Published:Updated:

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
##~##
நீ
ண்ட நாட்களுக்குப் பிறகு தெர்மேக்ஸ் பங்கினை வாங்கச் சொல்லி இருந்தேன். அந்த பங்கினை கடந்த திங்கட்கிழமையே வாங்கி இருக்க முடியும். முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்னும் நமது போர்ட்ஃபோலியோவில் ஆறு பங்குகளை வாங்கிச் சேர்க்கலாம். ஆனால், இப்போதைக்கு அதை செய்ய வேண்டாம். டவ்ஜோன்ஸ் முக்கியமான சப்போர்ட் நிலையை உடைத்துக்கொண்டு வர்த்தகமாகி வருகிறது. அதனால், வரும் வாரங்களில் அமெரிக்க சந்தை இன்னும்கூட சரிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, நாம் பொறுமையாகக் காத்திருப்பதே நல்லது. சந்தையால் 5600 புள்ளிகளுக்குக் கீழேயும் செல்ல முடியவில்லை; அதே சமயத்தில், 5800 புள்ளிகளுக்கு மேலேயும் செல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஏழு வாரங்களாக இதே நிலையிலே சந்தை இருந்து வருகிறது. இது நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை. சந்தை கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. ஏதோ ஒரு பக்கம் சந்தையில் டிஸ்ட்ரிபியூஷன் நடந்துகொண்டே இருக்கிறது.
உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

நமது போர்ட்ஃபோலியோ வில் இருக்கும் பங்குகளின் விலையில் பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கிறது. ஆனால், இரண்டு பங்குகளின் டிரெண்ட் மாறி வருகிறது. ஒன்று, ஆதித்யா பிர்லா நுவா. இந்த பங்கின் காலாண்டு முடிவு மிக நன்றாகவே இருக்கிறது. வெள்ளிக்கிழமை சந்தை சரிந்தபோதும் இந்த பங்கு இரண்டு சதவிகிதத்துக்கு மேல் உயர்ந்து முடிவடைந்தது. இன்ட்ராடே வர்த்தகத்திலும் இதைவிட அதிகமாக வர்த்தகமானது.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

அதேபோல எல்கான் இன்ஜினீயரிங் பங்கு பற்றியும் கடந்த வாரம் சொல்லி இருந்தேன். 52.50/53.00 நிலைகளைத் தாண்டும்போது அந்த பங்கு டிரெண்ட் வேறு திசையில் திரும்பி நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து லாபத்துடன் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னேன். வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக 54 ரூபாய்க்கு மேலே அந்த பங்கு சென்றது. இருந்தாலும், வெள்ளிக்கிழமை சந்தை சரிந்ததால் அந்த பங்கும் சரிந்துவிட்டது.

சந்தையின் சூழ்நிலை வரும் வாரத்தில் கைகொடுக்கும்பட்சத்தில் இந்த இரண்டு பங்குகளும் வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது. அப்போது புதிய பங்கில் முதலீடு செய்வதைப் பற்றி யோசிப்போம்!

இப்போதைய நிலைமையில் (நவ 9) நமது போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம் 18,991 ரூபாய்.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காக ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு