Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: மதில்மேல் பூனை !

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: மதில்மேல் பூனை !

Published:Updated:
##~##

வெள்ளியன்று வந்த இறக்கம் டெக்னிக்கலாக அடுத்த வாரமும் தொடரலாம் என்று உணர்த்துவதாக அமைகின்றது என்றும்: இருப்பினும் பட்ஜெட் குறித்த பாசிட்டிவ் எதிர்பார்ப்புகள் ஏதும் வெளிவந்தால் சந்தை இறங்கிய வேகத்திலேயே மேலே செல்ல ஆரம்பிக்கலாம் என்றும்: ஷார்ட் சைடில் வியாபாரம் செய்பவர்கள் மட்டும் மிகவும் கவனத்துடன் வியாபாரம் செய்யவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

வாராந்திர ரீதியாக 116 பாயின்ட்கள் ஹை-லோ இடைவெளியில் வர்த்தகமான நிஃப்டி, வெள்ளியன்று 16 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்தது. டெக்னிக்கலாக ஷார்ட் டேர்ம் டிரெண்ட் கொஞ்சம் நன்றாகவே பாசிட்டிவ்வாக மாறக்கூடியச் சூழ்நிலையில் வெள்ளியன்று குளோஸாகியுள்ளது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீண்டும் இறக்கம் வருவதற்கான வாய்ப்பு 15 முதல் 20 சதவிகித அளவுக்கு குறைந்துள்ளது. செய்திகளின் தீவிரம் மட்டுமே இறக்கத்தைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. செய்திகள் நியூட்ரலாகவோ, பாசிட்டிவ்வாகவோ இருந்தால் ஒரு வேகமான ஏற்றத்தைச் சந்தித்துவிடலாம்.

டிரேடர்ஸ் பக்கங்கள்

எனவே, ஷார்ட் சைடு வியாபாரத்தை ஹைரிஸ்க் டிரேடர்கள்கூட மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் வியாபாரம் செய்யவேண்டும். ஓவர் நைட் பொசிஷன் கூடவே கூடாது. வாரத்தின் நடுவே மிகவும் வாலட்டைலான சூழ்நிலையை சந்தை சந்திக்க நேரலாம். எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism