Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு.வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு.வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

இந்த வாரம் எந்த பங்கும் நமது இலக்கு விலையை அடைந்து வெளியே செல்ல

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வில்லை. அதேசமயம், சில பங்குகள் நமது இலக்கு விலையை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கு நமது இலக்கு விலையை நோக்கி நெருங்கி வருகிறது. இந்தப் பங்கு கடந்த 75 வார அதிகபட்ச விலையைத் தாண்டி வர்த்தகமாகிறது. விரைவில் இலக்கு விலையை அடைய வாய்ப்பு இருக்கிறது.

நமது போர்ட்ஃபோலியோவில் நீண்ட காலமாக இருக்கும் சின்டெக்ஸ் பங்கில் கடன் குறித்த நடவடிக்கைகள் அடுத்த வாரம் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதகமாக வரும்பட்சத்தில் விரைவில் நமது இலக்கு விலையை அடையலாம்.

அதேபோல ஜி.எஸ்.பி.எல். பங்கும் நாம் வாங்கிய விலைக்கு மேலே வந்திருக்கிறது. டெக்னிக்கலாகவும் இந்தப் பங்கு சிறப்பாக இருக்கிறது. வால்யூமும் அதிகமாக இருக் கிறது. அதனால் இந்தப் பங்கும் நமது இலக்கு விலையை விரைவில் தொட வாய்ப்பு இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

சந்தை எப்படி?

எதிர்பார்த்தது போலவே, 6000 புள்ளிகளுக்கு மேல் நிஃப்டி முடிவடைந்திருந்தாலும், சந்தை தடுமாறுவதுபோலவே தெரிகிறது. இருந்தாலும் 5940 புள்ளிக்கு கீழே செல்லாதவரை 6100-6200 புள்ளிகள் வரை நிஃப்டி செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே சொன்னதுபோல, ஜனவரி மாத உச்சபட்ச புள்ளியை பிப்ரவரி மாதம் உடைத்துக்கொண்டு மேலே சென்றால், சந்தையில் ஏற்றம் இருக்கும்.

இந்த வாரம் செய்ய வேண்டியது?

பாரத் ஃபோர்ஜ் மற்றும் எஸ்.கே.எஸ். மைக்ரோஃபைனான்ஸ் பங்கில் முதலீடு செய்திருப் பீர்கள் என்று நினைக்கிறேன்.  எஸ்.கே.எஸ். மைக்ரோ ஃபைனான்ஸ் பங்கு இப்போது 10 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. அதனால் அந்தப் பங்கின் இலக்கு விலையை 42 % உயர்த்தி, அதாவது 220 ரூபாய்க்கு மாற்றிக் கொள்ளவும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

என் கணிப்பின்படி, அந்தப் பங்கு 220 ரூபாயையும் தாண்டி செல்லும். அதேபோல, இ.ஐ.டி. பாரி பங்கில் 2,500 ரூபாய்க்கு முதலீடு செய்திருந்தோம். அந்தப் பங்கு சுமார் 10 சதவிகிதம் சரிந்து, ஆனாலும் நாம் சராசரி செய்யவேண்டிய விலைக்கு வரவில்லை. அதனால் 205 ரூபாய் என்ற விலைக்கே அந்தப் பங்கில் 2,500 ரூபாய்க்கு சராசரி செய்யவும்.

முதலீடு செய்ய வேண்டிய பங்கு!

இந்த வாரம் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் பங்கினை வாங்கவும். ஒரு பங்கில் முதல் முறை முதலீடு செய்யும்போது 2,500 ரூபாய்க்கு மட்டுமே முதலீடு செய்வோம். ஆனால், இந்தப் பங்கின் மதிப்பீடுகள் நன்றாக இருப்பதால் 5,000 ரூபாய்க்கு முதலீடு செய்யவும். இப்போதைக்கு இ.பி.எஸ்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

39 ரூபாயாக இருக்கிறது. இது 2013-ம் நிதி ஆண்டு முடிவில் 45 ரூபாயாக இருக்கும். 2014-ம் நிதி ஆண்டு முடிவில் 55 ரூபாயாக இருக்கும். மேலும், புத்தக மதிப்பும் நன்றாக இருக்கிறது. அதேபோல, 25 சதவிகிதம் லாபம் கிடைத்தவுடன் விற்றுவிடவும். 20 சதவிகிதம் சரிந்தால் சராசரி செய்துவிடவும். நமது போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

27,664.10

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism