நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஐ.டி.சி, அதானி போர்ட்ஸ், கனரா பேங்க்... ரிசல்ட் எப்படி..?

காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

நடப்பு நிதியாண்டுக்கான சில நிறுவனங் களின் இரண்டாம் காலாண்டு முடிவு களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ஐ.டி.சி (ITC)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 13.17% உயர்ந்து ரூ.13,553 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 14.38% உயர்ந்து ரூ.3,097 கோடியாக உள்ளது.

சிகரெட் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான குழுவை மத்திய அரசு நியமித்தது தொடர்பான செய்தி வந்தவுடன் இந்த நிறுவனப் பங்குகள் கடந்த இரு வாரங்களில் 15% அளவுக்கு சரிந்தன. என்றாலும், இந்த நிறுவனப் பங்குகள் வரும் காலத்தில் 30% வரை ஏற்றம் வரும் என்று பல பங்குத் தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.

டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரி (Dr Reddys Laboratory)

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 30% அதிகரித்து, ரூ.992 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 18% அதிகரித்து ரூ.5,763 கோடியாக உள்ளது. சென்ற ஜூன் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு, இந்த நிறுவன பங்குகள் அதன் அதிகபட்ச நிலையிலிருந்து 20% அளவுக்கு சரிந்துள்ளது. தற்போது பல சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளை விட சிறப்பான காலாண்டு முடிவுகளை நிறுவனம் வழங்கியுள்ளதால், வரும் காலத்தில் இந்த நிறுவன பங்குகள் விலை அதிகரிக்கும் எனப் பங்குத் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கனரா பேங்க் (Canara Bank)

இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 0.36% குறைந்து ரூ.6,273 கோடியாக உள்ளது. இந்த வங்கியின் நிகர லாபம் 199.86% அதிகரித்து ரூ.1,322.61 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் இரு மடங்குக்கு மேல் வருடாந்தர அடிப்படையில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் தொடர்ந்து நல்ல லாபத்தை ஈட்டி வருவதால், கணிசமான அளவு அதன் பங்கு விலை அதிகரித்துள்ளது.

ஐ.டி.சி, அதானி போர்ட்ஸ், கனரா பேங்க்... ரிசல்ட் எப்படி..?

பந்தன் பேங்க் (Bandhan Bank)

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்ட நமது நாட்டின் ஐந்தாவது தனியார் துறை சார்ந்த பெரிய வங்கி இது. இந்த வங்கியின் நிகர வட்டி வருமானம் 0.6% அதிகரித்து, ரூ.1,935.4 கோடியாக உள்ளது. ஆனால், அந்த வங்கி சென்ற செப்டம்பர் காலாண்டில் ரூ.3,008.6 கோடி நஷ்டம் அடைந்துள்ளது. வாராக்கடன் உயர்ந்துள்ளதால் ரூ.5,500 கோடி அதற்காக ஒதுக்கியது நஷ்டத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது. என்றாலும், வங்கி கடந்த இரு மாதங்களாக 130% அளவுக்குக் கடன்களைத் திரும்பப் பெற்று வருவதால், இன்னும் மூன்று மாதங்களில் பெரும்பாலான வாராக்கடன் தொகை திரும்ப வசூலிக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மேலும், சென்ற செப்டம்பர் காலாண்டில் மிக அதிக அளவில் புதிய கடன்களை வழங்கியுள்ள தால், வழங்கப்பட்ட கடன் 6.6% அளவுக்கு அதிகரித்துள்ளதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதானி போர்ட்ஸ் (Adani Ports)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 21.7% அதிகரித்து ரூ.3,532 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 31.71% குறைந்து ரூ.951.71 கோடியாக உள்ளது. குறிப்பிட்ட வழக்கு விவகாரங்களுக்காக 400 கோடி ரூபாய் வைப்புத்தொகையாக ஒதுக்கி வைத்தது நிறுவனத்தின் லாப விகிதத்தைக் குறைத்துள்ளது. என்றாலும் இந்த ஆண்டின் லாப இலக்கு நிலையை நிறுவனம் எட்டும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எல் & டி (L&T)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 12.05% அதிகரித்து, ரூ.34,772 கோடியாக உள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 67.04% குறைந்து, ரூ.1,819.45 கோடியாக உள்ளது. இந்த நிறுவன பங்கு விலை வரும் காலத்தில் 20% அளவுக்கு உயரும் என பல பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 22.45% அதிகரித்து, ரூ.8,762 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 70.85% அதிகரித்து ரூ. 2,039 கோடியாக உள்ளது.

இருசக்கர வாகன விலை குறைந்தபட்சம் ரூ.3,000 வரை சென்ற காலாண்டில் அதிகரித்து உள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாகனங்களின் அளவும் கணிசமாக உயர்ந்து வருவது நிறுவனத்தின் லாப விகிதத்தை உயர்த்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

டைட்டன் (Titan)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப் படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 64.57% அதிகரித்து ரூ.7,493 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 265.14% விலை அதிகரித்து ரூ.639 கோடியாக உள்ளது. விற்பனை அளவு கடந்த ஐந்து ஆண்டுகளில் உச்சபட்ச நிலையில் பதிவாகி உள்ளது நோய்த்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தை நிறுவனம் எட்டியுள்ளது என்பதைக் காட்டுவதாக அமைந் துள்ளது.

லூபின் (Lupin)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் 6.68% அதிகரித்து, ரூ.4,091 கோடியாக உள்ளது. சென்ற காலாண்டில் நிறுவனம் ரூ.1,094 கோடியை இழப்பாகச் சந்தித்துள்ளது. அமெரிக்க சந்தையில் பல சட்ட பிரச்னை களை நிறுவனம் சந்தித்து வருகிறது. அதன் காரணமாக ரூ.1,880 கோடியைச் செலவு செய்ததால் நிறுவனம் நஷ்டத்தைச் சந்திக்கக் காரணமாக அமைந்தது. என்றாலும், வழக்கு விவகாரங்களில் இருந்து மீண்டுவருவது பாசிட்டிவ் அம்சமாக சந்தையில் பார்க்கப்படுகிறது.

அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 144.83% அதிகரித்து ரூ.13,218 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர லாபம் 41.38% குறைந்து ரூ. 214.41 கோடியாக உள்ளது. இந்த நிறுவனம் மும்பை டிராவல் ரீடெய்ல் மற்றும் பிளமிங்கோ நிறுவனங்களுடன் கூட்டு உடன்படிக்கையை சென்றவாரம் ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏர்போர்ட் மற்றும் சீபோர்ட்டுகளில் வரி இல்லாக் கடைகள் அமைக்க வாய்ப்புள்ளது. இது, நிறுவனத்துக்கு வருங்காலத்தில் நல்ல வருமானத்தை வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

செயில் (SAIL)

இந்த நிறுவனத்தின் லாபம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 10 மடங்கு உயர்ந்து ரூ.4,338 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.27,007 கோடியாக உள்ளது. சென்ற ஒரு வருட காலத்தில் இந்த நிறுவனம் ரூ.13,000 கோடி அளவுக்குக் கடன்களைத் திரும்ப செலுத்தியுள்ளது. மேலும், ஒரு பங்குக்கு ரூ.4 டிவிடெண்டாக வழங்கவுள்ளது. மெட்டல் துறை சார்ந்த நிறுவனங்களின் லாப விகிதம் தொடர்ந்து அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.ஐ லைஃப் இன்ஷூரன்ஸ் (SBI Life Insurance)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் வருடாந்தர அடிப்படையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் 22.87% அதிகரித்து ரூ.374.88 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் லாபம் 17.72% குறைந்து ரூ.246.62 கோடியாக உள்ளது. கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை காரணமாக அதிக க்ளெய்ம் செட்டில் செய்ததால் லாப விகிதம் குறைந்துள்ளது. என்றாலும், காப்பீட்டுத் துறை இனி அதிக வளர்ச்சி தரும் என்பதால், இந்த நிறுவனப் பங்குகள் வருங்காலத்தில் 20% வரை அதிகரிக்கும் என்று பல பங்குச் சந்தை தரகு நிறுவனங்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

வீல்ஸ் இந்தியா (Wheels India)

இந்த நிறுவனத்தின் நிகர வருமானம் சென்ற செப்டம்பர் காலாண்டில் வருடாந்தர அடிப்படையில் 186% உயர்ந்து, ரூ.21.2 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் நிகர வருமானம் 78% உயர்ந்து ரூ.911.2 கோடியாக உள்ளது.

தொகுப்பு: பிரமேஷ்.எஸ்