Published:Updated:

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை

எக்ஸ்பைரியில் திருப்பம் வரலாம்!

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை

எக்ஸ்பைரியில் திருப்பம் வரலாம்!

Published:Updated:
##~##

டேட்டா பாசிட்டிவ் வாக இருந்தால் சந்தையின் போக்கு சற்றே மாறலாம் என்றும், டெக்னிக்கல் ரெக்கவரி எந்த நேரமும் வரலாம் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கும் அளவுக்கு இறக்கம் இருந்தாலும், உலகளாவிய சென்டிமென்ட் கொஞ்சம் கொஞ்சமாக நெகட்டிவ்வாக மாறி வருவதால் இன்னும் ஒரு இறக்கம் தவிர்க்க முடியாததைப் போல் தோன்றுகின்றது என்றும் கடந்த இதழில் சொல்லியிருந்தோம்.

 கடந்த வாரத்தில் மூன்று நாட்கள் பெரிய அளவில் மாறுதலைக் காட்டாத நிஃப்டி வாராந்திர அளவில் வார இறுதியில் 52 பாயின்ட்கள் அதிகரித்து முடிவடைந்தது. 5545 என்ற லெவல் மிக முக்கியமானதாக மாறிக்கொண்டு வருகின்றது. 5545-க்கு கீழே வால்யூமுடன் போனால் 5440 வரையிலும் சுலபமாகப் போய்விட வாய்ப்பிருக்கின்றது. அதேபோல், 5650 என்ற லெவலைத்தாண்டி வால்யூமுடன் போனால் டிரெண்ட் கொஞ்சம் பாசிட்டிவ்வாக மாறிவிட்டது என்று சொல்லலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரும் வியாழன் எக்ஸ்பைரி வாரம் என்பதால் வாலட்டைலிட்டி அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது. கடந்த வெள்ளியன்று குளோஸிங்கை வைத்துப் பார்த்தால், மேலே போனாலும்கூட அதிகபட்சம் தூரம் 5665 என்ற லெவல்தான் என்பதைப்போல் தெரிகின்றது. எனவே, லாங் சைடு டிரேடிங்கை முழுவதுமாகத் தவிர்ப்பது நல்லது.

எக்ஸ்பைரி தினத்தன்று ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே வியாபாரம் செய்யலாம். புதன் மற்றும் வியாழனன்று வாலட்டைலிட்டி உச்சத்தைத் தொட வாய்ப்பிருப்பதால் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸு டனும், ஓவர்நைட் பொசிஷன்கள் வைக்காமலும் டிரேட் செய்வது மிக நல்லது.

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை
நிஃப்டி டெக்னிக்கல் பார்வை
நிஃப்டி டெக்னிக்கல் பார்வை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism