Published:Updated:

நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !

நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !

நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !

நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !

Published:Updated:

பங்குச் சந்தை

##~##

நேற்றைய ஸ்மால் கேப் பங்குகள், இன்றைக்கு மிட் கேப் பங்குகளாக வளர்ந்து நிற்கின்றன. நாளைய லார்ஜ் கேப் பங்குகளாக ஆகப் போகிறவை இன்றைக்கு மிட் கேப் பங்குகளாக இருக்கின்றன. ஒரு செடி நன்றாக வளர்ந்து, காய்த்து, பழம் தந்து பலவாக கிளை பரப்பியபிறகு அதற்குச் சொந்தம் கொண்டாடுவதைவிட, சின்னஞ்சிறு செடியாக இருக்கும்போதே அதை நம் வசமாக்கிக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போமா? சிட்டி யூனியன் பேங்க் பங்கு கடந்த 2000-ம் வருடத்தில் ஒரு ரூபாய்க்கு வர்த்தகமானது. அப்போது ஆயிரம் ரூபாய்க்கு அந்த பங்கை வாங்கிப்போட்டிருந்தால், இன்று அது 61,000 ரூபாயாக வளர்ந்திருக்கும். 11 வருடத்தில் 61 மடங்கு வளர்ச்சி என்பதை வேறு எதிலும் எதிர்பார்க்க முடியாது. அதேபோல, ஆக்ஸிஸ் வங்கி பங்கு 2000-ம் ஆண்டு வாக்கில் சுமார்

20 ரூபாயில் வர்த்தகமானது. இப்போது அந்த பங்கின் விலை 1,300 ரூபாய்க்கு மேல். ஆயிரம் ரூபாயில் அப்போது 50 பங்கு வாங்கிப் போட்டிருந்தால் இன்று உங்கள் கையில் 65,000 ரூபாயாக அது வளர்ந்திருக்கும்!

நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !
நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !

இந்த அதிவேக வளர்ச்சியை நீங்களும் அனுபவிக்க வேண்டுமெனில், இன்றைக்கு மிட் கேப் பங்குகளாக இருந்தாலும் நாளைக்கு லார்ஜ் கேப் பங்குகளாக மாறுவதற்கு வாய்ப்புள்ள பங்குகளை இன்றே கணித்து அதில் முதலீடு செய்வதுதான். இது ஒன்றும் சாதாரண வேலை அல்ல. இதுமாதிரியான ஐந்து பங்குகளை ஒருவர் தனது வாழ்க்கையில் சரியாகக் கண்டுபிடித்து, அதில் நல்ல தொகையை முதலீடு செய்து, எதிர்காலத்தில் அந்தப் பங்குகள் லார்ஜ் கேப் பங்குகளாக மாறி, ஐம்பது அல்லது 60 மடங்கு லாபம் தரும் எனில், அவர் வாழ்க்கையே ஆச்சரியபடத்தக்க வகையில் மாறிவிடும். அப்படிப்பட்ட பங்குகள் சிலவற்றை நாணயம் விகடன் வாசகர்களுக்காக தேர்வு செய்து தரமுடியுமா என சென்ட்ரம் வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜி.சொக்கலிங்கத்திடம் கேட்டோம். சளைக்காமல் தேடித் தந்தார். இந்தப் பங்குகளைத் தேர்வு செய்ததற்கான அடிப்படைகளையும் எடுத்துச் சொன்னார்.

''முதலாவது விஷயம், வளர்ச்சி. குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமல்லாமல் ஆண்டுகள் கடந்து வளர்ச்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் மட்டுமின்றி, எதிர்காலத்திலும் அது தொடர வேண்டும். இரண்டாவது விஷயம், ரிஸ்க். ஏற்றுமதி, இறக்குமதி ரிஸ்க் இருக்கிறதா, ரூபாய் மதிப்பு ஏற்ற, இறக்கம், அரசாங்கம் அல்லது ஒழுங்குமுறை ஆணையங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து ஏதேனும் பிரச்னை வருமா என்று பார்க்க வேண்டும். மூன்றாவது விஷயம், எதிர்கால வளர்ச்சி. நாம் முதலீடு செய்யும் துறையில் ஒரு பெரிய மாற்றம்

நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !

(structural change)வரப் போகிறதா அல்லது ஏற்கெனவே வந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு, இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட ஐ.டி. பங்குகள் வளர்ந்ததற்கு அந்தத் துறையில் ஏற்பட்ட மாற்றமே காரணம். இந்த விஷயங்களின் அடிப்படையில் ஆராய்ந்துதான் இந்த ஐந்து பங்குகளைத் தந்திருக்கிறேன். அடுத்த மூன்று வருடத்துக்குள் இந்தப் பங்குகள் இரண்டு மடங்காக உயர வாய்ப்பு இருக்கிறது'' என்றார் சொக்கலிங்கம். அவர் தரும் பங்குகள் இதோ...!

நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !
நாளைய லார்ஜ் கேப் பங்குகள் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism