Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு: வா.கார்த்திகேயன்

##~##

டந்த வாரம் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரிஸ் பங்கினை நமது போர்ட்ஃபோலியோவில் சேர்க்கச் சொல்லி இருந்தேன். சந்தையில் சிறிய ஊசலாட்டம் இருந்ததால், முதலீட்டாளர்கள் அந்தப் பங்கினை வாங்கி இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அதேபோல இ.ஐ.டி. பாரி பங்கினை முதலில் 195 ரூபாய்க்கு சராசரி செய்யச் சொல்லி இருந்தேன். ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக 205 ரூபாய் விலையிலே வர்த்தகமாகி வந்தது அந்தப் பங்கு. நமது சராசரி விலைக்கும் வரவில்லை; அதேசமயம், விலை அதிகரிக்கவும் இல்லை. எனவே,

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

205 ரூபாய் என்ற நிலையிலே சராசரி செய்யச் சொல்லி இருந்தேன். ஆகவே, 205 ரூபாயில் சராசரி செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

ஆனால், சராசரி செய்த பிறகு அந்தப் பங்கு சரிந்து நமது பழைய சராசரி விலைக்கு வந்துவிட்டது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

சந்தையின் போக்கு சரி இல்லாததால் இந்த வாரம் எந்த பங்கும் வெளியேறவில்லை. இப்போதைக்கு நமது போர்ட்ஃபோலியோவில் 16 பங்குகள் இருக்கிறது. மேலும், சந்தை கொஞ்சம் சரிவில் இருப்பதால் இந்த வாரம் எந்த புதிய முதலீடு களும் செய்யாமல் இருப்பது நல்லது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

எவரெஸ்ட் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் நன்றாக வரும் என்றே எதிர்பார்க்கப்படு கிறது. அதேபோல நம்மிடம் இருக்கும் சின்டெக்ஸ் பங்கின் டிசம்பர் காலாண்டு முடிவுகள் நன்றாக வந்திருக்கிறது. அந்தப் பங்கு விரைவில் மேலே செல்ல வாய்ப்பு இருப்பதுபோலவே தெரிகிறது.

சந்தை எப்படி இருக்கும்?

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

வாரத்தின் இறுதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக சந்தை 6000 புள்ளிகளுக்கு கீழே சென்றுவிட்டது. 5900 புள்ளிகளுக்கு கீழே செல்லும் பட்சத்தில் 5800 புள்ளிகள் சாத்தியம். அதேசமயம், 5800 புள்ளியில் மிகப் பெரிய சப்போர்ட் இருக்கிறது. அதனால் 5800 புள்ளிகளுக்கு கீழே செல்லாதவரை சந்தை ஏற்றத்தில் இருக்கிறது என்றே கருத்தில்கொள்ளலாம்.

எஸ்.கே.எஸ். மைக்ரோஃபைனான்ஸ் பங்கு 15 சதவிகிதத்துக்கு மேலே அதிகரித்து வர்த்தகமாகிறது. இந்தப் பங்கு விரைவில் நமது போர்ட்ஃபோலியோவில் இருந்து வெளியே செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பங்கினை கண்காணித்து வரவும். இந்த வாரம் ஊசலாட்டத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதால், நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள பங்குகளின் விலை சரிவை சந்தித்தால் கவனித்து சராசரி செய்யவும்.  நமது போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

25,715.75.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !