Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

Published:Updated:
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜாஜ் கார்ப். மற்றும் ஃபைசர் என்று இரண்டு பங்குகளை கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தேன். இந்த வாரம் சந்தை இறங்கியது. இருந்தாலும் பஜாஜ் கார்ப். பங்கு நமது பரிந்துரை விலைக்கு அருகில் வந்து மீண்டும் மேலே சென்று விட்டது. அதனால் அந்த பங்கினை முதலீட்டாளர்கள் வாங்கி இருக்க முடியாது.

அதேசமயம், ஃபைசர் பங்கு நமது பரிந்துரை விலையான 1,150 ரூபாய்க்கு வெள்ளிக் கிழமை வந்தது. எனவே, அதை வாங்கி இருப்பீர்கள். இப்போதைக்கு 12 பங்குகள் நமது போர்ட்ஃபோலியோவில் இருக் கிறது. ஒவ்வொருமுறை இரண்டு பங்குகளைச் சொல்லியும் அவற்றை வாங்க முடியவில்லை. இந்த முறையும் இரண்டு பங்குகள் தருகிறேன். வாங்க முடிகிறதா என்று பார்ப்போம்.

ரிலையன்ஸ் கேப்பிட்டல்: கிட்டத்தட்ட 3,000 ரூபாயில் இருந்து இந்தப் பங்கு சரிந்து கொண்டே வந்து இப்போது சுமார் 460 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது. இதுநாள் வரையில் இந்த நிறுவனம் தனக்கு இருந்த நெகட்டிவ்களை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற முயற்சித்து வருகிறது. மேலும், நிதித் துறை சார்ந்த அத்தனை சேவைகளையும் இந்நிறுவனம் செய்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இதற்கு சாதகமாக வங்கி மற்றும் இன்ஷூரன்ஸ் துறையி லும் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. நிறைய முதலீடுகள் வர வாய்ப்பு இருக்கிறது. இவ்வளவையும் நான் சொல்லக் காரணம், இந்தப் பங்கு இன்னும் சில வருடங்களில் 2,000 ரூபாய் வரைகூட செல்ல வாய்ப்பு இருக்கிறது. நீண்ட கால முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் முதலீடு செய்து விட்டு மறந்துவிடலாம். (நம் போர்ட்ஃபோலியோவில் 15 சதவிகித லாபம் என்பதை மறக்க வேண்டாம்).

மேலும், சிமென்ட் துறை பங்குகள் தற்போது நன்றாக வர்த்தகமாகி வருகிறது. அதனால் ஜே.கே. சிமென்ட் பங்கினையும் நம் போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த வாரம் என்.ஹெச்.பி.சி. பங்கு இலக்கு விலையை நெருங்கியது. இருந்தாலும் லாபத்தை அடையவில்லை. வரும் வாரத்தில் இலக்கு விலையைத் தொடலாம்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தை எப்படி?

கடந்த சில வாரங்களில் இல்லாத அளவுக்கு சந்தை சரிந்து முடிந்திருக்கிறது. இதற்கு அமெரிக்காவின் ஃபிஸ்கல் கிளிஃப்தான் காரணம். இருந்தா லும், 5800 புள்ளிகளுக்கு கீழே செல்லாதவரை தீமீணீக்ஷீவீsலீ ரீணீக்ஷீtறீமீஹ் பேட்டர்ன் உருவாக வாய்ப்பு இல்லை. அதுவரை குறிப்பிட்ட பங்குகள் உயர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒருவேளை 5800 புள்ளிகளுக்குக் கீழே சென்றால் சந்தை 5500 புள்ளிகள் வரை சரிய வாய்ப்பு இருக்கிறது.

போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

22,904.20.

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism