Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு: வா.கார்த்திகேயன்.

பிரீமியம் ஸ்டோரி

பங்குச் சந்தை

##~##

ஏற்ற இறக்கமாக இருக்கும் சந்தையைப் பற்றி எதுவும் சொல்லத் தேவை இல்லை. சந்தையின் போக்கு காரணமாக எந்தப் பங்கும் நமது போர்ட்ஃபோலியோவைவிட்டு வெளியேறவில்லை. அதேசமயம், ஜி.டி.எல். மற்றும் டி.வி.எஸ். மோட்டார் ஆகிய பங்குகள் சராசரி அடைந்தது.

ஒரு விளக்கம்...

போர்ட்ஃபோலியோ ஆரம்பித்து பல மாதங்கள் கடந்துவிட்டன. இன்னும் பெரிய லாபத்தைப் பார்க்க முடியவில்லையே என்று மெயில் வழியாக பல வாசகர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவர் களுக்கு என் பதில்.  

முதல் விஷயம், கடந்த ஐந்து வருடங்களாக சந்தை அப்படியே இருப்பதாகத் தோன்றும். ஆனால், உண்மையில் முக்கிய குறியீடுகள் தான் அப்படியே இருக்கிறதே தவிர, பல பங்குகள் மிக கடுமையாக விலை சரிவைச் சந்தித்திருக்கின்றன. குறியீடுகள் அப்படியே இருக்கக் காரணம், அந்நிய முதலீடுகள்தான். இந்த முதலீடுகள் முக்கியமான பங்குகளில்தான் வருகிறது. மேலும், வர்த்தகமாகிவரும் சுமார் 6,000 பங்கு களில் சுமார் 60 பங்குகள் மட்டுமே கடந்த 2 வருடங்களில் லாபத்தைத் தந்திருக்கிறது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

இன்னொரு விஷயம், கரடிச் சந்தை இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தச் சூழ்நிலை யிலும்கூட ஒவ்வொருமுறையும் ஒரு சிறிய ஏற்றம் வரும்போது நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகள் லாபத்துடன் வெளியேறி இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். போர்ட்ஃபோலியோ ஆரம்பித்த 18 மாதங் களில் 29 பங்குகள் லாபத்துடன் வெளியேறி இருக்கிறது.

இதுவே கடைசி கரெக்ஷன்!

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

சந்தை இப்போது கரடியின் பிடியில் இருந்தாலும், இப்போது நடக்கக்கூடியதுதான் கடைசி கரெக்ஷனாக இருக்கும். அதாவது, இன்னும் சில மாதங் களிலோ அல்லது எப்போது தேர்தல் அறிவிக்கப்படுகிறதோ அதுவரைக்கும்தான் சந்தையில் கரெக்ஷன் இருக்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் சந்தையில் நல்ல மாற்றங்கள் இருக்கும். இல்லை எனில், ஏற்கெனவே சொன்னதுபோல சந்தை 6130 புள்ளிகளுக்கு மேலே எப்போது முடிவடைகிறதோ, அப்போதிலிருந்து ஏற்றம் தொடரும். அதேசமயம், பியரிஷ் கார்ட்லி பேட்டர்னும் தொடர்கிறது.

வரும் வாரம் எப்படி?

வரும் வாரத்தில் பல முக்கியமான முடிவுகள் வர இருக்கிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அறிவிப்பு டேட்டாக்கள் வரக்கூடும். மேலும், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிக்கப்பட இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, சி.ஆர்.ஆர். மற்றும் ரெபோ விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றே தோன்று கிறது.

ஒரு சிறிய ஏற்றம் ஆரம்பித்து விட்டால் அதன்பிறகு நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகள் மிக வேகமாக லாபத்தை அடைய வாய்ப்பு இருக்கிறது. அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும். அதேசமயம், ஏற்றத்துக்கு முந்தைய கரெக்ஷனில் நாம் இருக்கிறோம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.

போர்ட்ஃபோலியோவின் நிகர லாபம்: ரூ. 6,749.50

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு