Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வார இறுதியில் ஏற்றம் வரலாம்!

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: வார இறுதியில் ஏற்றம் வரலாம்!

Published:Updated:
##~##

டெக்னிக்கலாக வீக்னஸ் சந்தையினுள் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டு இருக்கின்றது. 5950 என்பது ஒரு முக்கிய சப்போர்ட் லெவலாக உள்ளது என்றும், 5835 வரையிலும் அதிகபட்சமாகச் சென்றுவிடும் அளவிற்கு இந்த இறக்கம் செல்லலாம் என்றாலும் அதற்குண்டான கன்ஃபர்மேஷன் வால்யூமுடன் 5935 லெவலைத் தாண்டி கீழே போகவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

வெள்ளியன்று வாராந்திர அளவில் கிட்டத்தட்ட 95 பாயின்ட் இறக்கத்தில் 5903 என்ற லெவலில் குளோஸானது. வெள்ளியன்று வந்த இறக்கம் டெக்னிக்கலாக அடுத்த வாரமும் இறக்கம் தொடரலாம் என்று உணர்த்துவதாக அமைகின்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருப்பினும், பட்ஜெட் குறித்த பாசிட்டிவ் எதிர்பார்ப்புகள் ஏதும் வெளிவந்தால் சந்தை இறங்கிய வேகத்திலேயே மேலே செல்ல ஆரம்பிக்கலாம். எனவே, ஷார்ட் சைடில் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் மிகவும் கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டும். ஓவர் நைட் பொசிஷன்களை வைத்துக்கொள்ளவே கூடாது. ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் எண்ணிக்கையைக் குறைத்து வியாபாரம் செய்வது மிகச் சிறந்த ஸ்ட்ராட்டஜியாக இருக்கும். 5865 என்ற முக்கிய சப்போர்ட்டை உடைத்து வால்யூமுடன் கீழே போனால் 5785 வரையிலும்கூட சென்று விடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள்

செவ்வாய் அன்று ஜனவரி மாத இன்ப்ளேஷன் டேட்டா வெளிவர உள்ளது. இந்த டேட்டா வெளியீட்டிற்கு பின்னரே பட்ஜெட்டிற்கான சந்தையின் மூவ் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது. எச்சரிக்கை யுடன் செயல்படவேண்டிய வாரமிது.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism