Published:Updated:

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு:- வா.கார்த்திகேயன்.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

தொகுப்பு:- வா.கார்த்திகேயன்.

Published:Updated:

பங்குச் சந்தை 

##~##

நான் பலமுறை சொன்னதுபோல 'பியரிஷ் கார்ட்லி பேட்டர்ன்’ உருவாகி இருக்கிறது. அதனால் சந்தையில் ஒரு சரிவு உண்டாகி இருக்கிறது. கடந்த 83 நாட்களில் இல்லாத அளவுக்கு குறைந்தபட்ச புள்ளியில் சந்தை முடிவடைந்திருக்கிறது. மேலும், 200 நாள் மூவிவ் ஆவரேஜ் புள்ளியான 5620 புள்ளிகளுக்கு அருகே நிஃப்டி முடிவடைந்திருக்கிறது. இந்த நிலையை உடைத்து இரண்டு, மூன்று நாட்கள் முடியும்பட்சத்தில் சந்தை 5200 புள்ளிகள் வரைகூட செல்லக்கூடும். இதுமட்டுமல்லாமல், பேங்க் நிஃப்டியும் 200 நாள் மூவிவ் ஆவரேஜ் புள்ளியை உடைத்துக்கொண்டு கீழே வர்த்தகமாகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க. மத்திய அரசில் இருந்து வெளியேறி இருப்பது, மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இதன்காரணமாக மத்திய அரசு செய்யும் சீர்திருத்தங்களில் ஏதேனும் பிரச்னை ஏற்படலாம். உதாரணத்துக்கு, டீசல் விலையை ஒவ்வொரு மாதமும் உயர்த்தும் முடிவின் மீது, இப்போது அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகள் ஏதேனும் பிரச்னை செய்ய லாம். அப்போது அந்த முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பிருக்கிறது. இந்த அச்சம் காரணமாகவே எண்ணெய் நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து வருகிறது. மேலும், இரும்புத் தாதுகளின் விலையும் குறைந்துகொண்டே வருகிறது. சர்வதேச அளவில் உலோகங்களின் தேவை குறைந்துவிட்டதால் மெட்டல் பங்குகளின் விலை குறைந்தபடி இருக்கிறது.

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!

போர்ட்ஃபோலியோவின் இப்போதைய நிலை:

இந்த வாரம், நமது போர்ட்ஃபோலியோவின் எந்தப் பங்கும் இலக்கு விலையையும் அடையவில்லை;  சந்தை சரிந்தாலும், எந்தப் பங்கும் சராசரியும் அடையவில்லை. சந்தை சரிவடைவதற்கான சூழ்நிலை கள் இருக்கும் பட்சத்தில், நம்மிடம் இன்னும் 30 சதவிகிதத் தொகை இருக்கிறது. சந்தை சரிவடையும்போது, இந்தத் தொகை முதலீடு செய்யப்படும். புதிய முதலீடுகளைப் பற்றி இப்போதைக்கு யோசிக்க வேண்டாம். சந்தையைத் தொடர்ந்து கவனித்துவரவும். சராசரி செய்யத் தவறாதீர்கள்.

போர்ட்ஃபோலியோவின் தற்போதைய நிலவரம்: மைனஸ் ரூ. 1,260.75

உங்களுக்காகவே ஒரு ஷேர் போர்ட்ஃபோலியோ!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism