Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

Published:Updated:
##~##

இரு வாரங்களுக்கு முன்பு, ஆதித்யா பிர்லா நுவா, மஹிந்திரா ஹாலிடே போன்ற பங்குகள் நமது போர்ட்ஃபோலியோவை விட்டு வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி இருந்தேன். அதுபோல கடந்த இதழில் ஆதித்யா பிர்லா நுவா வெளியேறியது. இப்போது மஹிந்திரா ஹாலிடே ரிசார்ட் பங்கும் வெளியேறி இருக்கிறது. மேலும், தெர்மேக்ஸ் பங்கு நமது இலக்கு விலையான 661 ரூபாயை தேசிய பங்குச் சந்தையில் டிசம்பர் 3 அன்று அடைந்துவிட்டது.

அதேசமயத்தில், கடந்த வாரம் இரண்டு பங்குகளை பரிந்துரை செய்திருந்தேன். அதில் இ.ஐ.டி. பாரி பங்கு மட்டுமே நான் பரிந்துரை செய்த விலைக்கு வந்தது. ஹெச்.எஸ்.ஐ.எல். பங்கு பரிந்துரை செய்த விலையைத் தாண்டிச் சென்றுவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

இப்போதைக்கு நமது போர்ட் ஃபோலியோவில் 12 பங்குகள் இருக்கிறது. இந்த வாரம் ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கினை பரிந்துரை செய்கிறேன். அந்த பங்கினை பரிந்துரை செய்யும் விலைக்கு வாங்கவும்.

அதுபோலவே, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் என்.ஹெச்.பி.சி. ஆகிய இரண்டு பங்குகளும் இலக்கு விலையை நோக்கி மிக வேகமாக நெருங்கி வருகிறது. அநேகமாக வரும் வாரங்களில் இந்த

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

இரண்டு பங்குகளும் நமது போர்ட்ஃபோலியோவைவிட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறது. அந்த பங்குகள் வெளியேறிய பிறகு புதிய முதலீடுகளைப் பற்றி யோசிப்போம்.

சந்தை எப்படி?

ரீடெய்ல் துறையில் அந்நிய முதலீட்டுக்கு எதிரான தீர்மானத்தில் மத்திய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நம்பிக்கையால் அரசு பேங்கிங் மற்றும் இன்ஷூரன்ஸ் மசோதாக்களும் வெற்றி கரமாக நிறைவேறலாம். இதன் காரணமாக, தற்போது உயர்ந்துவரும் சந்தை மேலும் உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். 5700 புள்ளிகளுக்கு கீழே சந்தை செல்லாதவரையில் தற்போதைய ஏற்றம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதுவரை நமது பங்குகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டுதான் இருக்கும். ஏற்றத்தைப் பயன்படுத்தி லாபத்தை புக் செய்ய தவற வேண்டாம்.

போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

23,218.90

      - தொகுப்பு :  வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism