Published:Updated:

ஃபண்ட் கிளினிக் - கோல்டன் ரூல்ஸ் !

ஃபண்ட் கிளினிக் - கோல்டன் ரூல்ஸ் !

பிரீமியம் ஸ்டோரி
##~##
துவரை வாசகர்கள் பலரின் கேள்விகளுக்கும் பதில் அளித்து எனது எண்ணங் களை பகிர்ந்து கொண்டதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த வாரத்துடன் ஃபண்ட் கிளினிக் நிறைவுறுகிறது என்பதால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில கோல்டன் ரூல்ஸை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. நில முதலீட்டிற்கு நீங்கள் எவ்வளவு பொறுமை கடைப்பிடிக்கிறீர்களோ, அதே பொறுமையை உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளிலும் கடைப்பிடியுங்கள். இதில் கிடைக்கும் வசதி வேறு எந்த முதலீட்டிலும் கிடைக்காது.

2. நீங்கள் ஒரு சாதாரண முதலீட்டாளர் என்றால் டைவர்சிஃபைட் திட்டங்களிலேயே உங்கள் முதலீட்டை மேற்கொள்ளுங்கள். துறை சார்ந்த திட்டங்கள் வேண்டாமே!

3. முதியோர்கள் டிவிடெண்ட் ஆப்ஷனை நாடிச் செல்லட்டும். இளைஞர்கள் குரோத் ஆப்ஷனையே நாடிச் செல்லுங்கள்.

4. வருடத்திற்கு ஒரு முறை உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

5. எஸ்.ஐ.பி. முதலீடு பலருக்கும் உகந்தது. குருவி போல செல்வத்தைச் சேகரிப்பதற்கு ஒரு அருமையான முறை. உங்கள் கண்ணுக்குத் தெரியாமல், எந்தவித கஷ்டமும் இல்லாமல் உங்கள் செல்வம் வளரும்.

ஃபண்ட் கிளினிக் - கோல்டன் ரூல்ஸ் !

6. பொதுவாக ஐந்து ஃபண்டுகளுக்கு மேல் உங்கள் முதலீட்டை வைத்துக்கொள்ளாதீர்கள். அதேபோல், எஸ்.ஐ.பி. முறையில் எவ்வளவு முதலீடு செய்தாலும், ஐந்து எஸ்.ஐ.பி-க்கள் போதுமானது. அதிகமான ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் உங்களின் ரிஸ்க் குறையாது - மேற்கொண்டு பராமரிக்கும் தலைவலிதான் கூடும்.

7. உங்கள் தகுதிக்கு ஏற்ப முதலீட்டை அமைத்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிப்பவர், எஸ்.ஐ.பி. முறை மூலம் மாதம் ரூ.1,000 முதலீடு செய்வது அவ்வளவு பொருத்தமாக இருக்காது.

8. கம்ப்யூட்டரில் தினசரி உங்கள் முதலீட்டை பார்க்கும் பழக்கம் இருந்தால், அதை விட்டுவிடுங்கள். தினசரி முதலீட்டை பார்த்தால் அதை வளர விடமாட்டீர்கள்!

ஃபண்ட் கிளினிக் - கோல்டன் ரூல்ஸ் !

9. முடிந்தவரை இளம்வயதிலேயே முதலீட்டை ஆரம்பித்துவிடுங்கள். எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; முறையான முதலீட்டை எந்த வயதில் ஆரம்பிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

10. உங்களின் லாப எதிர்பார்ப்பை மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ இல்லாமல் நடுத்தரமாக வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தங்கமான விதிகளை பின்பற்றினாலே நீங்கள் முதலீட்டில் ஜொலிக்கலாம். இனி வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்...

நான் ஒரு அரசு ஊழியர். என் வயது 53. பிர்லா சன் லைஃப் டாப் 100 ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி. மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் ஃபண்ட், சுந்தரம் செலக்ட் மிட் கேப் ஃபண்ட், ரிலையன்ஸ் ஈக்விட்டீஸ் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் தலா 1,000 ரூபாய் வீதம் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்து வருகிறேன். இத்திட்டங்கள் சரியானவைதானா அல்லது ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பதைச் சொல்லுங்கள். இவை தவிர, மாதம் 2,000 ரூபாய் வீதம் அஞ்சலக ஆர்.டி.யிலும், 2,000 ரூபாய் வங்கி ஆர்.டி.யிலும், 3,000 ரூபாய் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. லைஃப்டைமிலும், 4,000 ரூபாய் ஐ.என்.ஜி. வைஸ்யாவிலும் முதலீடு செய்து வருகிறேன். எனது இந்த முதலீடு சரிதானா, இல்லை மாற்றம் செய்ய வேண்டுமா? நான் இன்னும்கூட 10,000 ரூபாய் முதலீடு செய்யத் தயார். இதற்கான திட்டங்களையும் பரிந்துரை செய்யுங்கள்!

- ஜானகி முரளி, மின்னஞ்சல் மூலமாக.

''அன்புள்ள ஜானகி,

நீங்கள் முதலீடு செய்துள்ள/செய்துவரும் திட்டங்கள் அனைத்தும் நன்றாகச் செயல்பட்டுவரும் திட்டங்களே. ஆனால், மிட் கேப் ஃபோக்கஸ் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திலும் சில திட்டங்களின் மேல் மேனேஜ்மென்டின் முழுக்கவனம் இருக்கும். அவற்றை முன்னணி (யீறீணீரீsலீவீஜீ) திட்டங்கள் என்று கூறுவர்.

அந்த வகையில் பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஒரு முன்னணித் திட்டமாகும். ஆகவே, பிர்லா டாப் 100 திட்டம் தற்போது நன்றாகச் செயல்பட்டாலும், அதற்குப் பதிலாக உங்கள் எஸ்.ஐ.பி. முதலீட்டை பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி திட்டத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள். ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் திட்டத்தில் நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள ஃபோலியோவிலேயே புதிய எஸ்.ஐ.பி-யை துவக்கிக்கொள்ளலாம்.

உங்களின் அஞ்சலக மற்றும் வங்கியில் செய்யும் ஆர்.டி. முதலீட்டை தொடர்ந்து வாருங்கள். ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ மற்றும் ஐ.என்.ஜி. வைஸ்யாவில் முதலீடு செய்து வருவதாகக் கூறியுள்ளீர்கள். அவைகள் இன்ஷூரன்ஸ் சார்ந்த முதலீடாக இருக்கும்பட்சத்தில், கட்டாயக் காலம் முடிந்தவுடன் அந்த முதலீடுகளை நிறுத்திவிடுங்கள். அதற்குப் பதிலாக மியூச்சுவல் ஃபண்டுகளில் உள்ள எம்.ஐ.பி. திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். உங்களின் மொத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை (புதிய ரூ.10,000 முதலீட்டையும் சேர்த்து) கீழ்க்கண்டவாறு மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.

ஃபண்ட் கிளினிக் - கோல்டன் ரூல்ஸ் !

எனது குடும்ப வருமானம் 40 ஆயிரம் (என் அப்பாவின் வருமானம் 25,000; என் வருமானம் 15,000). இதுவரை சொந்தமாக வீடோ, தங்க நகைகளோ வாங்கவில்லை. கடந்த ஆண்டு ஜூன் முதல் யூ.டி.ஐ. டிவிடெண்ட் யீல்ட் ஃபண்ட், யூ.டி.ஐ. மாஸ்டர்ஷேர் யூனிட், பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன், டி.எஸ்.பி. பிளாக்ராக் மிட் கேப், ரிலையன்ஸ் பேங்கிங், ரிலையன்ஸ் கோல்டு சேவிங்க்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இந்த திட்டங்கள் எல்லாம் சரிதானா? இன்னும்கூட 10,000 ரூபாய் முதலீடு செய்யத் தயார். அதற்கான திட்டங்களை பரிந்துரை செய்யுங்கள். இந்த முதலீடுகள் மூலம் நான் எதிர்பார்ப்பது இரண்டு விஷயங்களைத்தான். இரண்டு வருடத்துக்குப் பிறகு என் உயர் படிப்புக்குப் பணம் தேவை. பத்து ஆண்டுகளில் குறைந்தது ஆண்டுக்கு 10 சதவிகிதம் வருமானமாவது கிடைக்க வேண்டும். என் எதிர்பார்ப்பு ஈடேறுமா?

மீனா, மின்னஞ்சல் மூலமாக.

 ''டியர் மீனா,

இளம் வயதிலேயே நீங்கள் முதலீடுகளை துவக்கியுள்ளதற்குப் பாராட்டுக்கள்! ஏற்கெனவே உங்களுக்கு சம்பாத்தியம் இருப்பதால் டிவிடெண்ட் மூலம் பணவரத்துத் தேவையில்லை. ஆகவே, உங்கள் நீண்ட காலத் தேவைகளுக்கு குரோத் ஆப்ஷனிலேயே செல்லுங்கள். உங்களுக்கு அடுத்த இரண்டு வருடத்தில் படிப்பிற்கு பணம் தேவை எனக் கூறியுள்ளீர்கள். அதற்கான முதலீட்டை கடன் சார்ந்த திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளுங்கள். உங்கள் நீண்ட காலத் தேவைகளுக்காக டைவர்சிஃபைட் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் முதலீடு செய்துள்ள யூ.டி.ஐ டிவிடெண்ட் யீல்ட் மற்றும் யூ.டி.ஐ. மாஸ்டர்ஷேர் ஆகிய இரண்டும் நல்ல டிராக் ரெக்கார்டு உடைய கன்ஸர்வேட்டிவ் திட்டங்கள். அதே நிறுவனத்தில் உள்ள யூ.டி.ஐ. ஆப்பர்ச்சூனிட்டீஸ் திட்டம் சற்று வேகமாகச் செயல்படக் கூடியது. ஆகவே, அத்திட்டத்திற்கு மாறிக்கொள்ளுங்கள். ரிலையன்ஸ் பேங்கிங் துறை சார்ந்த திட்டமாகும். ஆகவே, அந்த ஃபண்டினைத் தவிர்க்கலாம். மற்ற இரண்டு ஃபண்டுகளையும் தொடரலாம். கீழ்க்கண்டவாறு உங்கள் போர்ட்ஃபோலியோவை அமைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மொத்த முதலீட்டுத் தொகை தெரியாததால், சதவிகித அடிப்படையில் உங்களின் நீண்ட கால முதலீட்டைத் தந்துள்ளேன். குறுகியகாலத் தேவைக்கேற்றாற்போல், கடன் திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

குறைந்தது 10% நீண்ட காலத்தில் கிடைக்கும் என கேரன்டி கொடுக்க முடியாது. ஆனால், உங்கள் முதலீட்டுக் காலமான 10 ஆண்டுகளில், அதைவிட அதிகமாக கிடைக்க வாய்ப்புண்டு. கடன் சார்ந்த திட்டத்தில் ஆண்டிற்கு 8 - 10% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.''

ஃபண்ட் கிளினிக் - கோல்டன் ரூல்ஸ் !

எனக்கு இரு பெண் குழந்தைகள். 15 ஆண்டுகள் கழித்து, இவர்களின் படிப்பு மற்றும் திருமணத்திற்கு 50-75 லட்ச ரூபாய் தேவை. ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200, ஃபிடிலிட்டி ஈக்விட்டி ஃபண்ட், கனரா ராபிகோ ஈக்விட்டி டைவர்ஸ், டி.எஸ்.பி. பிளாக்ராக் டாப் 100, ஹெச்.டி.எஃப்.சி. மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ ஃபோக்கஸ்டு புளூசிப், ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. இண்டெக்ஸ், ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ், சுந்தரம் செலக்ட் ஃபோக்கஸ்டு, ரிலையன்ஸ் ஈக்விட்டி டைவர்சிஃபைட் ஃபண்ட் என பத்து ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி. முறையில் மாதம் 15,500 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதுதவிர, சுந்தரம் எனர்ஜி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் 2008-ல் 50,000 ரூபாய் முதலீடு செய்தேன். என் முதலீடு எல்லாம் சரியாகத்தான் இருக்கிறதா?

அருணா, மின்னஞ்சல் மூலமாக.

''அன்புள்ள அருணா,

பொதுவாக நீங்கள் முதலீடு செய்துவரும் பெரும்பாலான திட்டங்கள் நல்ல திட்டங்களே! நீங்கள் செய்துவரும் மாத முதலீடான ரூ.15,500 மூலம் ஆண்டிற்கு 12% வருமான அடிப்படையில், இன்னும் 15 வருடத்தில் ரூ.70 லட்சத்தைத் தாராளமாக எதிர்பார்க்கலாம். ஆண்டிற்கு ஒருமுறை ஃபண்டுகளின் செயல்பாட்டை கவனித்துக்கொள்ளுங்கள். இது தவிர, திடீரென கிடைக்கும் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட்/ பி.பி.எஃப். போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள்.

சுந்தரம் செலக்ட் ஃபோக்கஸின் செயல்பாடு சுமாராகத்தான் உள்ளது. ரிலையன்ஸ் டைவர்சிஃபைட் பவர் ஒரு துறை சார்ந்த ஃபண்டாகும். ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ. இண்டெக்ஸ் திட்டத்திற்குப் பதிலாக அதே நிறுவனத்தில் இன்னும் வேகமாகச் செயல்படும் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஃபிடிலிட்டி ஃபண்டுகளின் நிர்வகிப்பு இம்மாதத்திலிருந்து முழுவதுமாக

எல் அண்ட் டி மியூச்சுவல் ஃபண்டிடம் கைமாறுகிறது. மேலும், ரூ.15,500 முதலீட்டிற்கு 10 ஃபண்டுகள் மிக அதிகம். கீழே உள்ள அட்டவணை யில் தரப்பட்டுள்ளது போல உங்கள் முதலீட்டை மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள். சுந்தரம் எனர்ஜி ஆப்பர்ச்சூனிட்டீஸை விற்றுவிடுங்கள். அதிலிருந்து வரும் தொகையை ஹெச்.டி.எஃப்.சி. மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் மற்றும் ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்சூனிட்டீஸில் முதலீடு செய்துகொள்ளுங்கள்.

ஃபண்ட் கிளினிக் - கோல்டன் ரூல்ஸ் !

வளைகுடாவில் வேலை பார்க்கும் எனக்கு இப்போது 31 வயது. மாதம் 2.5 லட்ச ரூபாய் சம்பளம். ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 ஃபண்டில் ரூ.85 ஆயிரமும், ஹெச்.டி.எஃப்.சி. பேலன்ஸ்டு ஃபண்டில் ரூ.25 ஆயிரமும், ஹெச்.டி.எஃப்.சி. மிட் கேப் ஃபண்டில் ரூ.10 ஆயிரமும், ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸில் ரூ.40 ஆயிரமும், ரிலையன்ஸ் கோல்டு சேவிங்ஸ் பிளானில் ரூ.10 ஆயிரமும், ரிலையன்ஸ் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் ரூ.10 ஆயிரமும் முதலீடு செய்திருக்கிறேன். ரிலையன்ஸ் பார்மா ஃபண்டில் எஸ்.ஐ.பி. மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்யத் தயார். இது தவிர, என் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும், எனது ஓய்வுக் காலத்திற்காகவும் மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யத் தயார். இதற்கான ஃபண்டுகளை பரிந்துரை செய்யுங்கள்.

டி.பாஸ்கர், மின்னஞ்சல் மூலமாக.

''டியர் பாஸ்கர்,

நீங்கள் முதலீடு செய்துள்ள/ செய்யவிருக்கும் ஏழு ஃபண்டுகளும் நல்ல ஃபண்டுகளே. ரிலையன்ஸ் பார்மா ஃபண்ட் தற்போது நன்றாகச் செயல்பட்டு வருகிறது. அது ஒரு துறை சார்ந்த திட்டம் என்பதால் நீங்கள் நேரம் பார்த்து வெளியேற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி செய்ய முடியாது என்று நீங்கள் நினைக்கும்பட்சத்தில், துறை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. நீங்கள் மாதம் ரூ.1 லட்சம் முதலீடு செய்யும்பட்சத்தில் கீழ்க்கண்டவாறு உங்கள் முதலீட்டை அமைத்துக்கொள்ளுங்கள்.

ஃபண்ட் கிளினிக் - கோல்டன் ரூல்ஸ் !

(ஃபண்ட் கிளினிக் முற்றும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு