Published:Updated:

கருத்துக்கணிப்பில் நிலையான ஆட்சி: சென்செக்ஸ் 24,000 புள்ளிகளை தாண்டி சாதனை!

விகடன் விமர்சனக்குழு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், இன்று 24 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.

வர்த்தம் தொடங்கியது முதலே சென்செக்ஸ் புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. இது போக போக மேலும் உயர்ந்தது.

நண்பகல் 11.50 மணி அளவில் சென்செக்ஸ் 24 ஆயிரம் புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தது. தற்போது சென்செக்ஸ் 470 புள்ளிகள் உயர்ந்து 24,021 புள்ளிகளாக வர்த்தம் நடக்கிறது.

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 128.70 புள்ளிகள் உயர்ந்து 7143 புள்ளிகளாக வர்த்தம் நடக்கிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்படும்  நிலையில், மத்தியில் நிலையான அரசு அமையும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்  மும்பை பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.