Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு : வா.கார்த்திகேயன்

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு : வா.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

விதிமுறைகளின்படி நாம் போர்ட்ஃபோலியோவை அமைத்து வருவதால்தான், குறிப்பிட்ட விலையை அடைந்தவுடன் விற்றுவிடுகிறோம். இருந்தாலும், சில சமயங்களில் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்கு நம் இலக்கு விலையைத் தாண்டியும் நல்ல லாபம் தந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா வங்கி இப்போது நல்ல விலையில் வர்த்தகமாகி வருகிறது. சுமார் 100 ரூபாய் என்பதை இலக்கு விலையாக வைத்தோம். அந்த விலையில் விற்றும் விட்டோம். ஆனால், அந்த பங்கு இப்போது 150 ரூபாய்க்கு மேலே வர்த்தகமாகிறது.

 அதுபோல, ஆதித்யா பிர்லா நுவா, மஹிந்திரா ஹாலிடே உள்ளிட்ட பங்குகள் இலக்கு விலையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இதில் மஹிந்திரா ஹாலிடே பங்கின் இலக்கு விலை 344 ரூபாயாக இருக்கிறது. ஆனால், அந்த பங்கு டெக்னிக்கலாக இப்போது மிகவும் பலமாக இருக்கிறது. அதனால் 375 மற்றும் 400 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதற்காக இலக்கு விலையை நாம் மாற்றப் போவதில்லை. அந்த பங்கு இன்னும் மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லவே இதைச் சொன்னேன். இந்த பங்குகளை போல அதிக வாய்ப்புள்ள பங்குகளை போர்ட்ஃபோலியோவில் கொண்டுவர பார்க்கிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இப்போதைக்கு 14 பங்குகள் மட்டும் இருப்பதினால், இந்த வாரம் ஒரு பங்கில் முதலீடு செய்யலாம். அது பாரத் ஃபோர்ஜ். இந்த பங்கு கடந்த சில நாட்களாக 20 சதவிகிதம் வரை சரிந்துவிட்டது. ஆனாலும், இந்த பங்கு ஆட்டோமொபைல் உதிரிப்பாகத் துறையில் முக்கியமான நிறுவனம். நல்ல லாப வரம்பு இருக்கிறது. ஐரோப்பாவில் சில பிரச்னைகள் காரணமாக இந்த பங்கின் விலை சரிந்தது. அநேகமாக அந்த சரிவு இன்னும் சில நாட்களில் முடிந்து திரும்பலாம். அதனால் 250 ரூபாய்க்கு இந்த பங்கினை வாங்கலாம். ஒருவேளை இன்னும் சரிந்தால்கூட நமது விதிமுறைபடி சராசரி செய்துகொள்ளலாம்.

சந்தை எப்படி?

நமது போர்ட்ஃபோலியோவில் கடந்த சில வாரங்களாக எந்த பங்கினையும் நாம் சராசரி செய்யவில்லை. காரணம், சந்தை பெரிய அளவில் சரியவில்லை. அதேபோல சந்தை உயரவும் இல்லை. ஏற்கெனவே சொன்னது போல 5815 என்ற நிஃப்டி புள்ளிகளைத் தாண்டுவதற்கு மிகவும் சிரமப்படுகிறது. 2015/16 ஆண்டுகளில் 13500 புள்ளிகள் வரை நிஃப்டி செல்லலாம் என்றாலும், வரும் மார்ச் மாதத்துக்குள் ஒரு கரெக்ஷன் சாத்தியமே. அது 5400, 5200 புள்ளியா இல்லை 5000 புள்ளியா என்பது கேள்விக்குறி.

சந்தையில் சரிவு வருமா, எப்போது வரும் என்பதைப் பற்றி கவலைப் படாமல் முதலீடு செய்வதைப் பற்றியும், தொடர்ந்து உயர்ந்துவரும் பங்குகளில் லாபத்தை புக் செய்வதிலும் கவனம் செலுத்துவோம். நமது போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

17,741.75.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism