Published:Updated:

சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மளிகைக் கடைகளிலும் சிலிண்டர் விற்பனை!

விகடன் விமர்சனக்குழு
சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மளிகைக் கடைகளிலும் சிலிண்டர் விற்பனை!
சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மளிகைக் கடைகளிலும் சிலிண்டர் விற்பனை!
சூப்பர் மார்க்கெட்டுகளிலும் மளிகைக் கடைகளிலும் சிலிண்டர் விற்பனை!

புதுடெல்லி: ஐந்து கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர்கள் மளிகைக் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்கப்பட உள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகளில் 5 கிலோ சிலிண்டர்கள் ஏற்கனவே விற்கப்பட்டு வருகிறது. அதை விரிவுப்படுத்தும் விதமாக மளிகைக் கடைகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்கப்பட உள்ளது.

அதன்படி, சென்னை, பெங்களூர், கோரக்பூர், லக்னோ, அலிகர் ஆகிய நகரங்களில் 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர்களை மளிகைக் கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசு மானியம் இல்லாத இந்த சிலிண்டர்களின் விலை நகரங்களை பொறுத்து 1,600 ரூபாய் முதல் 1,700 ரூபாய் வரை இருக்கும். முதல் கட்டமாக 5 நகரங்களில் உள்ள 11 கடைகளில் இதன் விற்பனை தொடங்கியுள்ளது என்றும், பிறகு இது 50 நகரங்களுக்கு விரிவாக்கப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.