Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

வா.கார்த்திகேயன்.

Published:Updated:
##~##

கடந்த வாரம் நமது போர்ட்ஃபோலியோவில் மூன்று மாறுதல்களைச் செய்ய சொல்லி இருந்தேன். இ.ஐ.டி. பாரி பங்கில் மீதமிருக்கும் 5,000 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கினை 2,500 ரூபாய்க்கும் முதலீடு செய்ய சொல்லி இருந்தேன். கொரமண்டல் இன்டர்நேஷனல்

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பங்கில் ஏற்கெனவே 7,500 ரூபாய்க்கு முதலீடு செய்திருந்தோம்.

நமது விதிமுறைப்படி, ஒரு பங்கில் அதிகபட்சம் 10,000 ரூபாயை மட்டுமே முதலீடு செய்யமுடியும். ஏற்கெனவே 7,500 ரூபாய்க்கு முதலீடு செய்துவிட்டதால் இன்னும் 2,500 ரூபாய்க்கு மட்டுமே முடியும். ஆனால், கடந்த இதழில் தவறுதலாக 5,000 ரூபாய்க்கு முதலீடு செய்யவேண்டும் என்று பிரசுரமாகிவிட்டது. பல வாசகர்கள் இதை நம் கவனத்துக்குக் கொண்டுவந்தார்கள். நாம் உருவாக்கி வைத்திருக்கும் போர்ட்ஃபோலியோ விதிமுறைகளை நன்கு அறிந்த நம் முதலீட்டாளர்கள் 2,500 ரூபாய்க்கு மட்டுமே முதலீடு செய்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இதுதவிர, நம்முடைய போர்ட்ஃபோலியோவில் எந்தவிதமான மாறுதலும் நடக்கவில்லை. கடந்த வாரம் எந்தப் பங்கும் இலக்கு விலையையும் அடையவில்லை; விலை குறைந்து சராசரியும் ஆகவில்லை. ஆனால், டி.வி.எஸ். மோட்டார் பங்கு நம்முடைய சராசரி விலையை நெருங்கி, சராசரி ஆகாமல் மீண்டும் மேலே சென்றுவிட்டது. இப்போதைக்கு 17 பங்குகள் நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கிறது. அதனால், இந்த வாரம் எந்த புதிய முதலீடும் வேண்டாம்.

சந்தை எப்படி?

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

வாரத்தில் இடையே சந்தை 6111 என்ற உச்சபட்ச பேன்ஸி நெம்பரை தொட்டது. அதேசமயம் வார முடிவில் 6000 புள்ளிகளுக்குக் கீழே முடிவடைந்தது. 5960 புள்ளிகளுக்கு கீழே முடிவடையும்பட்சத்தில் சந்தை சரிய வாய்ப்பு இருக்கிறது. அது 5800-5600 புள்ளிகள் வரை செல்லும். ஆனால், முக்கியமான நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததைவிட நன்றாக வந்திருக்கிறது.  

மேலும், பட்ஜெட் நெருங்கிவரும் சூழ்நிலையில் பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பின் காரணமாக சில துறை பங்குகள் உயரும். அப்படிப்பட்ட பங்குகள் நம் போர்ட்ஃபோலியோவில் இருக்கிறது. அந்தப் பங்குகள் லாபத்துடன் வெளியேற வாய்ப்பு இருக்கிறது. எனவே, கவனமாக இருந்து லாபத்தை புக் செய்யவும். சில பங்குகள் சராசரி விலைக்கு அருகில் இருக்கிறது. ஒருவேளை சரியும்பட்சத்தில் சராசரி செய்யத் தவறவேண்டாம். போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம் :

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

18,767.70

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism