Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

பிரீமியம் ஸ்டோரி

கடந்த வாரத்தில் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கு நம்முடைய இலக்கு விலையை அடைந்து லாபத்துடன் வெளியேறியது. இந்த பங்கில் நாம் மொத்த தொகையையும் முதலீடு செய்திருந்தோம். அதாவது, நாம் முதலீடு செய்தபிறகு அந்தப் பங்கு கடுமையாகச் சரிந்து, மூன்று முறையும் சராசரி செய்திருந்தோம். அதனால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்திருக்கும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

னால், கடந்த வாரம் ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கினை வாங்கச் சொல்லி இருந்தேன். ஆனால், நான் பரிந்துரை செய்த விலைக்கு அந்தப் பங்கு வராமல் மேலே போய்விட்டது. முதலீட்டாளர் களினால் வாங்கி இருக்க முடியாது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நமது போர்ட்ஃபோலியோவில்

20 பங்குகள் இருந்தது. ஆனால், சந்தை உயர உயர நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து ஒவ்வொரு பங்காக வெளியேறிவிட்டது. தவிர, புதிதாக முதலீடு செய்ய நினைத்தப் பங்குகள் பரிந்துரை விலைக்கு அருகேகூட வராமல் மேலே சென்றுவிட்டது. அதனால் இப்போதைக்கு நமது போர்ட்ஃபோலியோவில் 11 பங்குகள் மட்டுமே இருக்கிறது. மேலும், முதலீடு செய்த தொகையும் சுமார் 72,000 ரூபாயாக இருக்கிறது.

அதனால், இந்த வாரம் இரண்டு பங்குகளை நமது போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம். பஜாஜ் கார்ப் மற்றும் ஃபைசர் பங்குகளில் முதலீடு செய்யவும் (பரிந்துரை விலைக்கு பெட்டிச் செய்தியைப் பார்க்க!). ஃபைசர் பங்கு 1,150 ரூபாய்க்கு மேல் வர்த்தகமாகிறது. ஆனால், ஒரு பங்கில் முதல்முறை முதலீடு செய்யும்போது 2,500 ரூபாய் மட்டுமே முதலீடு செய்யவேண்டும் என்பது நமது விதி. ஆனால், இந்த பங்குக்கு அந்த விதி சரிபட்டு வராது. அதனால் 2,500 ரூபாய் என்பதற்குப் பதிலாக நான்கு (ஃபைசர்) பங்குகளை வாங்கவும். அதேபோல, ஒரு பங்கு 15 சதவிகிதம் சரிந்தால் சராசரி செய்வோம். இந்த பங்கு 20 சதவிகிதம் சரிந்தால் மட்டுமே சராசரி செய்யவும். அதேபோல, இந்தப் பங்கின் இலக்கு விலையையும்

15 சதவிகிதம் என்பதற்குப் பதிலாக 20 சதவிகிதமாக மாற்றிக்கொள்ளலாம்.

இப்போதைக்கு இந்தப் பங்கின் மதிப்பீடுகள் நன்றாக இருக்கிறது. மேலும் கடந்த சில மாதங்களாகச் சரிந்து வந்து இப்போது ஒரு நிலை பெற்றிருக்கிறது. இதற்கு கீழே யும் சரிய வாய்ப்பு இல்லை.

என்.ஹெச்.பி.சி. பங்கு இலக்கு விலைக்கு அருகே இருக்கிறது. இந்த வாரத்தில்  வெளியேற வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தை எப்படி?

டெக்னிக்கல்படி Bearish Gartley  பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. இந்த பேட்டர்ன் படி சந்தை 5800 புள்ளிகளுக்குக் கீழே சரியாதவரை எந்த பிரச்னையும் இல்லை. ஒருவேளை அதற்கு கீழே சென்றால், 5,500 புள்ளிகளுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. அதற்கும் கீழே செல்லும்போது சந்தை பெரிய அளவில் சரியலாம். போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

22,588.55

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

     தொகுப்பு:      வா.கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு