Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

Published:Updated:

பங்குச் சந்தை

##~##

சந்தையில் சரிவு இருந்தாலும், இந்த வாரமும் எந்தப் பங்குகளும் விலை குறைந்து சராசரி ஆகவில்லை. அதேசமயம், எந்தப் பங்கும் உயர்ந்தும் நமது இலக்கு விலையை அடையவில்லை. இப்போதைக்கு நமது போர்ட்ஃபோலியோவில் 17 பங்குகள் இருக்கிறது. இன்னும் மூன்று பங்குகளில் நாம் முதலீடு செய்ய முடியும் என்றாலும், வரும் வாரத்தில் ரயில்வே பட்ஜெட், எகனாமிக் சர்வே, நிதி பட்ஜெட் என பல செய்திகள் சந்தையில் இருக்கும் என்பதால், சந்தையில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். பட்ஜெட் காரணமாக நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகள் சராசரி ஆகலாம் அல்லது லாபத்துடன் வெளியேறலாம். அதனால், பட்ஜெட் வெளியாகி சந்தை எதாவது ஓர் இடத்தில் செட்டில் ஆன பிறகு புதிய முதலீடுகளைப் பற்றி யோசிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

புதிய வங்கிகளுக்கான விதிமுறையினை ரிசர்வ் வங்கி வெளியிட்டதால், நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்கு நல்ல ஏற்றம் பெறக்கூடும்.

சந்தை எப்படி?

ஏற்கெனவே பலமுறை சொன்னதுபோல சந்தை 5820 - 5800 என்ற என்ற புள்ளியைச் சந்திக்கும் பட்சத்தில், சந்தை சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும், கியூ.இ.-3யை(quantitative easing3) நிறுத்தலாமா

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

அல்லது குறைக்கலாமா என்பது குறித்த முக்கியமான முடிவை அமெரிக்க அரசாங்கம் மார்ச் 19, 20-ம் தேதிகளில் எடுக்க இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கும் பணப் புழக்கம்தான் சந்தையை உயர்த்துகிறது. ஒருவேளை அப்படி நடக்கும்பட்சத்தில் பணப் புழக்கம் குறைந்து கமாடிட்டிகளின் விலை குறையும். சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி பட்டியலில் 25 சதவிகிதத்துக்கு மேல் கமாடிட்டி பங்குகள்தான் இருக்கிறது. இதற்கான சூசக அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தபோதே பல கமாடிட்டி பங்குகள் விலை குறைந்தன என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.

பட்ஜெட் முடிந்த பிறகு நாம் முதலீடு செய்வதைப் பற்றி யோசிக்கலாம் என்றாலும், உலகச் சூழ்நிலைகளும் முக்கியம் என்பதற்காகச் சொன்னேன். போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

10,393.60

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism