Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: சி.சரவணன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: சி.சரவணன்.

Published:Updated:
##~##

இரு வாரங்களுக்கு முன் ஜனவரி 25-ம் தேதி அன்று சென்செக்ஸ் 20107.53 புள்ளிகளுக்கு உயர்ந்தது. இது கடந்த இரு ஆண்டுகளில் உச்சபட்ச அதிகரிப்பாகும். அதன்பிறகு சந்தை இறங்கிக்கொண்டிருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நம் போர்ட்ஃபோலியோவில் கடந்த வாரமும் எந்த மாற்றமும் நடக்கவில்லை. அதாவது, கடந்த வாரம் நம் போர்ட்ஃபோலியோவிலுள்ள 17 பங்கு களில் எந்தப் பங்கும் இலக்கு விலையை அடைந்து வெளியேறவும் இல்லை. மேலும், விலை இறங்கி சராசரி ஆகவும் இல்லை. டி.வி.எஸ். மோட்டார் பங்கு சராசரி விலையை நெருங்கி வந்திருக்கிறது. வரும் வாரத்தில் சராசரி ஆக வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாரமும் எந்த புதிய முதலீடும் வேண்டாம். காரணம், சந்தை இறங்கு முகத்தில் இருக்கிறது. இரு வாரங்களுக்கு முன்பு வரை சந்தை ஏறுமுகத்தில் இருந்த நிலை மாறி, இப்போது இறங்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுவதால் இப்போதைக்குப் புதிதாக முதலீடு செய்வது லாபகரமாக இருக்காது. வரும் வாரங்களில் சந்தை இன்னும் இறங்கும் நிலையில் மலிவான விலையில் வாங்க முடியும் என்பதால் அதுவரைக்கும் காத்திருப்போம்..

சந்தை எப்படி   இருக்கும் ?  

2013-ல் இந்திய பங்குச் சந்தையின் போக்கு, ஜனவரி மாதத்தின் அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்ச புள்ளிகளை சார்ந்து இருக்கும் என ஜனவரி மாத நாணயம் விகடன் இதழில் சொல்லியிருந்தேன். நிஃப்டி புள்ளிகள் ஜனவரி மாத குறைந்தபட்சமான 5935-க்கு கீழே வெள்ளிக்கிழமை (5903.50) இறங்கி இருக்கிறது. இதேபோல் சென்செக்ஸ் புள்ளிகள் ஜனவரி மாத குறைந்தபட்சமான 19508-க்கு கீழே 19484.77 புள்ளி களுக்கு இறங்கி உள்ளது. அந்த வகையில், இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் சுமார் 6 முதல் 10 சதவிகிதம் வரை சந்தை இறங்க வாய்ப்பு உள்ளது.

மேலும், நிஃப்டி புள்ளிகள் 6111 மேலே சென்று இறங்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் பல பங்குகளின் விலை 10 முதல் 30 சதவிகிதம் வரை இறங்கி இருக்கிறது. இது, சந்தை இன்னும் இறங்கும் என்பதைக் குறிக்கும் விஷயமாகும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

அடுத்து, பட்ஜெட் வரப் போகிறது. அந்த வகையில், அரசின் சீர்திருத்தங்களைப் பொறுத்தும் சந்தையின் போக்கு இருக்கும். அந்தச் சீர்திருத்தங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்கிற வரை நாம் கொஞ்சம் பொறுமையாக காத்திருப்போம்.

போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்; ரூ.13,606.95

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism