Published:Updated:

சூப்பர் வருமானம் தரும் டாப் ஃபண்டுகள்!

கவர் ஸ்டோரி

பிரீமியம் ஸ்டோரி
சூப்பர் வருமானம் தரும் டாப் ஃபண்டுகள்!

ஒரு சரியான பங்கில் முதலீடு செய்யப்படும் பணத்திற்குக் கிடைக்கும் லாபம் வேறு எதிலும் கிடைக்காது என்பது சத்தியமான உண்மை. ஆனால், எல்லா பங்கும் லாபம் தந்துவிடுவதில்லை. சில பங்குகள் தகுந்த ஆராய்ச்சி செய்யாமல் நாம் வாங்கும்போது அதன் மூலம் லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, கடுமையாக கையைக் கடித்துவிடுகிறது. இந்த நஷ்டத்தை எதிர்பார்க்காதவர்கள், பங்குச் சந்தையே சூதாட்டம் மாதிரிதான் என்று புலம்ப ஆரம்பித்துவிடுகிறார்கள்.

சூப்பர் வருமானம் தரும் டாப் ஃபண்டுகள்!

னால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இத்தனை ரிஸ்க் இல்லை. காரணம், அங்கு ஒரு போர்ட்ஃபோலியோவில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பங்குகள் இருக்கிறது. தவிர, பங்குச் சந்தையைப் போல தினமும் கண்கொத்திப் பாம்பாகப் பார்க்கவேண்டிய அவசியமும் இல்லை. ஃபண்டில் உள்ள பணத்தை நிர்வாகம் செய்ய தனி மேனேஜர்கள் இருப்பதால் சிக்கலே இல்லை.

மேலும், நம் தேவைக்கும் ரிஸ்க்குக்கும் ஏற்ப வருமானம் தரும் திட்டங்கள் இருக்கிறது. ஆண்டுக்கு 8 சதவிகிதம் தொடங்கி,  10%, 12%, 15% என நம் தேவைக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால், அதிக வருமானம் தரும் திட்டங்கள் அதிக ரிஸ்க் கொண்டதாக இருக்கும் என்பதும் உண்மை. மேலும் வரிச் சலுகை திட்டங்கள், லிக்விட் ஃபண்டுகள், தங்கம் சார்ந்த திட்டங்களில் முதலீடு, குறுகிய காலத்துக்கான கடன் ஃபண்டுகள், துறை சார்ந்த முதலீடு என பலவகையான சாத்தியங்கள் இதில் உண்டு.  

##~##
எல்லாவற்றுக்கும் மேலாக, பங்குச் சந்தை போல ஒரேமுறை முதலீடு என்பதும் இல்லை. மாதந்தோறும் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்து நீண்ட கால நோக்கில் நல்ல லாபம் பார்க்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்டில் இப்படி பல பாசிட்டிவ் விஷயங்கள் இருப்பதினாலேயே ஏதாவது ஒரு ஃபண்டில் பணத்தைப் போட்டு, சிலபல காலம் காத்திருந்தால், அது பல மடங்காக பல்கிப் பெருகிவிடும் என்று நினைக்கக்கூடாது. சில ஃபண்டுகள் குறிப்பிட்ட காலம் வரை நன்றாகச் செயல்பட்டு, இப்போது ஓய்ந்துபோயிருக்கும்; இன்னும் சில ஃபண்டுகள் அதிக ஏற்றஇறக்கம் கொண்டதாக இருப்பதால், யாருமே சீண்டாமல் கிடக்கும். இப்படி பலவாறாக கிடக்கும் ஃபண்டுகளில் டாப் ஃபண்டுகளை நாணயம் விகடன் வாசகர்களுக்காகத் தேர்வு செய்து தரமுடியுமா என ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் மீனாட்சியிடம் கேட்டோம். உடனே அவர் ஆராய்ச்சியில் இறங்கினார்.

''டாப் ஃபண்டுகளைத் தேர்வு செய்யும்போது கடந்த காலங்களில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்ட ஃபண்டுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும். அதாவது, கடந்த மூன்று வருடம், ஐந்து வருடம், ஏழு வருடம் என அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் ஃபண்டுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். ஒரு சிலர் பத்து வருட காலமாகச் செயல்பட்டு வரும் ஃபண்டுகளை கணக்கில் எடுத்துக்கொள்ளலாமே என்று கேட்கலாம். ஆனால், கடந்த

10 வருடங்களில் மிகவும் குறைவான ஃபண்டுகளே ஒவ்வொரு பிரிவிலும் கிடைக்கும். தவிர, கடந்த ஏழு வருடத்தில்தான் உச்சபட்ச நிலை மற்றும் உச்சபட்ச சரிவு ஆகிய இரண்டுமே நடந்திருக்கிறது. அதனால் இந்த ஏற்ற, இறக்கத்தையும் தாண்டி தாக்குப் பிடித்திருக்கும் ஃபண்டுகளை மட்டுமே நாம் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்வோம்.  

இதன்படி, கடந்த மூன்று, ஐந்து, ஏழு வருடங்களில் நல்ல லாபம் தந்த ஃபண்டுகளைத் தந்திருக்கிறேன். இன்னொரு  விஷயத்தையும் சொல்ல வேண்டும். அதாவது, சில ஃபண்டுகள் கடந்த ஐந்து வருடத்தில் மிகவும் நன்றாகச் செயல் பட்டிருக்கும். ஆனால், ஏழு வருடங்களை பூர்த்தி அடையவில்லை என்ற காரணத்துக்காக அவற்றை நாம் எடுத்துக்கொள்ளவில்லை. அதற்காக அந்த ஃபண்டுகள் முதலீட்டுக்கு ஏற்றவை அல்ல என்பதல்ல. அந்த ஃபண்டுகள் ஏழு வருடத்தை பூர்த்தி செய்யவில்லை என்பதாலேயே அவற்றை நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அதேபோல மல்டி கேப் ஃபண்டுகளில் ஒரு ஃபண்ட் மட்டுமே மூன்று காலங்களிலும் நல்ல வருமானம் தந்திருக்கிறது. அதனால் அந்த ஃபண்டை மட்டும் தந்திருக்கிறேன்.

இந்த பட்டியலில் வரி சேமிப்பு ஃபண்டுகளை நான் சேர்க்கவில்லை. காரணம், மூன்று காலங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டது ஒரே ஒரு டாக்ஸ் சேவிங் ஃபண்டுதான். ஆனால், அந்த ஃபண்டிற்கு கடந்த செப்டம்பர் மாதம் புதிய மேனேஜர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதனால் அந்த ஃபண்டின் வருமானம் பாதிக்கப்படுமா என்பது போகப் போகத்தான் தெரியும். இருந்தாலும், ஐந்து மற்றும் மூன்று வருடத்தில் சிறப்பாகச் செயல்பட்ட வரி சேமிப்பு ஃபண்டுகள் இருக்கவே செய்கிறது.

கடன் ஃபண்டுகள் குறுகிய காலத்துக்கு மட்டுமே தேவை என்பதால் மூன்று மாதம், ஆறு மாதம், ஒரு வருடம் என்ற மூன்று பிரிவிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கும் ஃபண்டுகளை கொடுத்திருக்கிறேன். அதே சமயத்தில் மன்த்லி இன்கம் திட்டங்களை ஆறு மாதம், ஒரு வருடம், மூன்று வருடம் என்று மூன்று பிரிவிலும் இடம் பிடிக்கும் ஃபண்டுகளைத் தந்திருக்கிறேன். (இந்த ஃபண்டுகளில் பங்குச் சந்தை சார்ந்த முதலீடு குறைவாகவும், கடன் சார்ந்த முதலீடு அதிகமாகவும் இருப்பதால் இப்படி எடுக்கப்பட்டிருக்கிறது)'' என்று முடித்தார் ஸ்ரீகாந்த் மீனாட்சி.

இனி டாப் ஃபண்டுகளின் பட்டியல் ஆரம்பம்.

சூப்பர் வருமானம் தரும் டாப் ஃபண்டுகள்!
சூப்பர் வருமானம் தரும் டாப் ஃபண்டுகள்!
சூப்பர் வருமானம் தரும் டாப் ஃபண்டுகள்!

- வா.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு