Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

வா.கார்த்திகேயன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஆதித்யா பிர்லா நுவா மற்றும் மஹிந்திரா ஹாலிடே உள்ளிட்ட பங்குகள் இலக்கு விலையை நோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று கடந்த இதழில் சொன்னேன். அதுபோலவே நடந்தது. ஆதித்யா பிர்லா நுவா

பங்கு தன்னுடைய இலக்கு விலையான 1,037 ரூபாயை மிக எளிதாகக் கடந்தது. அதிகபட்சமாக அந்த பங்கு 1,080 ரூபாய்க்குக்கூட சென்றது. மஹிந்திரா ஹாலிடே பங்கும் மிக வேகமாக உயர்ந்தாலும் இலக்கு விலையை அடைய முடியவில்லை. வரும் வாரங்களில் அந்த பங்கு வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது. அதேபோல, என்.ஹெச்.பி.சி. பங்கும் மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த பங்கும் வெளியேறும் வாய்ப்பு அதிகம்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

கடந்த வாரம் சந்தை உயர்ந்ததால் எந்தப் பங்கும் சராசரி ஆகவில்லை. அதுபோலவே பாரத் ஃபோர்ஜ் பங்கில் முதலீடு செய்ய சொல்லி இருந்தேன். சந்தை உயர்ந்ததன் காரணமாக அந்த பங்கில் முதலீடு செய்ய முடியவில்லை. ஏற்கெனவே வாங்க முடியாத ஒரு பங்கு, இந்த வாரம் வெளியேறிய ஒரு பங்குக்கு என இந்த வாரம் இரண்டு பங்குகளை பரிந்துரை செய்கிறேன். அந்த பங்குகளை பரிந்துரை விலையில் முதலீடு செய்யுங்கள்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தற்போதைய நிலையில் 13 பங்குகள் நமது போர்ட் ஃபோலியோவில் இருக்கிறது. வரும் வாரங்களில் பங்குகள் வெளியேறுவதைப் பார்த்து புதிய பங்குகளில் முதலீடு செய்யலாம்.

சந்தை எப்படி?

கடந்த சில வாரங்களாக சந்தை ஒரு ரேஞ்ச் பவுண்டி லேயே உடைக்க முடியாமல் வர்த்தகமாகிக்கொண்டே வந்தது. நிஃப்டி 5815

(அக்-5, 2012) என்பதுதான் உச்சபட்ச புள்ளியாக இருந்தது. அந்த புள்ளியைக் கடந்த வியாழன் அன்று கடந்து 5833 புள்ளிகள் வரை சென்று இறுதியில் 5825 புள்ளிகளில் முடிவடைந்தது.

நான் ஏற்கெனவே சொன்னதுபோல, 5815 புள்ளிகளை கடந்து வர்த்தகம் ஆகும்போது சந்தை உயரும் என்று சொல்லி இருந்தேன். அதுபோலவே சந்தை மேலே செல்வதற்குதான் வாய்ப்பு அதிகம். 5900 புள்ளிகளில் இருந்து 6000 புள்ளிகள் வரை சந்தை செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 5700 புள்ளிகளுக்கு கீழே செல்லாத வரை சந்தை மேல் நோக்கியே இருக்கும். இந்த நிலைக்கு மேலே வர்த்தகமானாலே போதும் நமது பங்குகள் வெளியேறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

இருந்தாலும் இந்த சந்தையில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். இறங்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. பொதுவாக, சந்தை உச்சத்தில் இருக்கும்போதுதான் ரியல் எஸ்டேட் பங்குகள் உயர ஆரம்பிக்கும். ஆனால், இப்போது ரியல் எஸ்டேட் பங்குகள் உயர்ந்து வருவதையும் நாம் கவனிக்க வேண்டும். சிறிய ஏற்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது. லாபத்தை புக் செய்ய தவறாதீர்கள்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

போர்ட்ஃபோலியோவின் தினசரி முடிவு நிலவரங்களை www.vikatan.com  இணையதளத்தில் இலவசமாகவே பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு