நிஃப்டி டெக்னிக்கல் பார்வை:
##~## |
ரிசர்வ் வங்கியின் முடிவு சந்தையை ஊக்குவிக்கும் வகையில் இருந்தாலும்கூட எக்ஸ்பைரியின்போது பெரிய அளவில் இறக்கம் வந்துவிடலாம் என்பதைக் கட்டியம் கூறும் வகையில் எஃப் அண்ட் ஓ செக்மென்டில் நிறைய விஷயங்கள் நடந்துவருவதை மறந்துவிடாமல் கவனத்துடன் செயல்படுங்கள் என்று சொல்லியிருந்தோம்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
வார இறுதியில் வாராந்திர அளவில் 221 பாயின்ட்கள் இறக்கத்தில் நிஃப்டி முடிவடைந் தது. ஆனாலும் இன்ட்ரா-டே வாலட்டைலிட்டி மிகவும் அதிகமாகவே இருந்துவந்தது. இந்த வாலட்டைலிட்டி குறை
யும் வரை பழகுநர்களும், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களும் டிரேடிங்கை தவிர்ப்பது நல்லது.
நிஃப்டி 5500-ஐ நோக்கி பயணிப்பதைப்போல் தோற்றத்தை தர ஆரம்பித் துள்ளது. அரசியல் சூழலும், உலகப் பொருளாதாரச் சூழலும் சிறிதளவு மாறுவதைப்போல் தெரிந்தாலும் ஒரு வேகமான ரிவர்ஸல் எந்த நேரமும் வந்து விடலாம். செய்திகளின் மீது கவனம் வைத்து மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும்.
டெக்னிக்கல்கள் அடிக்கடி தோற்றுப்போவதைப் போன்ற சூழல்கள் வந்துவந்து போகக்கூடிய நேரமிது. நல்ல டிரேடருக்கு அழகு தன்னுடைய முதலீட்டைக் காப்பாற்றிக்கொள்வது. முதலீட்டை காப்பாற்றிக் கொள்ள வரும் வாரத்தின் முதல் இரண்டு நாட்களில் பெரும்பான்மையானவர்கள் டிரேடிங்கைத் தவிர்ப்பதே நல்லது.

கண்ணிமைக்கும் முன் வந்துபோகும் ரிவர்ஸல்கள் அனுபவமிக்க டிரேடர் களைக்கூட திக்குமுக்காடச் செய்துவிடும். இன்னும் 100 பாயின்ட் வரை இறக்கம் என்பது நடக்கக் காத்திருக்கும் விஷயம் போலவே தெரிகின் றது. எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.
எக்ஸ்பைரி தினத்தில் மார்க்கெட் வெகுவாக கீழே இறங்க வாய்ப்பிருப்பதைப் போல் தோன்றுவதால் புதனன்று ஓவர்நைட் பொசிஷன் எதுவும் எடுக்காதீர்கள்.

