Published:Updated:

கம்பெனி ரிசர்ச்! - டாடா ஸ்பான்ஞ்!

கம்பெனி ரிசர்ச்! - டாடா ஸ்பான்ஞ்!

பிரீமியம் ஸ்டோரி
கம்பெனி ரிசர்ச்! - டாடா ஸ்பான்ஞ்!

இது ஒரு டாடா குழும நிறுவனம். டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முக்கியமான துணை நிறுவனமும்கூட. இந்த நிறுவனத்தைப் பற்றிதான் இந்த வாரம் நாம் அலசப் போகிறோம்.

துறை எப்படி?

##~##
நிறுவனத்தின் பெயரிலே தெரிகிறது, இந்நிறுவனம் ஸ்பான்ஞ் அயர்ன்-ஐ உற்பத்தி செய்கிறது என்று. ஸ்டீல் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்தான் இந்த ஸ்பான்ஞ் அயர்ன். இதை 'டைரக்ட் ரெடியூஸ்டு அயர்ன்’ (ஞிவீக்ஷீமீநீt ஸிமீபீuநீமீபீ மிக்ஷீஷீஸீ) என்றும் சொல்வார்கள். டாலமைட், இரும்புத் தாது மற்றும் நிலக்கரி போன்றவைதான் ஸ்பான்ஞ் அயர்ன் தயாரிப்பதற்கான முக்கியமான மூலப்பொருள். மிகச் சில நிறுவனங்கள் மட்டுமே நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவை பயன்படுத்துகின்றன.  

ஒரு டன் ஸ்பான்ஞ் அயர்ன் தயாரிக்க 1.7 டன் இரும்புத்தாது, 1.5 டன் நிலக்கரி, 0.05 டன் டாலமைட் தேவைப்படும். 65,000 கோடி மதிப்புடையது இந்திய ஸ்பான்ஞ் அயர்ன் துறை. உலகிலேயே ஸ்பான்ஞ் அயர்னை அதிகளவு தயாரிப்பது இந்தியாதான். உலக ஸ்பான்ஞ் அயர்னில்        43 சதவிகிதத்தை இந்தியாதான் தயாரிக்கிறது. 2000-ம் ஆண்டு இந்தியாவில் 5 மில்லியன் டன் ஸ்பான்ஞ் அயர்ன் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், இப்போது 35 மில்லியன் டன் உற்பத்தி செய்யும் அளவுக்கு இந்திய ஸ்பான்ஞ் அயர்ன் துறை வளர்ந்திருக்கிறது.

நிறுவனம் எப்படி?

ஏற்கெனவே சொன்னது போல இது டாடா ஸ்டீல் நிறுவனத்தின் துணை நிறுவனம். 1982-ம் ஆண்டு டாடா ஸ்டீல்  ஒடிஷா மாநில அரசுடன் இணைந்து டாடா ஸ்பான்ஞ் அயர்ன் நிறுவனம் ஆரம்பித்தது. பிறகு ஒடிஷா மாநில அரசின் பங்குகளையும் டாடா ஸ்டீல் நிறுவனமே வாங்கிக்கொண்டது. ஆரம்பத்தில் 90,000 டன் ஸ்பான்ஞ் அயர்ன் உற்பத்தி செய்யும் நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் இப்போது 3.9 லட்சம் டன் ஸ்பான்ஞ் அயர்னை உற்பத்தி செய்கிறது. ஸ்பான்ஞ் அயர்ன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அறிக்கைபடி பெரிய நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தித் திறனில் சராசரியாக 75 சதவிகிதம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. ஆனால், டாடா ஸ்பான்ஞ் நிறுவனம் தன்னுடைய உற்பத்தித் திறனில் சுமார் 95 சதவிகிதம் வரை உற்பத்தி செய்கிறது. இதற்கு காரணம், இந்நிறுவனத்துக்கு மூலப்பொருட்கள் கிடைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை.

இதன் முக்கியமான மூலப்பொருளான இரும்புத் தாதுவை டாடா ஸ்டீல் நிறுவனத்திடமிருந்து வாங்கிக்கொள்கிறது. தவிர, ஸ்பான்ஞ் தொழிற்சாலைக்கும், இரும்புத்தாது கிடைக்கும் இடத்துக்குமான தொலைவு வெறும் 25 கிலோ மீட்டர்தான். இதனால் குறைந்த செலவில் அதிக உற்பத்தியை இந்நிறுவனம் செய்ய முடியும்.

கம்பெனி ரிசர்ச்! - டாடா ஸ்பான்ஞ்!

மேலும், இன்னொரு முக்கியமான மூலப்பொருளான நிலக்கரி கிடைப்பதிலும் இந்நிறுவனத்துக்கு பிரச்னை இல்லை. ஒடிஷாவில் (தால்சர்) நிலக்கரி சுரங்கத்தில் 45 சதவிகித பங்கினை இந்நிறுவனம் வைத்திருக்கிறது. இந்த சுரங்கத்தில் 120 மில்லியன் டன் ரிசர்வ் நிலக்கரி இருப்பதாகத் தெரிகிறது. இப்போதைக்கு தென் ஆப்பிரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து வந்தாலும், 2014-ம் ஆண்டு இந்த சுரங்கத்தில் இருந்து உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கலாம். இதுபோன்ற காரணங்களால் உற்பத்திச் செலவு வருங்காலங்களில் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு ஒரு டன் ஸ்பான்ஞ் அயர்ன் தயாரிக்க சுமார் 17,000 ரூபாய் செலவாகிறது. இன்னும் இரண்டு வருடங்களில் இந்த தொகை 13,000 ரூபாய்க்கு கீழே செல்ல வாய்ப்பு இருக்கிறது.

இந்நிறுவனம் ஸ்பான்ஞ் தயாரிக்கும்போது கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரமும் உற்பத்தி செய்கிறது. இப்போதைக்கு 26 மெகாவாட் உற்பத்தி செய்யும் இந்நிறுவனம் கூடிய விரைவில் 51 மெகாவாட்-ஆக அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது. தற்போதைய நிலையிலே இந்நிறுவனம் தன்னுடைய தேவைக்கு அதிகமாக இருக்கும் மின்சாரத்தை மாநில மின்வாரியத்துக்கு விற்றுவருகிறது. உற்பத்தி அதிகரிக்கும்போது இன்னும் வருமானம் அதிகரிக்கும். இந்நிறுவனத்துக்கு இது பெரிய வருமானம் இல்லை என்றாலும் இது திறமையான நிர்வாகத்தையே காண்பிக்கிறது.

கம்பெனி ரிசர்ச்! - டாடா ஸ்பான்ஞ்!

நிதிநிலைமை எப்படி?

கடந்த காலத்தில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி பெரிய அளவில் இல்லை என்றாலும் சீராகவே இருந்து வந்திருக்கிறது. இருந்தாலும் மேலே பார்த்த காரணங்களால் அடுத்த இரண்டு/மூன்று நிதி ஆண்டுகளுக்கு இந்த நிறுவனம்                          15 சதவிகித வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாடா ஸ்டீல் இந்நிறுவனத்தில் தன்னுடைய பங்கினை 51 சதவிகிதமாக அதிகரித்திருப்பது அந்நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையே காட்டுகிறது. மேலும், இந்நிறுவனம் கடனில்லா நிறுவனம். 220 கோடி ரூபாயை கைவசமாக வைத்திருக்கிறது. இத்தொகை இந்நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனில் பாதி. (ஒரு பங்குக்கு 160 ரூபாய் என்ற அளவில் இருக்கிறது.) இந்த தொகை 2014-ம் ஆண்டு இறுதியில் 330 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர, இந்நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ந்து டிவிடெண்ட் கொடுத்துவரும் நிறுவனமும்கூட. இதன் பி.இ. விகிதமும் கவர்ச்சியாகவே இருக்கிறது. இது கடந்த ஐந்து வருட சராசரியில் இருக்கிறது.

வாய்ப்புகள்?

இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் ஸ்பான்ஞ் அயர்ன் முழுவதுமே கிட்டத்தட்ட டாடா ஸ்டீல் நிறுவனமே வாங்கிகொள்வதால் விற்பனையில் எந்த பிரச்னையும் இல்லை. ஸ்டீல் உற்பத்திக்குத் தேவை இருந்தால்தான் இதுபோன்ற நிறுவனங்களுக்கு வேலை. கடந்த ஐந்து வருடங்களில் தனிமனித ஸ்டீல் நுகர்வு 25 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. (2007-ல் 45.8 கிலோ, 2011-ல் 57 கிலோ). இனிவரும் காலத்திலும் இதே அளவுக்கு அதிகரிக்கும் என்று சொல்லா விட்டாலும் ஸ்டீலின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்.

ரிஸ்க் என்ன?

நிலக்கரி, இரும்புத் தாது உள்ளிட்டவற்றில் மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் தன்னுடைய கொள்கைகளை மாற்றி அறிவிக்க வாய்ப்புண்டு. அதே சமயம், விலைகளை நிர்ணயம் செய்யவும் உரிமை இருக்கிறது. மேலும், சீனாவின் ஸ்டீல் தேவை குறைந்துகொண்டே வருகிறது.

இந்தியப் பொருளாதாரத்தில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டாலும் ஸ்டீல் தேவை குறைந்துவிடும். மேலும், டாடா ஸ்பான்ஞ் நிறுவனத்தில் டாடா ஸ்டீல் நிறுவனம் 51 சதவிகிதம் பங்குகளை வைத்திருக்கிறது. ஒருவேளை இந்நிறுவனத்தை டாடா ஸ்டீல் நிறுவனம் இணைத்துகொள்ளும் ரிஸ்க்கும் இருக்கிறது.

இருந்தாலும், இந்த நிறுவன பங்கில் முதலீடு செய்யலாம். காரணம் உற்பத்திக்கும் விற்பனைக்கும் எந்தவிதமான பிரச்னையும் இல்லை. நிதிநிலைமை மிகவும் நன்றாக இருக்கிறது. அதைவிட தற்போதைய மதிப்பு கவர்ச்சியாக இருப்பதால் இந்த பங்கில் முதலீடு செய்யலாம் என்பதே எங்கள் டீமின் பரிந்துரை.

- நாணயம் டீம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு