Published:Updated:

பேங்க் நிஃப்டி: இன்னும் லாபம் தரும்!

வா.கார்த்திகேயன்.

வங்கித் துறை

##~##

டந்த சில மாதங்களாகவே சந்தை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. குறிப்பாக, கடந்த நவம்பர் 1-ம் தேதியில் இருந்து நிஃப்டி சுமார் 6 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், இதே இரண்டு மாத காலத்தில் பேங்க் நிஃப்டி இரண்டு மடங்கு (12 சதவிகிதம்) உயர்ந்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், கடந்த ஏழு ஆண்டுகளில் (காலண்டர் ஆண்டு) ஆறு ஆண்டுகள் இண்டெக்ஸ் கொடுத்த வருமானத்தைவிட பேங்க் நிஃப்டிதான் அதிக வருமானம் தந்திருக்கிறது. 2008-ல் மட்டும் பேங்க் நிஃப்டி சரிந்தது. அமெரிக்காவில் லெமன் பிரதர்ஸ் வங்கி உள்பட பல வங்கிகள் திவாலானது இதற்கு காரணமே தவிர, நம் வங்கிகளில் எந்தப் பிரச்னையும் இல்லை.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வங்கி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பொதுத்துறை வங்கிகளில் 12,500 கோடி ரூபாய் முதலீட்டை அதிகரிப்பது என வங்கித் துறை பற்றி தினமும் ஏதாவது ஒரு சாதகமான செய்தி வந்தபடி இருப்பதால் பேங்க் நிஃப்டி தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் பேங்க் நிஃப்டி இன்னும் மேல் நோக்கி செல்லுமா, வங்கிப் பங்குகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்பது குறித்து சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சொக்கலிங்கத்திடம் பேசினோம். பல விஷயங்களை விரிவாக எடுத்துச் சொன்னார்.  

பேங்க் நிஃப்டி: இன்னும் லாபம் தரும்!

''கடந்த சில ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரத்தில் பெரிய அளவுக்கு மாற்றம் நடந்து வருகிறது. இந்த ஏற்றம் தொடர்ந்து நடக்கும் என்பதால் அது வங்கித் துறைக்கு சாதகமே. உதாரணத்துக்கு, எட்டு, ஒன்பது வருடங்களுக்கு முன்பு இந்திய வங்கிகள் கடன் கொடுத்த தொகை சுமார் 9 லட்சம் கோடி ரூபாய். ஆனால், இப்போது இந்திய வங்கிகள் தரும் கடன் அளவு சுமார் 47 லட்சம் கோடி ரூபாய்.

பேங்க் நிஃப்டி: இன்னும் லாபம் தரும்!

இப்போதுகூட வங்கிகள் கடன் கொடுக்கும் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 15-16 சதவிகித அளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது. இத்தனைக்கும் இப்போது வட்டி விகிதம் அதிகம். இருந்தாலும்கூட அடுத்த ஐந்து வருடங்களுக்கு இதே வளர்ச்சி சாத்தியம் என்றே தெரிகிறது. இனிவரும் காலங்களில் வட்டி விகிதம் குறைவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் வங்கிகள் கொடுக்கும் கடனும் அதிக வளர்ச்சி அடையும்.

இந்தச் சூழ்நிலையில் பொதுத்துறை வங்கிகளில் முதலீடு செய்வதைவிட தனியார் வங்கிகள் அதுவும் பழைய தனியார் துறை வங்கிப் பங்குகளாகப் பார்த்து முதலீடு செய்வது நல்லது. பொதுத்துறை பங்குகளைத் தவிர்க்கச் சொல்லக் காரணம், அவற்றின் வாராக்கடன் அதிகம். அதேசமயம், கடனை அதிக அளவில் மறுசீரமைப்பு செய்வதும் பொதுத்துறை வங்கிகள்தான். ரிசர்வ் வங்கியின் கருத்துபடி, கடனை மறுசீரமைப்பு செய்வதில் பாதிக்கு மேல் மீண்டும் வாராக்கடனாக மாறுகிறது.

தனியார் துறை அதுவும் பழைய தனியார் துறை பங்குகளை பரிந்துரைக்க காரணம், வங்கித் துறையில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். புதிய வங்கிகள் வருவதால், ஏற்கெனவே இருக்கும் வங்கிகளை இணைத்துக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பு ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி இன்னொரு வங்கியை மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கியது. அதனால் தனியார் துறை வங்கிகளை வாங்கிச் சேர்க்கலாம். குறிப்பாக சௌத் இந்தியன் பேங்க் மற்றும் கரூர் வைஸ்யா பேங்க் ஆகிய பங்குகளில் முதலீடு செய்யலாம்'' என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேங்க் நிஃப்டி சரிந்த நிலையில் டெக்னிக்கல்

பேங்க் நிஃப்டி: இன்னும் லாபம் தரும்!

அனலிஸ்ட் ஸ்ரீராமிடம் பேசினோம். ''இப்போதைக்கு கரெக்ஷனில் இருக்கிறது. இது ஒரு 'புல் மார்க்கெட் கரெக்ஷன்.’ 13000 புள்ளிகளை (பேங்க் நிஃப்டி) ஸ்டாப்லாஸாக வைத்துகொண்டு ஷார்ட் போகலாம். அதிகபட்சம் 12200-12300 புள்ளிகள் வரைக்கும்தான் சரிய வாய்ப்பு இருக்கிறது. இதைத் தாண்டி சரிய வாய்ப்பு இல்லை. இந்தச் சரிவு இன்னும் ஒரிரு வாரங்களுக்கு இருக்கும். ஜனவரி மூன்றாம் வார இறுதியில் அல்லது அதன்பிறகு பேங்க் நிஃப்டி உயரவே வாய்ப்பு இருக்கிறது.

13000 புள்ளிகளைத் தாண்டும் போது 13300 புள்ளிகள் வரை செல்லக்கூடும். 13300 புள்ளியில் ஒரு ரெசிஸ்டன்ஸ் இருக்கும். அந்தப் புள்ளிகளை தாண்டும்பட்சத்தில் அடுத்த 15-18 மாதங்களில் பேங்க் நிஃப்டி 17000 புள்ளிகள் வரை செல்லக்கூடும். அவ்வப்போது வரும் கரெக்ஷன்களை பற்றி கவலைப்பட வேண்டாம்'' என்றார் ஸ்ரீராம்.

முதலீட்டாளர்கள் பேங்க் நிஃப்டியையும் தங்கள் போர்ட்ஃபோலியோவில் சிறிது சேர்க்கலாம்.