##~## |
ஏற்றத்தின் வேகம் சற்று குறைந்துகொண்டு வருவதைப் போலவே தெரிகின்றது என்றும், திடீர் நெகட்டிவ் செய்திகள் 5835 வரை சந்தையை வேகமாக நகர்த்திச் சென்றுவிடும் வாய்ப்பு கனன்று கொண்டுதான் இருக்கின்றது என்றும் கடந்த இதழில் சொல்லி இருந்தோம்.
வாரத்தில் இரண்டுநாள் இறங்கிய நிஃப்டி வார இறுதியில் வாராந்திர ரீதியாக 10 பாயின்ட் ஏற்றத்தில் முடிவடைந்தது. ரிசர்வ் வங்கியின் கிரெடிட் பாலிசியும், ஜனவரி எக்ஸ்பைரி யும் இருக்கும் வாரமிது. வாலட்டைலாக இருக்க வாய்ப்புள்ளது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
6085-ஐத் தாண்டி இரண்டு நாட்களுக்கு மேல் குளோஸாகாவிட்டால் எக்ஸ்பைரி வீக்காகத்தான் இருக்க வாய்ப்புள்ளது. எனவே, ஸ்டாக் ஸ்பெசிபிக் வியாபாரம் மட்டுமே செய்யலாம்.

ஓவர்நைட் பொசிஷன்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். புதிய அனுபவமில்லாத டிரேடர்கள் டிரேடிங்கை தவிர்ப்பது நல்லது.

