Published:Updated:

டிரேடர்ஸ் பக்கங்கள்

நிஃப்டி டெக்னிக்கல் பார்வை: ஏற்ற இறக்க வாரம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

டிரெண்ட் திடீரென்று மாறும்போது டெக்னிக்கல்கள் அவ்வப்போது ஃபெயில் ஆகவே செய்யும் என்றும், எனவே டெக்னிக்கல் கணிப்புகளைக் கொஞ்சம் கவனத்துடன் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும் என்றும் சொல்லியிருந்தோம்.

வியாழக்கிழமையைத் தவிர மற்ற நான்கு நாட்களிலும் நிஃப்டி இறக்கத்திலேயே இருந்தது. வார இறுதியில் நிஃப்டி வாராந்திர ரீதியாக 73 பாயின்ட் இறக்கத்தில் முடிவடைந்தது. ஆவரேஜ் வால்யூமும் நன்றாகவே இருந்தது.

வரும் வாரத்தில் முக்கிய டேட்டாக்களும் நிகழ்வு களும் வெளிவர உள்ளது. செவ்வாயன்று ரிசர்வ் வங்கியின் பாலிசி முடிவுகள் இருக்கின்றது. இந்த நிகழ்வுக்கு ஏற்றாற் போலவே சந்தையின் போக்கு இருக்கும். அவ்வப்போது வரும் திடீர் வீக்னெஸைத் தவிர, டெக்னிக்கலாக சந்தை எந்த நிமிடமும் மீண்டும் மேல் நோக்கிச் சென்றுவிடலாம் என்ற நிலை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. எனவேதான், ஷார்ட் சைடு வியாபாரத்தை ஹைரிஸ்க் டிரேடர்கள் மட்டுமே செய்யவேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகின்றோம்.

வாலட்டைலிட்டி அதிகம் இருக்கக்கூடிய வாய்ப்பு இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றது. ரிசர்வ் வங்கியின் முடிவு சந்தையை ஊக்குவிக்கும் வகையில் இருந்தாலும்கூட எக்ஸ்பைரியின்போது பெரிய அளவில் இறக்கம் வந்துவிடலாம் என்பதைக் கட்டியம் கூறும் வகையில எஃப் -   ஓ செக்மென்டில் நிறைய விஷயங்கள் நடந்துவருவதை மறந்துவிடாமல் கவனத்துடன் செயல்படுங்கள்.

டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
டிரேடர்ஸ் பக்கங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு