Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

Published:Updated:

பங்குச் சந்தை

##~##

கடந்த வாரம் டி.வி.எஸ். மோட்டார் பங்கினை பரிந்துரை செய்தேன். நான் பரிந்துரை செய்த விலைக்கு வந்ததால் அந்தப் பங்கினை முதலீட்டாளர்கள் வாங்கி இருப்பார்கள். மேலும், கொரமண்டல் இன்டர்நேஷனல் பங்கு சராசரி செய்யும் விலைக்கு வந்தது. அதையும் செய்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இ.ஐ.டி. பாரி பங்கு சராசரி விலைக்கு மிக அருகில் வந்தது. ஆனால், சராசரி விலையைத் தொடவில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டி.வி.எஸ். மோட்டார் பங்கினையும் சேர்த்து நமது போர்ட்ஃபோலியோவில் 17 பங்குகள் இருப்பதால் இப்போதைக்குப் புதிய பங்குகளில் முதலீடு செய்யவேண்டாம். ஏதாவது ஒரு பங்கு லாபத்துடன் வெளியேறும்பட்சத்தில் புதிய பங்கினை அறிமுகம் செய்வோம்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

அதேசமயம், சந்தை இப்போது சிறிதளவு சரிந்திருக்கிற நிலையில் சில பங்குகளை சராசரி செய்வோம். கொரமண்டல் இன்டர்நேஷனல் மற்றும் இ.ஐ.டி. பாரி பங்கில் இதுவரை சுமார் 5,000 ரூபாய்க்கு முதலீடு செய்திருக்கிறோம். சந்தையின் சூழ்நிலை காரணமாக இந்தப் பங்குகள் சரிவடைந்திருக்கிறது. சந்தை மேலே உயர ஆரம்பிக்கும்போது இந்தப் பங்குகள் மிக வேகமாக உயரும். அதனால் இந்த இரண்டு பங்கு களிலும் மீதமுள்ள 5,000 ரூபாயையும் முதலீடு செய்துவிடவும். தரமான இந்த இரண்டு நிறுவன பங்குகள், இனி இந்த விலையில் கிடைக்க வாய்ப்பு இருக்காது என்பதால் இப்போதே முதலீடு செய்துவிடலாம்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

அதேபோல ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கில் ஒருமுறை மட்டும் முதலீடு செய்திருந்தோம். நாம் முதலீடு செய்தபிறகு அந்தப் பங்கு மிக வேகமாக மேலே ஏறி இப்போது சிறிதளவு சரிந்திருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

அதனால் இந்தப் பங்கில் இன்னொரு 2,500 ரூபாயை முதலீடு செய்யலாம். ஏற்கெனவே சொன்னதுபோல, இந்தப் பங்கு நீண்டகாலத்தில் நல்ல லாபத்தைத் தரக் கூடியது. மேலும், பெரிய முதலீட்டாளர்கள் இந்தப் பங்கில் கவனம் செலுத்தி இருப்பதுபோல தெரிகிறது.

சந்தை எப்படி?

வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு இருக்கிறது என்ற செய்தியின் காரணமாக வெள்ளிக்கிழமை சந்தை உயர்ந்தது. வட்டி விகிதம் குறைக்கப்படுவதற் கான வாய்ப்பு நிறைய இருப்பது போலவே படுகிறது. அது 0.50 சதவிகிதமா அல்லது 0.25 சதவிகிதமா என்பது மட்டும் தெரியவில்லை. 5950 புள்ளிகளுக்கு கீழே செல்லாத வரை சந்தை மேல் நோக்கிதான் இருக்கும். அதேசமயம் 6180 நிஃப்டி புள்ளிகளில் ஒரு பெரிய ரெசிஸ்டன்ஸ் இருக்கிறது. முக்கியமான பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் தவிர மற்ற நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாகவே இருக்கிறது. காலாண்டு முடிவுகளும் சந்தையின் ஏற்றத்தில் ஒரு பங்கு வகிக்கும் என்பதால் செய்திகளை கவனித்து வாருங்கள். பரிந்துரை விலையில் சராசரி செய்யுங்கள். போர்ட்ஃபோலியோ நிகர லாபம்:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

21,097.35

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism