Published:Updated:

பட்ஜெட் : பலன் தரும் பங்குகள் !

ஆருடம் சொல்கிறார் ஷேருச்சாமி

பட்ஜெட் : பலன் தரும் பங்குகள் !

ஆருடம் சொல்கிறார் ஷேருச்சாமி

Published:Updated:
##~##

அறிவழகனாகிய (கன்) நானும், என் நண்பன் செல்வமும் (செல்) ஓட்டலில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். ''பட்ஜெட் வரப்போகுது... ஒரே குழப்பமா இருக்கே; ஷேருச்சாமியைப் பார்த்து பேசுவோமா'' என்றான் செல்.

உடனே அவருக்கு போன் போட்டால், ''ஏலகிரியில இருக்கேன். நாளைக்கு பகல்ல ஃப்ரீ. வர்றதுன்னா வாங்கன்னு''  தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸின் அட்ரஸைச் சொல்லி பட்டென கட் செய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாமி வரம் கொடுத்த சந்தோஷத்துலயே ஏலகிரி போய்ச் சேர்ந்தோம். ''வாங்கய்யா கன்னு, செல்லு...'' என்று கெஸ்ட் ஹவுஸின் வாசலிலேயே சாமி வரவேற்றார். சும்மா சொல்லக் கூடாது சாமி ரசனைக்காரர்தான். எல்லா ஊரிலும் கெஸ்ட் ஹவுஸ், ஆட்கள் என எல்லாவித வசதியும் வைத்துள்ளார். கொஞ்சம் வெயில் அடிச்சாலும் வசதியா இயற்கைச் சூழலிலேயே கூலாகிக்கொள்கின்றார் என்று நினைத்துக்கொண்டே சாப்பிட்டோம்.

''என்ன இந்த வருஷம் பட்ஜெட் எப்படி இருக்கும்?'' என்று சாமியே ஆரம்பித்தார்.

''ஒண்ணுமே புரியல சாமி... எலெக்ஷனுக்கு முந்தின பட்ஜெட் இது. பொருளாதாரம் வேற டல்லா இருக்கு. நம்ம ஊருக்காரருதான் நிதி மந்திரியா இருக்காரு. அதனால எந்த டைரக்ஷனிலேயும் யோசிக்க முடியல சாமி'' என்றான் செல்.

சாப்பிட்டு முடித்து ஹாலுக்கு வந்தவுடன் ஐபேடை எடுத்து கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்து கொண்டேயிருந்தார் சாமி. ''சரி, இப்ப கேளு'' என்று ஆரம்பித்தார் சாமி.

''பட்ஜெட் கிட்ட வந்துருச்சு சாமி. சந்தை வேற தாறுமாறா திடீருன்னு இறங்கிடுச்சு. என்ன பண்றதுன்னே புரியலை. உங்க வியூ என்ன சாமி'' என்றேன்.

பட்ஜெட் : பலன் தரும் பங்குகள் !

''இதுக்கு முந்தின பல வருஷத்திய பட்ஜெட்களை ஆராய்ந்தா... எலெக்ஷனுக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி போடற பட்ஜெட்டிலதான் ரெகுலர் பட்ஜெட் செலவுகள் கொஞ்சம் தூக்கலாச் செய்யப்பட்டிருக்குது. ஆனா, எலெக்ஷன் வருஷத்துல டெபிசிட் எப்பவுமே கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருந்திருக்கு. இது எதைக் காண்பிக்குதுன்னா, செலவுகள் நிறைய செய்யப்பட்டிருக்குங்கிறதைக் காண்பிக்குது. ஃபிஸ்கல் டெபிசிட்டை கட்டுக்குள்ளே வச்சேயாகணுமின்னு நிதி அமைச்சர் நினைக்கிறாருன்னு சொல்றாங்க.  பொதுஜனங்களுக்குப் பெரிய அளவில உதவியா இருக்கற பட்ஜெட் போடணுமின்னா இது சாத்தியமில்லாத விஷயம்'' என்றார்.

''என்ன சாமி நாங்களே குழம்பிப்போய் உங்களைப் பார்க்க வந்தா, நீங்களும் குழப்புற மாதிரியே பேசுறீங்க'' என்றோம் கோரஸாய்! ''தெளிவாச் சொன்னா குழப்பமாத்தான் இருக்கும். அப்ப ஒரு காரியம் பண்ணு... உனக்கு வேண்டியதைக் கேள்வியா கேளு. நான் பட்டு பட்டுன்னு பதில் சொல்றேன்'' என்றார் சாமி.  

கேள்விகளை ஆரம்பித்தோம்!

''பட்ஜெட் எப்படிப்பட்டதாய் இருக்கும் சாமி?''

''ட்ரீம் பட்ஜெட் ரேஞ்சுக்கு இல்லா விட்டாலும், ட்ரீம் பட்ஜெட் மாதிரி இருக்கும்'' என்றார்.

''யாரோட ட்ரீம் சாமி?''

''ஆளுறவங்களுக்கு, அடுத்து ஆட்சிக்கு வரணுமுன்னு ட்ரீம். பாமரனுக்கு, அரசாங்கம் என்னை எப்போதும் கவனிக்கணும்ங்கறது ட்ரீம். அனலிஸ்ட்களுக்கு அரசாங்கம் பட்ஜெட் டெபிசிட்டை கன்ட்ரோல்ல வச்சுருக்கணுமிங்கிறது ட்ரீம். தொழில் பண்றவங்க நமக்கு டாக்ஸ் அதிகம் வரப்படாதுன்னு நினைக்குற ட்ரீம்'' என்றார் சாமி.

''இதுல எல்லா ட்ரீமையும் நனவாக்குறது சாத்தியமா சாமி?'' என்றான் செல்.

''எல்லோருக்கும் கனவு நனவா காது. எல்லா தரப்பினருக்கும் கனவு பட்ஜெட்டா தெரியுதாங்கறதுதான் மேட்டர். மக்கள் நலத் திட்டங்கள் கொண்டதாக இருக்கும், ஃபிஸ்கல் டெபிசிட்டை கன்ட்ரோல் பண்ணதாத் தெரியும். இப்படி இருந்தாலே ட்ரீம் பட்ஜெட்தான்'' என்றார் சாமி.

''முக்கியமா நீங்க என்னென்ன விஷயங்கள் பட்ஜெட்டுல வரும்னு எதிர்பாக்கறீங்க சாமி?'' என்றேன்.

''டைல்யூட் செய்யப்பட்ட ஃபுட் செக்யூரிட்டி பில், ரொம்பவே சிக்கல் இல்லாத ஜிஎஸ்டி, மானியங்களை நேரடியா மக்கள் கணக்குக்கே கொடுக்கற திட்டத்தை முழுமையா விரிவாக்குறதுங்கறதைப் போன்ற சில விஷயங்களை எதிர்பார்க்கலாம்'' என்றார் சாமி.

பட்ஜெட் : பலன் தரும் பங்குகள் !

''சாமி, சூப்பர் ரிச் டாக்ஸ் வந்துருமா?'' என்று கேட்டான் செல்.

''சூப்பர் ரிச் டாக்ஸ் எந்த அளவு நேரடி பலனை பொருளாதாரத்திற்கு கொடுக்குமுன்னு கணிக்கறதுல கஷ்டமிருக்கறதால இது வர வாய்ப்பில்லை'' என்றார் சாமி.

இவருக்கும் டாக்ஸ் வருமுங்கறதால அப்படி சொல்றாரோ என்று நினைத்தேன். என் மைன்ட் வாய்ஸை கேட்ச் செய்த சாமி, ''நான் இதைப்பத்தியெல்லாம் கவலைப்படுறதில்லை. டாக்ஸ் கட்டுனது போகத்தான் என் வருமான முங்கறதுல தெளிவா இருக்கேன். ஆனா, சூப்பர் ரிச் கான்செப்ட் ரொம்பவே குழப்பத்தை ஏற்படுத்திடும். அதனால கவர்மென்ட் கொஞ்சம் தயங்க வாய்ப்பிருக்கு. அதேசமயம், ஒரு லெவலுக்கு மேல வருமானம் இருக்கற ஆளுக்கு ஒரு மைனர் சர்-சார்ஜ் போட்டு மேட்டரை முடிக்க வாய்ப்பிருக்கு'' என்றார்.

''சந்தையில என்னென்ன செக்டாருக்கு நன்மை தீமைகளை எதிர்பார்க்கிறீங்க?'' என்றான் செல்.

''குரூட் ஆயிலுக்கு 5% கஸ்டம்ஸ் டூட்டி வரலாம். இதனால் ஆயில் செக்டாருக்கு சிறிய பாதிப்பு இருக்கும். பி.எஸ்.யூ. ஆயில் கம்பெனி களில டிஸ்இன்வெஸ்ட்மென்ட் இருக்க வாய்ப்புள்ளதால இந்த செக்டாருக்கு மொத்தமா நல்லது எனச் சொல்லலாம். எஃப்.எம்.சி.ஜி.-யில பல பொருட்களுக்கு வரிவிலக்கு விலக்கப்பட வாய்ப்பிருப்பதால் நெகட்டிவ்வா இருக்க வாய்ப்பு இருக்குது.   ஜிஎஸ்டி அமலுக்குக் கொண்டுவர திட்டம் வெளியிடப்பட்டா ரீடெயில் செக்டாருக்கு அது கொஞ்சம் பாசிட்டிவ்வா இருக்கும். டைட்டான், டி.பி.இசட், ஷாப்பர்ஸ் ஸ்டாப், அர்விந்த் போன்ற கம்பெனிகள் இதனால பலன் பெறலாம். அரசுடைமை வங்கிகளுக்குப் புதிதாய் முதலீட்டுக்குப் பணம் ஒதுக்கப்படலாம். எஸ்.பி.ஐ-யும் பஞ்சாப் நேஷனல் பேங்கும் பலனடைய வாய்ப்பிருக்கு. பவர் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிஸ்ட்ரிப்யூஷன் கம்பெனிகள் சைனாவிலிருந்து வர்ற போட்டியால கஷ்டப்படுது. இதனால இந்த கேப்பிட்டல் கூட்ஸ் இறக்குமதிக்கு டூட்டி போட்டாலும் போடப்படலாம். இதனால கே.இ.சி இன்டர்நேஷனல் பலன் பெறும். சிமென்டிற்கு எக்சைஸ் டூட்டி சிறிதளவு அதிகரிக்கப்படலாம். இதுவும்போக, ரயில்வே பட்ஜெட்டில சிமென்டுக்கு சரக்குக் கட்டணம் அதிகரிக்கப்படலாம். அதனால, சிமென்ட் கம்பெனிகளுக்குக் கொஞ்சம் கெட்டகாலம்தான். இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டுகளுக்கு வருமான வரி விலக்கு கொண்டுவர்றதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால, முதலீடு இந்தத் துறையில் அதிகரிக்கும். பப்ளிக்-பிரைவேட்- பார்ட்னர்ஷிப் சுளுவா செய்யறதுக்கு உதவுறது குறித்த பல்வேறு திட்ட மாறுதல்கள் வெளிவரலாம். இதுவந்தா ஐ.ஆர்.பி. இன்ஃப்ரா, ரிலையன்ஸ் இன்ஃப்ராவை வாட்ச் பண்ணுங்க.

போன பட்ஜெட்டுல பவர் செக்டார் உபயோகிப்பாளர்களுக்குக் கொண்டுவந்த நேச்சுரல் கேஸ் கஸ்டம்ஸ் டூட்டி விலக்கு இந்த பட்ஜெட்டுல எல்லா உபயோகிப்பாளருக்கும் விரிவாக்கப்படலாம். இதனால, பெட்ரொநெட் எல்.என்.ஜி பலனடைய வாய்ப்பிருக்கு.  வாங்கக்கூடிய விலை வீடுகள் திட்டத்திற்கு இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தகுதி வழங்கப்படலாம். இதனால பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ், ஷோபா டெவலப்பர்ஸ் பலனடையலாம். ஆட்டோ மொபைல் செக்டாருல எலெக்ட்ரிக் வண்டி களுக்கு ஏதாவது ஊக்கம் அளிக்கிற விஷயங்கள் வழங்கப்படலாம். டெலிகாம், பார்மா, மெட்டல், மைனிங், ஐ.டி. போன்ற துறைகளுக்குச் சாதகமும் இல்லாம பாதகமும் இல்லாம பட்ஜெட் இருக்கக்கூடும்'' என்று ஒரேமூச்சாகச் சொல்லி முடித்தார் சாமி.

''வேற ஏதாவது விஷயங்கள் உங்க அனுமானத்துல இருக்குதா சாமி?'' என்றேன்.

வேறென்ன... இன்ஹெரிட்டன் ஸ்டாக்ஸ், வெல்த் டாக்ஸ், கமாடிட்டீஸ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ்ன்னு இவற்றில் ஒண்ணு ரெண்டு நடைமுறைக்கு வரலாம். தங்கம் சம்பந்தமா ஒரு ஸ்கீம் அறிவிக்கப்படலாம்'' என்றார்.

''என்னைய மாதிரி டிரேடருக்கு ஏதும் வாய்ப்பிருக்கா சாமி?'' என்றான் செல்.

'எஸ்.டி.டி, ஷார்ட் டேர்ம் கேப்பிட்டல் கெயின், இதுல ஒண்ணு நிச்சயமா நடந்துட வாய்ப்பிருக்குது. ராஜீவ் காந்தி ஈக்விட்டி ஸ்கீம்ல கூட சிறிய மாறுதல்கள் வரலாம்'' என்று சொன்னார் சாமி. பேசி முடித்ததும்  விடை பெற்றோம். ''ஞாயித்துக்கிழமை சென்னைக்கு வந்துடுவேன். பட்ஜெட்டை பார்த்துட்டு நாம சந்திப்போம்'' என்று விடைகொடுத்தார் சாமி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism