Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு: சி.சரவணன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

தொகுப்பு: சி.சரவணன்.

Published:Updated:
##~##

கடந்த ஜனவரி 25-ம் தேதி சென்செக்ஸ் புள்ளிகள், கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சபட்சமாக 20107.53 புள்ளிகள் அதிகரித்தது. அதன்பிறகு இறங்குமுகமாக இருந்து வருகிறது. எனினும், நம் போர்ட்ஃபோலியோவில் கடந்த வாரமும் எவ்வித மாற்றமும் நிகழவில்லை. அதாவது, கடந்த வாரம் நம் போர்ட்ஃபோலியோவில் உள்ள எந்தப் பங்கும் வெளியேறவுமில்லை; சராசரி ஆகவும் இல்லை. டி.வி.எஸ். மோட்டார், எவரெஸ்ட் இண்டஸ்ட்ரிஸ், கிராம்ப்டன் கிரீவ்ஸ் ஆகிய பங்குகள் சராசரி விலையை நெருங்கி வந்திருக்கின்றன. வரும் வாரத்தில் இவை சராசரி ஆக வாய்ப்பு உள்ளது.

இந்த வாரமும் எந்தப் புதிய முதலீடும் வேண்டாம். காரணம், சந்தை தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருந்து வருகிறது. இந்நிலை பட்ஜெட் வரை தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. வரும் வாரங்களில் சந்தை இன்னும் இறங்கும் நிலையில் மலிவான விலையில் வாங்க முடியும் என்பதால் அதுவரைக்கும் பொறுமை காப்பதில் தவறில்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

 சந்தை எப்படி இருக்கும்?  

2012, டிசம்பர் 23-ம் தேதியிட்ட நாணயம் விகடனில் டெக்னிக்கல்படி, பீயரிஷ் கார்ட்லி (Bearish Gartley) பேட்டர்ன் உருவாகி இருக்கிறது. இந்த பேட்டர்ன்படி, சந்தை 5800 புள்ளிகளுக்குக் கீழே

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !

சரியாதவரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதற்குக் கீழே செல்லும்பட்சத்தில், 5500 அல்லது அதற்கும் கீழே செல்லலாம் என்று சொல்லியிருந்தேன்.

வெள்ளிக்கிழமை அன்று நிஃப்டி 5887 புள்ளியில் முடிந்தது. இந்நிலை யிலிருந்து 5800 புள்ளிகளுக்கு ஒரேநாளில்கூட வேகமாக இறங்கிவிட வாய்ப்புண்டு. அதற்கும் கீழே இறங்கினால் 5500, 5200 புள்ளிகளுக்குகூட செல்ல வாய்ப்புண்டு.

தற்போது நிஃப்டி மேஜர் சப்போர்ட் 5823-ஆக இருக்கிறது. இது, அதன் 55 நாள் சராசரியைவிட குறைவு. இதற்கும் கீழே போனால், அடுத்த இரு வாரங்களில் சந்தை 5590-க்கு இறங்கக்கூடும்.

அடுத்த ஆண்டில் தேர்தல்  வருகிறது. எனவே, எதிர்வரும் பட்ஜெட்டில் பல எதிர்பார்ப்புகள்.   இந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபட்சத்தில் சந்தையில் பெரிய கரெக்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே, அதுவரை பொறுமை!    

போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்: ரூ.10,985

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism