப்போம். இடைப்பட்ட காலத்தில் மதிப்புள்ள பங்குகள் கிடைக்கும்பட்சத்தில் முதலீடு செய்யலாம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

போர்ட் ஃபோலியோவின் நிலைமை:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இந்த வாரமும் நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து ஒரு பங்கு வெளியேறியது. அது டியூப் இன்வெஸ்ட்மென்ட். மேலும், பல பங்குகள் இலக்கு விலையை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. நஷ்டத்தில் இருந்து பல பங்குகள் லாபப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. ஒட்டுமொத்தமாக நமது போர்ட்ஃபோலியோ 20,524 ரூபாய் லாபத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் பேயர் கிராப்சயின்ஸ் பங்கில் நாம் லாபம் பார்ப்பது நல்லது. அந்த பங்கிற்கு 1,125 ரூபாயை இலக்கு விலையாகச் சொல்லி இருந்தேன். ஆனால், கடந்த வாரத்தில் 1,099 ரூபாய் வரை சென்றது. சந்தையின் ஏற்றத்தில் நாம் லாபம் பார்ப்பது நல்லது. அதனால், இலக்கு விலையை 1,095 ரூபாயாக குறைத்துக்கொள்ளலாம்.

மேலும், கும்மின்ஸ் இந்தியா பங்கு இலக்கு விலைக்கு அருகில் வர்த்தகமாகிறது. இலக்கு விலையைக் கவனித்து லாபத்தை புக் செய்யவும்.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.