Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

டிரேடர்ஸ் பக்கங்கள்

பிரீமியம் ஸ்டோரி
டிரேடர்ஸ் பக்கங்கள்
##~##
5725
-ல் ஒரு ரெசிஸ்டன்ஸ் இருக்கின்றது. அதைத்தாண்ட நிறையவே எனர்ஜி தேவைப்படும் என்றும் வேகமான ஏற்றத்துடன் ஓப்பன் ஆகி 5735 லெவலுக்கு மேலே  வால்யூமுடன் ஒரு நாளுக்கு மேல் குளோஸானால் மட்டுமே டிரெண்ட் முழுவதுமாக மாறியுள்ளது என்று சொல்லமுடியும் என்றும், அதுவரை லாங் சைடு வியாபாரத்தில் உடனடியாக லாபத்தை புக் செய்துகொள்வதே நல்லது என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம். முதல் மூன்று நாட்கள் ஏற்றத்தைச் சந்தித்த நிஃப்டி வியாழன் மற்றும் வெள்ளியில் இறங்கி 5686-ல் குளோஸானது.

இன்னமும் கொஞ்சம் பாசிட்டிவ் அவுட்லுக் நிஃப்டியில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றது. 5580 லெவல்களைத் தாண்டி இறங்கினால் மட்டுமே இந்த பாசிட்டிவ் அவுட்லுக் முழுமையாக வெளியேறிவிட வாய்ப்புள்ளது.  வரும் வாரம் வழக்கத்தைவிட குறைவான டிரேடிங் நாட்களைக் கொண்டது. தீபாவளி டிரேடிங் சென்டிமென்ட் வேறு இருக்கின்றது. எனவே, பாசிட்டிவ் அவுட்லுக்கை தீபாவளி வரை மெயின்டெய்ன் செய்ய வாய்ப்புள்ளது. மீண்டும் வியாழனன்று இறக்கத்தைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே, ஓவர்நைட் பொசிஷன்களை முழுவதுமாகத் தவிர்ப்பது நல்லது. டெக்னிக்கல் மூவ்களை வைத்து ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் செய்வது மட்டுமே இந்த வாரத்தில் சரியான ஸ்ட்ராட்டஜியாக இருக்கும்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு