Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த வாரம் மட்டுமல்ல, கடந்த இருபது நாட்களாகவே சந்தை ஒரு ரேஞ்ச் பவுண்டிலே இருந்து வந்திருக்கிறது. இருந்தாலும், சென்ற வாரம் நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து இமாமி மற்றும் பேயர் கிராப்சயின்ஸ் ஆகிய இரண்டு பங்குகள் வெளியேறியது.

##~##
ந்த இரு பங்குகள் வெளியேறியதைத் தொடர்ந்து, இப்போதைக்கு நமது போர்ட்ஃபோலியோவில் வெறும் 13 பங்குகள் மட்டுமே இருக்கிறது. விதிமுறைப்படி இன்னும் ஏழு இடங்கள் காலியாக இருக்கிறது. மேலும், நமது முதலீடு இப்போது 1 லட்ச ரூபாய்க்கு கீழே சென்றுவிட்டது. அதனால் புதிய பங்குகளில் முதலீடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம். ஆனால், ஏற்கெனவே நான் சொன்னபடி தீபாவளி வரைக்கும் நாம் காத்திருப்பது நல்லது.

இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அமெரிக்க சந்தையான டவ் ஜோன்ஸ் டெக்னிக்கல்படி கொஞ்சம் 'வீக்’காக இருக்கிறது. அந்த சந்தை சுமார்              1000 புள்ளிகள் வரை சரிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி சரியும்போது இந்திய சந்தையும் சரியும். மேலும், இந்திய சந்தை 5629 முதல் 5729 என்ற 100 நிஃப்டி புள்ளிகள் வித்தியாசத்திலேயே வர்த்தகமாகி வருகிறது. சந்தையால் மேலேயும் செல்ல முடியவில்லை, கீழேயும் செல்ல முடியவில்லை. இந்த சூழ்நிலையில் அமெரிக்க சந்தை சரிந்தால் நம் சந்தையும் சரியலாம்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

கடந்த சில நாட்களாக அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையை விட்டு வெளியேற ஆரம்பித்துவிட்டார்கள். மேலும், நிதின் கட்காரி, எஸ்.எம்.கிருஷ்ணா விவகாரங்களால் கார்ப்பரேட் கவர்னன்ஸ் மீண்டும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் ரியல் எஸ்டேட், இன்ஃப்ரா மற்றும் அரசியலோடு நெருங்கிய தொடர்புகொண்ட புரமோட்டர்களால் நடத்தப்படும் பங்குகளில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஞாயிறு அன்று எதிர்பார்க்கப்படும் அமைச்சரவை மாற்றம், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் ஆகும் மசோதாக்கள் உள்ளிட்டவையைப் பொறுத்துதான் சந்தையின் போக்கு இனி இருக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், அமெரிக்க தேர்தலில் ஒபாமா ஜெயித்தால் அவுட் சோர்ஸுக்கு வரிவிலக்கு கிடையாது என்று அவரே தெளிவாகச் சொல்லிவிட்டார். இதனால், ஐ.டி. நிறுவனங்கள் தடுமாறுகின்றன.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இத்தனை விஷயங்களையும் மனதில் வைத்துதான் புதிய முதலீடுகளைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. அடுத்து என்ன பங்கு வாங்கலாம் என்று ஏறக்குறைய முடிவு செய்துவிட்டேன். ஆனால், இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் என்பதால் அதுவரை பொறுமையாக இருப்போம்!

தொகுப்பு: - வா.கார்த்திகேயன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு