Published:Updated:

கொட்டிக் கொடுக்கும் எட்டு பங்குகள்!

கொட்டிக் கொடுக்கும் எட்டு பங்குகள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

அதற்குள் ஒரு வருடம் முடிந்து விட்டது. 'பொற்காலமே இனிமேல்தான்’ என்ற தலைப்பில் 7-ம் ஆண்டு சிறப்பிதழில் இந்தியாவின் எதிர்காலம் குறித்தும், முதலீடு செய்யவேண்டிய பங்குகள் என்ன என்பது குறித்தும் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். டெக்னிக்கல் அனலிஸ்ட் ஸ்ரீராம் அந்த கட்டுரையில் இப்படிச் சொல்லி இருந்தார்.

''2013-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்தை உயர ஆரம்பித்து, பழைய உச்சமான 6300 புள்ளிகளைத் தாண்டும். சந்தை எப்போது தன்னுடைய பழைய உச்சத்தைத் தாண்டுகிறதோ, அப்போதிருந்து 2020-ம் ஆண்டு வரை சந்தை மிக வேகமாக உயரும். இடையில் அவ்வப்போது கொஞ்சம் சரிந்தாலும்,  2018-ம் ஆண்டுக்குள் நிஃப்டி 10200 புள்ளிகள் வரையும் சென்செக்ஸ் 30000 புள்ளிகள் வரையும் செல்லும்'' என்று  சொல்லி அதற்கான அடிப்படை காரணங்களையும் அந்த கட்டுரையில் விளக்கி இருந்தார் ஸ்ரீராம்.

கொட்டிக் கொடுக்கும்  எட்டு பங்குகள்!

கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி நாணயம் விகடன் 7-ம் ஆண்டு சிறப்பிதழில்  ஏழு பங்குகளை பரிந்துரை செய்திருந்தார் அவர்.   கடந்த ஓராண்டு (நவம்பர் 27, 2012 வரை) காலத்தில் சந்தை சுமார் 13 சதவிகிதம் உயர்ந்தது. ஆனால், ஸ்ரீராம் பரிந்துரைத்தப் பங்குகளோ சுமார் 23 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. உச்சபட்ச விலையில் அந்த பங்குகளை விற்றிருந்தால்,  சுமார் 36 சதவிகித லாபம் கிடைத்திருக்கும். நீண்ட காலத்தில் 3 முதல் 4 மடங்கு உயரும் என சொல்லி இருந்ததால் உச்சபட்ச விலையில் யாரும் விற்றிருக்க மாட்டார்கள்.

கொட்டிக் கொடுக்கும்  எட்டு பங்குகள்!

இந்நிலையில் இந்த எட்டாம் ஆண்டு சிறப்பிதழின்போதும் அவரைச் சந்தித்தோம். கடந்த வருடம் வாங்கிய பங்குகளை என்ன செய்யலாம், எட்டாம் ஆண்டு சிறப்பிதழுக்கு நம் வாசகர்களுக்கு சில  பங்குகளை பரிந்துரை செய்ய முடியுமா? என்று கேட்டோம். கொட்டிக் கொடுக்கும் எட்டு பங்குகளை அவர் பரிந்துரைத்தார். அந்த பங்குகளை பார்க்கும் முன், சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதை முதலில் விளக்கினார்.

''கடந்த வருடம் நான் பரிந்துரைத்த பங்குகள் குறித்து எந்த கருத்து மாற்றமும் இல்லை. ஏற்கெனவே சொன்னதுபோல அந்த பங்குகள் மூன்று முதல் நான்கு மடங்கு வரை செல்ல வாய்ப்புண்டு. உதாரணமாக, இப்போது சுமார் 870 ரூபாயில் இருக்கும் அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் பங்கு இன்னும் சில வருடங்களில் 5,000 ரூபாய்க்குச் செல்லும். தவிர, இந்த பங்குகளில் அடிப்படையிலும் எந்த நெகட்டிவ்-ஆன மாற்றமும் ஏற்படவில்லை என்பதால் அந்த முதலீடுகளைத் தொடரலாம்.

கடந்த ஆண்டு நான் சொன்னதுபோல, 2013-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு சந்தை தனது பழைய உச்சத்தைத் தாண்டும். இந்தியாவின் வளர்ச்சி 5 முதல் 6 சதவிகிதத்துக்குள்தான் இருக்கும் என்றாலும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் வளர்ச்சி மூன்று, நான்கு மடங்கு வரை அதிகம். இன்னும் சில ஆண்டு களில் உருவாகும் வேலைவாய்ப்புகள், இந்தியச் சந்தையில் இருக்கும் சீரான நுகர்வு போன்றவை பல உலக நாடுகளின் பார்வையை இந்தியாவை நோக்கி திருப்பும்.

வா.கார்த்திகேயன்

கொட்டிக் கொடுக்கும்  எட்டு பங்குகள்!

2020-ல் நாம் சந்திக்கப் போகும் புதிய உச்சத்துக்கான அடிப்படை 2015-16-லேயே நடக்கும். இருந்தாலும், பணவீக்கம், ஊழல்  போன்ற பிரச்னைகள் இருந்தாலும், சந்தை  அதையும் தனக்குள் கிரகித்துக்கொண்டு  மேலே  செல்லும். கடந்த காலத்திலும் சந்தை அப்படித்தான் சென்றிருக்கிறது. இனிவரும் காலத்திலும் அப்படியே செல்லும்!'' என்று முடித்தார் ஸ்ரீராம்.

அவரது கணிப்பு நிஜமாகட்டும்!

எட்டாம் ஆண்டு சிறப்பிதழுக்காக எட்டு பங்குகளை நமக்காகப் பரிந்துரை செய்தார் ஸ்ரீராம். இதில், ஐந்து பங்குகள் பண்டமென்டல் அடிப்படையிலும், மூன்று பங்குகள் டெக்னிக்கல் அடிப்படையிலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கொட்டிக் கொடுக்கும்  எட்டு பங்குகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு